தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 08, 2012

பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!

இன்று லக மகளிர் தினம்.

இத்தினத்தில் அக்காலப் பெண்கள் நிலை பற்றிச் சிறிது பார்ப்பது இயைபுடையதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

என் அம்மாவுக்குத் திருமணம் ஆகும்போது வயது பதினாலு கூட நிறைய வில்லை.ஒன்பதாம் வகுப்புப் படித்த ஒரு சிறு பெண்ணுக்குக் கல்லூரிப் பேராசிரியரோடு திருமணம்.தன் வயதொத்த பெண்களோடு பேசிக் களிக்க வேண்டிய பெண்ணுக்கு ஒரு பெரிய குடும்பத்தில் திருமணம். அவர்கள் வாழ்க்கைப்பட்ட வீட்டில் அவரது கணவருடன், மாமியார், கணவரின் அண்ணா,அவர் மனைவி நான்கு குழந்தைகள்,மச்சினரின் மூத்த தாரத்தின் பையன் ஒருவன்,கணவரின் சகோதரி மகன் ஒருவன் என ஒரு கூட்டுக் குடும்பம்.

அனைவரும்  காலையில் சாப்பிட்ட பின்தான் மாமியாரும் இரு மரும கள்களும் சாப்பிட வேண்டும்.அதற்குள் என் அம்மாவுக்குப் பசி காதை அடைக்கும் சின்னப் பெண்தானே.திருமணம் முடிந்து மகளை அங்கு விட்டுச் செல்லும் போது என் அம்மாவின் தாயார்,அம்மாவின் மாமியாரிடம் கூறியிருந்தார் ”காலையில் குழந்தைகளுக்குப் பழையது போடும் போது அவளுக்கும் போட்டு விடுங்கள்.அவளுக்கு அது பழக்கம்’ என்று.ஆனால் அங்கு பழையது சாப்பிடும் வழக்கமே கிடையாது.மிச்சமான சாதத்தைத் தண்ணீர் ஊற்றிப் பிச்சைக் காரனுக்குப் போடுவார்கள். அக்காலத்தில் ராப்பிச்சை என்று இரவு நேரத்தில்  பிச்சைக்கு வருவார்கள்.அதில் கூட முதலில் வருபவன்”தண்ணி ஊத்தின சோறா.பின்னால ஆள் வருது”என்று சொல்லி வாங்க மறுத்து விடுவானாம்.

காலைச் சாப்பாட்டுக்குப் பின் இரவுதான் சாப்பாடு .அதுவும் கடைசியில்தான், கண்கள் பஞ்சடைத்து விடுமாம்.என்றாவது மாலை டிஃபன் ஏதாவது செய்தாலும் எல்லாரும் சாப்பிட்டுக் கடைசியில் வரும்போது நேரம் ஆகி விடும்.அது மட்டு மன்றிப் பல நாட்களில் சாப்பாட்டில் தேவையான அளவு,பொரியல் முதலியன இல்லாமல் போய்விடும்.

வீட்டில்   மச்சினர்  மாடியில் இருந்தாலும்,.சிறிது சத்தமாகப் பேசினால். உடனே மாமியார் ”மாடியில் விஸ்வநாதன் இருக்கான்” என்று எச்சரிப்பாராம்!  பிற ஆண்களுடன் பெண்கள் பேசுவது என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.

அன்றைய நிலை பற்றி மேலும் ஒரு நிகழ்வு. அம்மாவின் மாமியார் அவரிடம் சொன்ன கதைகளில் ஒன்று.ஒரு வீட்டுக்குத் திருமணம் ஆகி மருமகள் வந்தாள்.அவள் நன்றாக வயலின் வாசிப்பாளாம். அந்த வீட்டுப் பெரியவர் ஒருவர் சொன்னாராம்”ஃபிடிலை முறிச்சு அடுப்பில வை;கரண்டியைக் கையில் கொடு”போதுமா இந்த ஒரு  பதமான ஒரு சோறு?!

