தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 25, 2011

வலைப்பதிவுப் பணி அவுட்சோர்ஸிங்க்!!

சில நாட்களாக ஒரு எண்ணம்!

பதிவு வேலையை வெளியாரிடம் ஒப்படைத்தால் என்ன?!(outsourcing)

நானும் பதிவே கதி என்று இருக்கக் கூடாது,பதிவும் நல்ல விதமாகத்தொடர்ந்து நடக்க வேண்டும் என்றால்,அவுட்சோர்சிங்க் தான் சிறந்த வழி எனத் தோன்றுகிறது!

எனவே இந்தப் பதிவின் மூலம் இதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறேன்!

விண்ணப்பிவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள்-

1)தமிழ் நன்கு எழுதப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் அனுமதிக்கப் படும்!

2)நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து அவற்றிலிருந்து பதிவுக்கான செய்தியை உள்வாங்கிக் கொள்ளும் திறன்.

3)பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரஸ்யமான விஷயங்களை வெட்டி ஒட்டிப் பதிவு எழுதும் திறமை!

4)மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!

5)திரைப்படப் பாடல்கள் பற்றிய அறிவு,நடிகர்கள் பற்றிக் கிசு கிசுக்கள் தெரிந்துகொள்ளுதல்,திரைப்படம் பார்க்காமலே கூட விமரிசிக்கும் திறமை,இவையெல்லாம் அவசியம்!

6)பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள்,வருகைகள்,திரட்டிகளில் வாக்குகள் வரவழைப்பதற்காக,பல பதிவுகளைத் தொடர்தல்,வாக்களித்தல், பின்னூட்டமிடுதல் ஆகியவை திறம்படச் செய்தல்!முக்கியமாக டெம்ப்ளேட் பின்னுட்டங்கள் இடுதல்!
கீழ்க்கண்டவை வேலை முறைமைகள்---

1)ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.பணியின் தரத்தைப் பொறுத்து வேலை நீட்டிப்பது அமையும்.

2)குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!

3) ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.

4)ஒரு மாதத்துக்கான சராசரி வருகைகள்(ஹிட்ஸ்),குறைந்த பட்சம் 6000 இருக்க வேண்டும்!

5)இந்த வலைப் பதிவின் தரத்தைக்(அப்படியொன்று இருக்கிறதா?!) குறைக்கும் படியான இடுகைகள் வெளி வரக் கூடாது!

6)சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

ஒப்பந்த ஊதியம்விவரங்கள்—

1)முறைமைகள் வழுவாமல் செயல் படும் பட்சத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும், மயிலை,கையேந்தி பவனில்,இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப் படும்!
(யாரப்பா அங்கே முணு முணுக்கறது,ஞாயிறு கையேந்தி பவன் லீவு என்று)

2)வருகைகள் 6000த்துக்கு மேற்படும் மாதங்களில் ஊக்க போனஸாக,ஒரு ஞாயிறன்று,மயிலை சங்கீதா/சரவணபவன்/கற்பகாம்பாள் மெஸ் எங்காவது,இரவு டிஃபன் சாப்பிட்டுக் கொள்ளலாம்!


3)தமிழ் மணம் ராங்கில் 100க்குள் வந்தால்,பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

விண்ணப்பம் ஏதும் அனுப்பாமலே 31-04-2011 அன்று மாலை 5.00 மணிக்கு மரினா, காந்தி சிலைக்கு அருகில் நடக்கும் நேரடி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்! அனைவருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் வழங்கப்படும்!

52 கருத்துகள்:

  1. கட்டுபடி ஆகாது... கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க சார்.. ( போட்டு குடுங்கன்னா வேற மாதிரி புரிஞ்சிகாதீங்க)

    பதிலளிநீக்கு
  2. முத்துசிவா சொன்னது…

    //கட்டுபடி ஆகாது... கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க சார்.. ( போட்டு குடுங்கன்னா வேற மாதிரி புரிஞ்சிகாதீங்க)//
    ஏப்ரல் 31 ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு வந்துடுங்க!நேரில் பேசிக்கலாம்!
    நன்றி முத்துசிவா!

