தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 18, 2011

இனியொரு விதி செய்வோம்!

இது ஜெர்மனிக்கு வேலை நிமித்தம் சென்ற ஒருவரது அனுபவம்.

அவர் ஹாம்பர்க் சென்றடைந்தபின் அவரை வரவேற்பதற்காக அவரது சக பணியாளர்கள்- இந்தியர்களே-ஒரு உணவு விடுதியில், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அவர் அந்த உணவு விடுதியில் அநேக இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்த்தார்.

ஒரு மேசையில் ஒரு இளம் இணை அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் முன் மிக எளிமையான,குறைவான உணவே வைக்கப் பட்டிருந்தது.

அதைக் கண்ட அவர் எண்ணினார்”என்ன காதலர்கள் இவர்கள்?ஒரு ஆடம்பரமில்லாத உணவு.அந்த ஆண் மிகக் கஞ்சனாக இருக்க வேண்டும்.அப்பெண் அவனை விட்டுப் போய் விடுவாள்” என்று!

மற்றொரு மேசையில் சில வயதான பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். சிப்பந்தி ஒரு தட்டு உணவைக் கொண்டு வந்து அவர்களுக்கு பகிர்ந்து வழங்க,அவர்கள் அதை மிச்சம் வைக்காமல் உண்டனர்.

அவரும் அவர் நண்பர்களும் மிகப் பசியாக இருக்கவே ,பல உணவு வகைகளைக் கொண்டு வரப் பணித்தனர்.கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் உணவு விரைவாக வந்தது.அவர்களுக்கு வேறு அலுவல்கள் இருந்த காரணத்தால்,சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்டுப் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர்.

அவர்கள் மேசை மேல் கிட்டத்தட்ட 30 விழுக்காடு உணவு சாப்பிடப் படாமல் வீணாக்கப் பட்டிருந்தது!

அவர்கள் வெளியேறும்போது,பின்னிருந்து அழைக்கும் குரல் கேட்டது.திரும்பிப் பார்த்தனர்.அந்த வயதானவர்கள்,விடுதி மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பெண்கள் அத்தனை உணவை இவர்கள் மிச்சம் வைத்துப் போவதைப் பற்றிக் குறை கூறினர்.

நண்பர்கள் கோபம் அடைந்தனர்.ஒருவன் சொன்னான்”நாங்கள் முழு உணவுக்கும்,பணம் கொடுத்து விட்டோம்.நாங்கள் சாப்பிடுவதோ,மிச்சம் வைப்பதோ எங்கள் விருப்பம்,அதைப் பற்றிப் பேச உங்களுக்கு உரிமையில்லை”

அந்தப் பெண்கள் கடுங்கோபம் கொண்டனர்.ஒருத்தி,தனது கைபேசியில் எவரிடமோ பேச விரைவில்,சீருடை அணிந்த ஒருவர் வந்தார்.அவர் சமூகநலத்துறையைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.

நடந்த நிகழ்ச்சியைக் கேட்டறிந்த அவர்,50 மார்க்குகள் அபராதம் விதிக்க,நண்பர்கள் அதைக் கட்டினர்.

அவர் சொன்னார்”என்ன வேண்டுமோ அதை மட்டும் வாங்குங்கள்.பணம் உங்களுடையது;ஆனால் வழி வகைகளும் வள ஆதாரங்களும்,சமூகத்துக்குச் சொந்தம்.உலகில் எத்தனையோ மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். அதை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை”

அவர்கள் கன்னத்திலறைந்தது போல் உணர்ந்தனர்.யோசித்தனர்”பணக்கார நாட்டில் மக்கள் எவ்வாறு பொறுப்புணர்வோடு இருக்கிறார்கள். ஆனால் , வசதியில்லாத நம் நாட்டிலோ? விருந்து என்ற பெயரில் ஆடம்பரமாக எவ்வளவு உணவை வீணடிக்கிறோம்,போலிக் கௌரவத்துக்காக?நாம் மாற வேண்டும்”

மாறுவோமா?!

50 கருத்துகள்:

  1. ஆனால் வழி வகைகளும் வள ஆதாரங்களும்,சமூகத்துக்குச் சொந்தம்.உலகில் எத்தனையோ மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். அதை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை”
    ----உண்மை..