பாலிய விவாகத்தைத் தடை செய்யும் சாரதா சட்டம் வந்தபோது ,அவசரமாகத் தங்கள் பெண்களுக்கு மணம் முடித்து வைத்த பெற்றோர் ஏராளமாம். பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம்.பூப்படைந்த பின் சாந்தி முகூர்த்தம்.சிறு வயதிலேயே கணவனைப் பறி கொடுத்து எந்த சுகத்தையும் பெறாமலே கைம்பெண்ணாகக் காலம் கழித்தவர் எத்தனையோ.என் அம்மாவின் சித்திகள் இருவர்.இளம் வயதில் கவனை இழந்தவர்கள். என்ன சுகம் இருந்தது அவர்கள் வாழ்வில்?

 அக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக் கிறார்கள்.என் அம்மா  பள்ளியில் படிக்கும்போது  அவர்கள்வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள். மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச் சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக் கொண்டி ருந்தான். 

ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.

இது ஒரு தொடக்கம்தான்.அதன் பின் காலம் செல்லச் செல்ல மாற்றங்கள் பல வந்து விட்டன.வந்த மாற்றங்களுக்காக மகிழ்ந்து,வரவேண்டிய மாற்றங் களுக்காக உழைக்கும் பொறுப்பு இன்றைய இளைய தலைமுறை யுடையதாகும். இன்னமும் நடக்கும் அநீதிகளுக்காக”நெட்டை மரங்களென நின்று புலம்பும், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாகாது” என்பதை  உணர்ந்து எண்ணங் களைச் செயலாக்கும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.

ஒன்று சொல்வேன்!ஐயா பாரதி!நீ கண்ட கனவுகள் நனவாகி வருகின்றன ஐயா!உன் வார்த்தைகளுடனேயே முடிக்கிறேன்.

”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கியிவ் வையந் தழைக்குமாம்
பூணு  நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்”......(பாரதி)

 இறுதியாக,

பெண்மையைப் போற்றுவோம்.நாம் அறிந்த முதல் பெண்ணான தாயைப் போற்றுவோம்.பெண்மை என்பதே தாய்மைதானே?

“கொட்டும் மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி வீடு வந்தேன்
சட்டென்று அண்ணன் கேட்டான்குடை எடுத்துச் செல்வதற்கென்ன?’
 உடனே அக்கா சொன்னாள்மழை விடும் வரை எங்காவது ஒதுங்கியிருக்கலாம்
உனக்குச் சளி பிடித்தால்தான் புத்தி வரும் இது அப்பாவின்  கோபம்
நனைந்த என் தலையைத் துண்டால் துவட்டியபடி அம்மா சொன்னாள்
சனியன் மழை!என் பையன் வீடு திரும்பும் வரை காத்திருக்கக் கூடாதா?”
அதுதான் அம்மா!அதுதான் தாய்மை!”45 கருத்துகள்:

 1. பதிவுலக பாரதி..சென்னை பித்தன்!!

  பதிலளிநீக்கு
 2. பெண்கள் வெல்கவென்று கூத்திடுவோம்....

  நிச்சயம்...

  நல்ல பகிர்வு ஐயா... இன்னும் நிறைய மாற்றங்கள் வேண்டும்தான்....

  பதிலளிநீக்கு
 3. ஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.////////

  இப்படியான தொடக்கப் புள்ளிகள்தான் பின்னாளில் பெண்களின் சுதந்திரத்துக்கு வித்திட்டது! அழகான பதிவு ஐயா!

  பதிலளிநீக்கு
 4. வித்தியாசமாக சிந்தித்து அக்கால பெண்களின் வாழ்க்கைமுறையினை சொல்லி இருக்குறீர்கள்....இன்றும் சில இடங்களில் எல்லாரும் சாப்பிட்டு பிறகுதான் பெண்கள் சாப்பிடும் நிலை உள்ளது

  பதிலளிநீக்கு
 5. அருமையான உணர்வுகளால் இயல்பாய் பெண் நிலையை குறித்தான பகிர்வு.

  இறுதி வரிகளில் நெகிழ்ந்துவிட்டேன்...