    பதிலளிநீக்கு
  3. செங்கோவி கூறியது...

    //அடி பின்னியிருக்கீங்களே..!//
    >:D .
    நன்றி செங்கோவி !

    பதிலளிநீக்கு
  4. விக்கி உலகம் கூறியது...

    //ஹிஹி!//
    ஹா,ஹா,ஹா!
    நன்றி விக்கி!

    பதிலளிநீக்கு
  5. சென்னை வாசிகளுக்கு மட்டும்தானா? மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க! ஆனா நல்ல ஐடியாவா இருக்கு!

    பதிலளிநீக்கு
  6. //ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.//

    இக்கோரிக்கை நிறைவேற அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு கடிதம் அனுப்புவம்!

    பதிலளிநீக்கு
  7. நம்ம பிளாக்கும் இதற்கு ரெடி...

    எப்படியெல்லாம் கிளம்யிருக்காங்க பாருயா...

    பதிலளிநீக்கு
  8. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    // சென்னை வாசிகளுக்கு மட்டும்தானா? மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க! ஆனா நல்ல ஐடியாவா இருக்கு!//
    சென்னை வாசிகளுக்கு மட்டும்தான் நம்ம ஊதிய விவரங்கள் ஒத்து வரும்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  9. ! சிவகுமார் ! கூறியது...

    //ஒரு பதிவுக்கான குறைந்த பட்ச வாக்குகள்,தமிழ் மணத்தில் எட்டும், இண்ட்லியில் 25உம் நிச்சயம் கிடைக்க வேண்டும்.//

    //இக்கோரிக்கை நிறைவேற அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு கடிதம் அனுப்புவம்!//
    என்ன வேணா செய்யலாம். இலக்குகள் எட்டப் பட வேண்டும்!அவ்வளவே!
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  10. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //நம்ம பிளாக்கும் இதற்கு ரெடி...//
    ஏப்ரல் 31 நேர்முகத்தேர்வுக்கு வந்துடுங்க!சுண்டல் நிச்சயம் உண்டு!

    //எப்படியெல்லாம் கிளம்யிருக்காங்க பாருயா...//
    இனிமே இப்படியெல்லாம் பண்ணினால்தான் என்னால் முடியும்!
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  11. என்னா " கொழந்தே " சவுக்கியமொண்ணோ??

    //குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!//

    இது நம்மால முடியாது சமீ.

    பதிலளிநீக்கு
  12. >>மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!

    hi hi அண்ணன் நம்மளை நேரடியா தாக்கராரே.. மைனஸ் ஓட்ட போட்ரலாமா? ஹி ஹி

    பதிலளிநீக்கு
  13. செங்கோவி கூறியது...

    அடி பின்னியிருக்கீங்களே..!


    ஆமா.. வலி எனக்கு ஜாலி உமக்கா? ஹி ஹி இருங்க அங்கேயும் வர்றேன் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  14. கக்கு - மாணிக்கம் சொன்னது…

    //என்னா " கொழந்தே " சவுக்கியமொண்ணோ??//
    பேரைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டீங்க!

    //குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 30 பதிவுகள் எழுதப்பட வேண்டும்!//

    //இது நம்மால முடியாது சமீ.//
    இது சென்னை வாசிகளுக்கு மட்டுமே!
    நன்றி கக்கு!

    பதிலளிநீக்கு
  15. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>மொக்கைப் பதிவாக இருந்தாலும் சுண்டியிழுப்பது போல் தலைப்பு வைக்கும் ஆற்றல்!

    //hi hi அண்ணன் நம்மளை நேரடியா தாக்கராரே.. மைனஸ் ஓட்ட போட்ரலாமா? ஹி ஹி//
    நிறையப் பதிவர்,என்னையும் சேர்த்து,அப்படித்தான் சிபி!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  16. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    செங்கோவி கூறியது...

    அடி பின்னியிருக்கீங்களே..!


    //ஆமா.. வலி எனக்கு ஜாலி உமக்கா? ஹி ஹி இருங்க அங்கேயும் வர்றேன் ஹி ஹி//
    பின்னூட்டத்திலேயே பின்னுறீங்களே,சிபி!