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் இது போது போன்று எல்லா நாட்டிலும் இருந்து விட்டால் உணவு பற்றாக்குறையே இருக்காது...


    இது போன்ற உணவு விணடித்தல் அதிகமாக இருக்கிறது அதே சமயம் ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்க கூடியவர்களும் இங்கு இருக்கிறார்கள்...

    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  3. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //முதல் வணக்கங்கள்..//

    காலை வணக்கம் சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  4. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // vadaya?//
    :-(

    பதிலளிநீக்கு
  5. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஆனால் வழி வகைகளும் வள ஆதாரங்களும்,சமூகத்துக்குச் சொந்தம்.உலகில் எத்தனையோ மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். அதை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை”
    ----உண்மை..//
    ஆம், கருன்!இதை அனைவரும் உணர வேண்டும்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //உண்மைதான் இது போது போன்று எல்லா நாட்டிலும் இருந்து விட்டால் உணவு பற்றாக்குறையே இருக்காது...

    இது போன்ற உணவு விணடித்தல் அதிகமாக இருக்கிறது அதே சமயம் ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்க கூடியவர்களும் இங்கு இருக்கிறார்கள்...

    நல்ல பதிவு...//

    சௌந்தர்,மக்கள் இதை உணர்ந்து செயல் பட வேண்டும்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நடுத்தர வர்கத்து மக்கள் போலி ஆடம்பர சூழலில் சிக்கி விழாக்களில் உணவு வகைகளை வீணாக அடிப்பது உண்மைதான். ஆனால் இப்போது சற்று பரவாஇல்லை. அதிகமான உணவுகளை அநாதை விடுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நல்ல புத்தியும் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு. எல்லா மக்களும் இதை உணர்ந்து விட்டால் எவ்வளவு நல்லது...

    பதிலளிநீக்கு
  9. கக்கு - மாணிக்கம் சொன்னது…

    // நடுத்தர வர்கத்து மக்கள் போலி ஆடம்பர சூழலில் சிக்கி விழாக்களில் உணவு வகைகளை வீணாக அடிப்பது உண்மைதான். ஆனால் இப்போது சற்று பரவாஇல்லை. அதிகமான உணவுகளை அநாதை விடுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நல்ல புத்தியும் வந்துள்ளது.//

    நல்ல மாற்றங்கள் வரவேற்கத் தக்கவையே!
    நன்றி மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  10. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நல்ல பகிர்வு. எல்லா மக்களும் இதை உணர்ந்து விட்டால் எவ்வளவு நல்லது...//

    உனரும் நாள் வரும்!

    பதிலளிநீக்கு
  11. ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் இது அந்த பொழுது, ஒரு ஜெர்மானிய தோழியிடம் இதை பற்றி விசாரித்து இருக்கிறேன். அப்படி எதுவும் நடந்தது இல்லை என்று ஆணித்தரமாக கூறுகிறாள். She asked few more Germans and confirmed it. ஆனால், மெசேஜ் நன்றாக இருப்பதையும் சொல்லி இருந்தாள். அதை உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  12. Chitra கூறியது...

    //ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் இது அந்த பொழுது, ஒரு ஜெர்மானிய தோழியிடம் இதை பற்றி விசாரித்து இருக்கிறேன். அப்படி எதுவும் நடந்தது இல்லை என்று ஆணித்தரமாக கூறுகிறாள். She asked few more Germans and confirmed it. ஆனால், மெசேஜ் நன்றாக இருப்பதையும் சொல்லி இருந்தாள். அதை உங்களுக்கும் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன்.//

    நல்ல மெசேஜ் ,பொய்யாகவே இருந்தாலும்,பரவுவது நல்லதுதானே!
    வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  13. ராஜ நடராஜன் கூறியது...

    //Good one!Keep going.//
    thanks for your visit and comment!