  நன்றி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்! தங்கள் கட்டுரை அந்த காலத்துப் பெண்கள் இருந்த நிலைமையையும், சாரதா சட்டத்தின் மேன்மையையும் உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு
 7. அண்ணே எம்புட்டு கஷ்டப்பட்டு இருக்காங்க...இன்னைக்கும் எத்தன வீட்ல இந்த அடிமைத்தனம் தொடருதோ!

  பதிலளிநீக்கு
 8. எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் இந்த அளவிற்காவது முன்னேறி உள்ளோம் .
  அதை பல வழிகளில் சிறுபிள்ளைதனமாய் வீணடிக்காமல் பெற்ற சுதந்திரத்தைப்
  பேணிக் காப்பது ... மகளே உன் சமத்து .! பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 9. இன்றைய தினத்தில் நல்லதொரு பதிவு ஐயா..நிச்சயம் பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்.நானும் குழந்தை திருமணம் பற்றிய பதிவே இட்டிருக்கிறேன்.நேரமிருந்தால் வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 10. கண்கலங்க வைக்கும் அருமை பதிவு.

  பதிலளிநீக்கு
 11. ////உனக்குச் சளி பிடித்தால்தான் புத்தி வரும்” இது அப்பாவின் கோபம்
  நனைந்த என் தலையைத் துண்டால் துவட்டியபடி அம்மா சொன்னாள்
  “சனியன் மழை!என் பையன் வீடு திரும்பும் வரை காத்திருக்கக் கூடாதா?”
  அதுதான் அம்மா!அதுதான் தாய்மை!”
  ////

  இதுதான் அம்மா அருமையான பதிவு பாஸ்

  பதிலளிநீக்கு
 12. ! சிவகுமார் ! கூறியது...

  //பதிவுலக பாரதி..சென்னை பித்தன்!!//

  என்ன கொடுமை இது சரவணா!
  நன்றி சிவா.

  பதிலளிநீக்கு
 13. நன்றி மதுமதி.அவசியம் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. நெஞ்சை உருக வைத்தீர் முடிவில்!
  அதுதான் அன்னை
  இதுதான் பித்தன்!!!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 15. பெண் நிலையை குறித்தான நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 16. வெல்லட்டும் பெண்மை.விழிப்புணர்வு பெருக்கட்டும் தங்கள் பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 17. பெண்ணின் பெருமை, தாய்மையின் சிறப்பு சொல்லும் மனம் கவர்ந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 18. அற்புதம்!பெண்மையின் பெருமையை அற்புதமாகச் சொல்லி இருக்கிறேர்கள் ஐயா.கடைசியாக நீங்கள் எடுத்துக்காட்டிய கவிதை பிரமாதம்.
  மகளிருக்காக பதிவு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன். நேரம் இருப்பின் எனது பதிவை காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. // சிறு வயதிலேயே கணவனைப் பறி கொடுத்து எந்த சுகத்தையும் பெறாமலே கைம்பெண்ணாகக் காலம் கழித்தவர் எத்தனையோ.//

  உண்மை. எனது பெரியம்மா ஒருவரும் சிறிய வயதில் திருமணமாகி,உடனே கணவனைப் பறிகொடுத்து கைம்பெண்ணாகவே காலம் கழித்தார்கள்.நல்ல வேளை ‘சாரதா சட்டம்’ வந்து இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவைக்கொண்டுவந்தது.

  "அதுதான் அம்மா!அதுதான் தாய்மை!” என்று முத்தாய்ப்பாக முடித்திருக்கிறீர்கள்.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 20. அனுபவத்தால் அறிய வைப்பது தந்தையின் கடமை... அவரையும் நினைவு கூர்ந்தது அருமை

  பதிலளிநீக்கு
 21. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // நெஞ்சை உருக வைத்தீர் முடிவில்!
  அதுதான் அன்னை
  இதுதான் பித்தன்!!!//
  நன்றி புலவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 22. ரெவெரி கூறியது...

  //பெண் நிலையை குறித்தான நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்...//
  நன்றி ரெவெரி

  பதிலளிநீக்கு
 23. FOOD NELLAI கூறியது...