    பதிலளிநீக்கு
  17. ஆறாவது ஊதியக் குழு கொடுத்த சம்பளத்தை விட அதிகமாவே குடுக்கறீங்களே! பேசாம இருக்கிற வேலைய உட்டுப் போட்டு வந்துரலாம்னு பாக்கிறேன்!

    தங்கிறது மட்டும், கபாலீஸ்வரர் கோயில்லே எந்தத் தூணுக்குப் பின்னாடின்னு கொஞ்சம் தெளிவு படுத்தி, கோயில் தர்மகர்த்தா கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வச்சீங்கன்னா நல்லா இருக்குமுங்க! குடும்பத்தோட கிளம்பி வந்துடுவேங்க மொதலாளி!

    இவ்வளவு பண்ண நீங்க, இந்தப் பதிவையே கூட கொஞ்சம் outsource பண்ணியிருந்தீங்கன்னா at least அந்த நேர்முகத் தேர்வு தேதியில தப்பு வந்திருக்காது பாருங்க! சரி விடுங்க...நான் தான் நாளைக்கே கிளம்பி வரப் போறேனே! நேர்முகத் தேர்வு நடத்துற தொல்லையே இல்லியே உங்களுக்கு! :)))

    பதிலளிநீக்கு
  18. அய்யா, நான் ஆன்லைனிலேயே டிக்கட் புக் பண்ணிட்டேன்... தப்பித் தவறி நீங்க மனசு மாறிடாதீங்க....அப்புறம் நான் நடுத்தெருவிலே இல்ல நிக்கணும்! :)))

    பதிலளிநீக்கு
  19. @மனம் திறந்து... (மதி)
    நேர்முகத்தேர்வில் மாற்றம் செய்ய இயலாது!ஏப்ரல் 31(!) நிச்சயம் நடக்கும்.உங்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும்!
    குவார்ட்டர்ஸ் பற்றி(குவார்ட்டர் இல்லை!) யோசிக்கலாம்!
    ந்ன்றி மதி!

    பதிலளிநீக்கு
  20. மனம் திறந்து... (மதி) கூறியது...

    //அய்யா, நான் ஆன்லைனிலேயே டிக்கட் புக் பண்ணிட்டேன்... தப்பித் தவறி நீங்க மனசு மாறிடாதீங்க....அப்புறம் நான் நடுத்தெருவிலே இல்ல நிக்கணும்! :)))//
    கவலையே படாதீங்க!கபாலி கோவிலில் சொல்லி வச்சாச்சு!
    ஏப்ரல் 31ஆம் தேதி சென்னை வர மாதிரிதானே ரிசர்வ் பண்ணியிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  21. ஹிஹிஹி ஐயா நான் இலங்கை பதிவர் விண்ணப்பிக்கலாமா?

    பதிலளிநீக்கு
  22. கந்தசாமி. கூறியது...

    //ஹிஹிஹி ஐயா நான் இலங்கை பதிவர் விண்ணப்பிக்கலாமா?//
    விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளலாம்;ஆனால் ஊதிய விவரங்களோடு ஒத்து வரவில்லையே!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  23. சென்னை வாசிகளுக்கு மட்டும்தானா? மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க! ஆனா நல்ல ஐடியாவா இருக்கு!

    பதிலளிநீக்கு
  24. போளூர் தயாநிதி கூறியது...

    //சென்னை வாசிகளுக்கு மட்டும்தானா? மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க! ஆனா நல்ல ஐடியாவா இருக்கு!//
    வெங்கட்டுக்கு சொன்ன அதே பதில்தான்!

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் வாடிக்கையாய் எழுதும் வேடிக்கை பதிவு என்றாலும், நீங்கள் நினைத்தது ஒருவேளை
    நடக்கலாம்!!!

    பதிலளிநீக்கு
  26. சரியான குசும்பு மன்னரா இருப்பீயளோ?

    பதிலளிநீக்கு
  27. வே.நடனசபாபதி கூறியது...

    // நீங்கள் வாடிக்கையாய் எழுதும் வேடிக்கை பதிவு என்றாலும், நீங்கள் நினைத்தது ஒருவேளை
    நடக்கலாம்!!!//

    வேடிக்கை எனது வாடிக்கையா!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  28. ஜோதிஜி கூறியது...