    பதிலளிநீக்கு
  14. கல்யாண பந்திகளில் நம் நாட்டு மக்கள் வீண் அடிக்கும் உணவுகளை சேமித்தாலே பெருமளவு பசிக்கொடுமையை போக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  15. நம் நாட்டில் நாம் இது குறித்த பார்வையை மாற்றவில்லை என்றால் ஒரு காலத்தில் நம் எல்லோரிடமும் பணம் இருக்கும் ஆனால் உணவு இல்லாமல் போகும். அப்படி ஒரு நிலைமை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மிச்ச வைப்பதையே கௌரவமாக நினைக்கும் கூட்டம் இங்கே இருக்கிறது. நான் வெளியே எங்கு சாப்பிட்டாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் பழக்கம் உண்டு. இதனால் சில சமயம் என்னை கேலி செய்திரிக்கிரார்கள்.

    மிக நல்ல பதிவு .அய்யா

    பதிலளிநீக்கு
  16. உணவு கட்டுபாடு முறை வரபோவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன...

    பதிலளிநீக்கு
  17. உலகத்திலேயே உணவு வேஸ்ட் பண்றது இந்தியர்கள்தான்னு அமெரிக்கா குற்றம் சாட்டியது நினைவிருக்கா....

    பதிலளிநீக்கு
  18. ! சிவகுமார் ! சொன்னது…

    //கல்யாண பந்திகளில் நம் நாட்டு மக்கள் வீண் அடிக்கும் உணவுகளை சேமித்தாலே பெருமளவு பசிக்கொடுமையை போக்க முடியும்.//

    வருத்தம் அளிக்கும் உண்மை!

    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  19. எவனோ ஒருவன் கூறியது...

    //நம் நாட்டில் நாம் இது குறித்த பார்வையை மாற்றவில்லை என்றால் ஒரு காலத்தில் நம் எல்லோரிடமும் பணம் இருக்கும் ஆனால் உணவு இல்லாமல் போகும். அப்படி ஒரு நிலைமை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மிச்ச வைப்பதையே கௌரவமாக நினைக்கும் கூட்டம் இங்கே இருக்கிறது. நான் வெளியே எங்கு சாப்பிட்டாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் பழக்கம் உண்டு. இதனால் சில சமயம் என்னை கேலி செய்திரிக்கிரார்கள்.//
    நானும் உங்களை மாதிரித்தான்!
    //மிக நல்ல பதிவு .அய்யா//
    நன்றி எவனோ ஒருவன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  20. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //உணவு கட்டுபாடு முறை வரபோவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன...//
    அப்படியா!நல்லது!

    பதிலளிநீக்கு
  21. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //உலகத்திலேயே உணவு வேஸ்ட் பண்றது இந்தியர்கள்தான்னு அமெரிக்கா குற்றம் சாட்டியது நினைவிருக்கா....//
    உணமையைத்தானே சொல்லியிருக்காங்க!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  22. நல்லதொரு பகிர்வு.
    youtube - இல் "chicken Ala carte " என்ற குறும்படத்தை பாருங்கள். நீங்கள் சொன்ன கருத்தை வேறு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. Nagasubramanian கூறியது...

    //நல்லதொரு பகிர்வு.
    youtube - இல் "chicken Ala carte " என்ற குறும்படத்தை பாருங்கள். நீங்கள் சொன்ன கருத்தை வேறு கோணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.//
    முன்பே பார்த்திருக்கிறேன்! வீணாக்கப் பட்ட அந்த உணவை ரசித்து உண்ணும் அசிறுவர்களைப் பார்க்கையில்,நெஞ்சைப் பிசைந்தது நண்பரே!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  24. >>>”என்ன காதலர்கள் இவர்கள்?ஒரு ஆடம்பரமில்லாத உணவு.அந்த ஆண் மிகக் கஞ்சனாக இருக்க வேண்டும்.அப்பெண் அவனை விட்டுப் போய் விடுவாள்” என்று!

    ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  25. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //>>>”என்ன காதலர்கள் இவர்கள்?ஒரு ஆடம்பரமில்லாத உணவு.அந்த ஆண் மிகக் கஞ்சனாக இருக்க வேண்டும்.அப்பெண் அவனை விட்டுப் போய் விடுவாள்” என்று!

    ஹா ஹா ஹா//

    சிரித்து வாழ வேண்டும்!!
    நன்றி சி.பி.