  //வெல்லட்டும் பெண்மை.விழிப்புணர்வு பெருக்கட்டும் தங்கள் பகிர்வு. நன்றி.//
  நன்றி சங்கரலிங்கம்

  பதிலளிநீக்கு
 24. துரைடேனியல் கூறியது...

  // பெண்ணின் பெருமை, தாய்மையின் சிறப்பு சொல்லும் மனம் கவர்ந்த பதிவு.//
  நன்றி துரை டேனியல்

  பதிலளிநீக்கு
 25. T.N.MURALIDHARAN கூறியது...

  //அற்புதம்!பெண்மையின் பெருமையை அற்புதமாகச் சொல்லி இருக்கிறேர்கள் ஐயா.கடைசியாக நீங்கள் எடுத்துக்காட்டிய கவிதை பிரமாதம்.
  மகளிருக்காக பதிவு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன். நேரம் இருப்பின் எனது பதிவை காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.//
  நிச்சயம் படிக்கிறேன் .நன்றி

  பதிலளிநீக்கு
 26. kannan கூறியது...

  // Nice one,Thanks.//
  நன்றி கண்ணன்

  பதிலளிநீக்கு
 27. வே.நடனசபாபதி கூறியது...

  // சிறு வயதிலேயே கணவனைப் பறி கொடுத்து எந்த சுகத்தையும் பெறாமலே கைம்பெண்ணாகக் காலம் கழித்தவர் எத்தனையோ.//

  // உண்மை. எனது பெரியம்மா ஒருவரும் சிறிய வயதில் திருமணமாகி,உடனே கணவனைப் பறிகொடுத்து கைம்பெண்ணாகவே காலம் கழித்தார்கள்.நல்ல வேளை ‘சாரதா சட்டம்’ வந்து இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவைக்கொண்டுவந்தது.

  "அதுதான் அம்மா!அதுதான் தாய்மை!” என்று முத்தாய்ப்பாக முடித்திருக்கிறீர்கள்.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!//

  நன்றி சபாபதி அவர்களே

  பதிலளிநீக்கு
 28. suryajeeva கூறியது...

  //அனுபவத்தால் அறிய வைப்பது தந்தையின் கடமை... அவரையும் நினைவு கூர்ந்தது அருமை//
  நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை தந்துள்ளீர்கள்.நன்றி சூர்ய ஜீவா.

  பதிலளிநீக்கு
 29. நல்ல பகிர்வு சார்.
  இன்னும் மாற வேண்டும். கடைசியில் அம்மா பற்றி சொல்லியுள்ள சம்பவம் மனதை தொட்டது. அம்மா... அம்மா தான்.

  பதிலளிநீக்கு
 30. உங்கள் அம்மாவின் நிலையுடன் என்னால் relate செய்ய முடிகிறது. நன்றாகப் படிக்கக் கூடிய பெண்களைக்கூட படிப்பை நிறுத்தி எங்கேயோ கல்யாணம் செய்து கொடுத்து... எத்தனை கொடுமை! கொடுமையென்று தெரிந்து செய்தார்களா? கடமையென்று தெரிந்து செய்தார்களா! கஷ்டம்!

  ஒரு வகையில் எத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பது நிறைவாக இருக்கிறது. இன்னும் எத்தனை தூரம் போக வேண்டும் என்பதும் மலைப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 31. நூறு விழுக்காடு உண்மை.நன்றி அப்பாதுரை

  பதிலளிநீக்கு
 32. அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்க்ளுக்கு ஏன் படிப்பு தேவை என்று சொல்வார்கள்

  இப்போது எல்லாம் அந்த நிலை மாறி போனாலும் சில இடங்களில் இப்படி நடந்து கொண்டு தான் இருக்கு..
  மிக அருமையான் பகிர்வை பகிர்ந்து இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 33. உங்கள் அம்மாவின் நிலை போல் தான் அந்த காலத்தில் பல அம்மாக்களின் நிலையும்..

  பதிலளிநீக்கு