    //சரியான குசும்பு மன்னரா இருப்பீயளோ?//
    எல்லாம் உங்க ஊர்க் குசும்பு தானுங்க ! மூணு வருசம் அங்க இருந்தோமில்ல!

    பதிலளிநீக்கு
  29. கோயம்புத்தூர்ல நேர்காணல் வெச்சா சொல்லுங்க.. வந்திடுறோம்... :)

    பதிலளிநீக்கு
  30. நல்ல ஐடியாவா இருக்கே! நெல்லைக்கும் வீடியோ கான்பரன்சிங்ல நேர்காணல் வைங்க.

    பதிலளிநீக்கு
  31. //விண்ணப்பம் ஏதும் அனுப்பாமலே 31-04-2011 அன்று மாலை 5.00 மணிக்கு மரினா, காந்தி சிலைக்கு அருகில் நடக்கும் நேரடி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்!//
    ஆனாலும் அந்த ஏப்ரல் 31ஐ யாரும் கண்டுக்கவேயில்லையே!

    பதிலளிநீக்கு
  32. FOOD சொன்னது…

    //நல்ல ஐடியாவா இருக்கே! நெல்லைக்கும் வீடியோ கான்பரன்சிங்ல நேர்காணல் வைங்க.//
    சென்னைக்கு வெளியில் இருக்கும் அநேகர் விரும்பிக் கேட்பதால் யோசிக்க வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  33. FOOD கூறியது...

    //ஆனாலும் அந்த ஏப்ரல் 31ஐ யாரும் கண்டுக்கவேயில்லையே!//

    அதுதான் என் வருத்தமும்!31 என்பதைப் பெரிய எழுத்துகளில் போட்டிருக்கலாமோ!
    நன்றி !

    பதிலளிநீக்கு
  34. இளங்கோ கூறியது...

    //கோயம்புத்தூர்ல நேர்காணல் வெச்சா சொல்லுங்க.. வந்திடுறோம்... :)//
    எங்கே வைச்சுக்கலாம்?மெரினா மாதிரி,செலவில்லாத இடம் இருக்கா?
    நன்றி இளங்கோ!

    பதிலளிநீக்கு
  35. நல்ல நக்கலான நகைச்சுவையான பதிவு ..சுண்டலக்கு ஆசைப்பட்டு வருபவர்களின், நீங்கள் குறிப்பிட்ட நாளில் !, திறமையை தெரிந்து கொள்ளலாம் .. Boys என்ற படத்தில் பண்டாரமான செந்தில் ஒருவனுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது போல் உள்ளது ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  36. Vasu கூறியது...

    // நல்ல நக்கலான நகைச்சுவை யான பதிவு ..சுண்டலக்கு ஆசைப்பட்டு வருபவர்களின், நீங்கள் குறிப்பிட்ட நாளில் !, திறமையை தெரிந்து கொள்ளலாம் .. Boys என்ற படத்தில் பண்டாரமான செந்தில் ஒருவனுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது போல் உள்ளது ! //

    முல்லா நசிருதீன் மாதிரி எனக்கே ஒரு இண்டர்வியூ இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது!
    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  37. பதிவுலகத்தை தனியார்மயமாக்காமல் விட மாட்டீர் போல...

    பதிலளிநீக்கு
  38. பதிவுலகம் சிறந்திட,பதிவர்கள் முன்னேறிட,அனைத்துப் பதிவரும் தத்தம் கடமையைக் கண்ணியத் துடனும்,கட்டுப்பாட்டுடனும் செய்திட,நன்மை நடந்திடத் தீமை விலகிட.... ஆமாம்,என்ன சொல்ல வந்தேன்?
    நன்றி கஸாலி!

    பதிலளிநீக்கு
  39. அனைவருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் வழங்கப்படும்!
    //

    இதில் ’இலவசம்’ என்ற சொல் காணப்படவில்லை.. ( ஹி..ஹி சுண்டலுக்கு காசு கேப்பாங்களோ?)

    பதிலளிநீக்கு
  40. எனக்கில்ல எனக்கில்ல எனக்கில்ல என்று தருமி போல பினாத்த வெச்சுட்டீங்களே...ஹி ஹி

    பதிலளிநீக்கு
  41. பட்டாபட்டி.... கூறியது...



    // இதில் ’இலவசம்’ என்ற சொல் காணப்படவில்லை.. ( ஹி..ஹி சுண்டலுக்கு காசு கேப்பாங்களோ?)//
    ஆகா!தோணாமப் போச்சே!கூட இரண்டு மிளகு வடையும் சேர்த்திருக்கலாமே!
    நன்றி பட்டாபட்டி!

    பதிலளிநீக்கு
  42. டக்கால்டி கூறியது...

    // எனக்கில்ல எனக்கில்ல எனக்கில்ல என்று தருமி போல பினாத்த வெச்சுட்டீங்களே...ஹி ஹி//
    ஆன்மீகம் எழுதத்தயாரா?
    இன்னும் ஒரு பதிவு இருக்கிறது. உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்!
    நன்றி டக்கால்டி!

    பதிலளிநீக்கு
  43. சென்னை வாசிகளுக்கு மட்டும்தானா? மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க! ஆனா நல்ல ஐடியாவா இருக்கு!

    பதிலளிநீக்கு
  44. மாலதி கூறியது...

    // சென்னை வாசிகளுக்கு மட்டும்தானா? மத்த ஊர்க்காரங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க! ஆனா நல்ல ஐடியாவா இருக்கு!//
    செயற்திட்டத்தில் மாற்றம் செய்வதற்கில்லைதான்!ஆனால் அநேகரின் கோரிக்கைக்கு இணங்கி மறு பரிசீலனை செய்வோம்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  45. ஹாஹா நல்ல ஐடியா சார்....

    எனக்கு தமிழே தகராறு..ஒழுங்க எழுதனும்னு ஆசையா இருக்கு...நல்லா ஆளா தெர்தேடுங்க நானும் படிச்சு தமிழ் ஒழுங்க கத்துக்கறேன்

    நன்றி

    பதிலளிநீக்கு
  46. Gayathri கூறியது...

    // ஹாஹா நல்ல ஐடியா சார்....

    எனக்கு தமிழே தகராறு..ஒழுங்க எழுதனும்னு ஆசையா இருக்கு...நல்லா ஆளா தெர்தேடுங்க நானும் படிச்சு தமிழ் ஒழுங்க கத்துக்கறேன்//
    என்னுடைய விதி மீறல்களிலொன்று-”எழுத்துப் பிழைகள் அனுமதிக்கப் படும்!”
    எனவே உங்களுக்கு விண்ணப் பிக்கத் தகுதி இருக்கிறது!
    வருகைக்கு நன்றி G3!

    பதிலளிநீக்கு
  47. மொத்தத்துல, சொந்தக்காசில சூனியம் வெச்சுக்கறவங்க இல்லாத தேதில வந்து பொல்லாததைக் கட்டிக் கொண்டு போலாம்ங்கறீங்க - ஆளை விடு சாமி!

    பதிலளிநீக்கு
  48. R.S.KRISHNAMURTHY கூறியது...

    //மொத்தத்துல, சொந்தக்காசில சூனியம் வெச்சுக்கறவங்க இல்லாத தேதில வந்து பொல்லாததைக் கட்டிக் கொண்டு போலாம்ங்கறீங்க - ஆளை விடு சாமி!//
    வாங்கய்யா!நல்லாருக்கீங்களா?இபடிச் சொல்லிட்டீங்கன்னா எப்படி!
    நன்றி ஆரெஸ்கே!

    பதிலளிநீக்கு
  49. என்ன சார் அல்வா கொடுக்க பார்க்கறிங்க??????????

    பதிலளிநீக்கு
  50. kavitha கூறியது...

    //என்ன சார் அல்வா கொடுக்க பார்க்கறிங்க??????????//
    அது ஏன் அல்வா கொடுக்கற துன்னு சொல்றாங்க? லட்டு, மைசூர் பாகு என்றெல்லாம் சொல்லக் கூடாதா?!:-D
    நன்றி கவிதா அவர்களே!

    பதிலளிநீக்கு