    பதிலளிநீக்கு
  26. திருமண வீடுகளுக்கு கூட இத்தனை நபர்கள் தான் வர வேண்டுமென கட்டுபாடுகள் கொண்டுவர போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  27. FOOD சொன்னது…

    //திருமண வீடுகளுக்கு கூட இத்தனை நபர்கள் தான் வர வேண்டுமென கட்டுபாடுகள் கொண்டுவர போகிறார்கள்.//
    நல்ல செய்திதான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  28. உண்மை தான் ஐயா..நாம் வளர்ந்த நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.

    பதிலளிநீக்கு
  29. உண்மை தான் ஐயா..நாம் வளர்ந்த நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.

    பதிலளிநீக்கு
  30. Nice Message! At least in US when people can't finish the food in Restaurants, there is an option of making the leftover "TO GO" (pack the remaining food with us). I used wonder, why we don't have that option in back home.

    Things have to change in India. It's all about mindset change.

    பதிலளிநீக்கு
  31. ஆடம்பரமான விருந்துக்கு தான் இங்கு மவுசு அதிகம். இங்கும் நாய் இன்னும் எச்சில் இலையில் இருந்து சாப்பிடுகிறது... சிந்திக்கவைக்கும் நல்ல பதிவு. நன்றி. ;-)

    பதிலளிநீக்கு
  32. நல்ல பகிர்வு. எல்லா மக்களும் இதை உணர்ந்து விட்டால் எவ்வளவு நல்லது...

    பதிலளிநீக்கு
  33. செங்கோவி கூறியது...

    //உண்மை தான் ஐயா..நாம் வளர்ந்த நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.//
    மிகச் சரி.
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  34. RVS கூறியது...

    //ஆடம்பரமான விருந்துக்கு தான் இங்கு மவுசு அதிகம். இங்கும் நாய் இன்னும் எச்சில் இலையில் இருந்து சாப்பிடுகிறது... சிந்திக்கவைக்கும் நல்ல பதிவு. நன்றி. ;-)//
    அதையே பெருமையாக நினைப்பவர்கள் நாம்!
    நன்றி RVS

    பதிலளிநீக்கு
  35. மாலதி கூறியது...

    //நல்ல பகிர்வு. எல்லா மக்களும் இதை உணர்ந்து விட்டால் எவ்வளவு நல்லது...//
    உண்மை!
    நன்றி மாலதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  36. Reggie J. கூறியது...

    //Nice Message! At least in US when people can't finish the food in Restaurants, there is an option of making the leftover "TO GO" (pack the remaining food with us). I used wonder, why we don't have that option in back home.//
    this practice is followed in star hotels in India.
    //Things have to change in India. It's all about mindset change.//
    absolutely correct.
    thanks Reggie J

    பதிலளிநீக்கு
  37. சூப்பர் அனுபவம்..நல்ல செய்தி

    பதிலளிநீக்கு
  38. சார்..மேலே இருக்கும் படத்தை பெயிண்ட் சாஃப்ட்வேரில் சிறிதாக்கி வெளியிடுங்கள்..தளம் ஓபன் ஆக சிரமப்படுகிறது

    பதிலளிநீக்கு
  39. மேலே இருக்கும் படத்தை நீக்கி விடலாம்...உங்க எழுத்தை விடவா அந்த படம் எங்களை வசியம் செய்யப்போகுது..?

    பதிலளிநீக்கு
  40. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //சூப்பர் அனுபவம்..நல்ல செய்தி//
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  41. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //சார்..மேலே இருக்கும் படத்தை பெயிண்ட் சாஃப்ட்வேரில் சிறிதாக்கி வெளியிடுங்கள்..தளம் ஓபன் ஆக சிரமப்படுகிறது//
    //மேலே இருக்கும் படத்தை நீக்கி விடலாம்...//
    பதிவைப் பாருங்கள்!
    //உங்க எழுத்தை விடவா அந்த படம் எங்களை வசியம் செய்யப்போகுது..?//
    !! :D
    மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  42. ஆமாம், நாம் பலவகையில் இன்று வேர்களை மறந்து விட்ட விழுதுகளாகவே இருக்கிறோம்! இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது, உண்மைதான்!

    மண்ணுக்கு அடியில் இருக்கும் எண்ணெய் எப்படி நாம் ஆகாயத்தில் பறக்க உதவுகிறதோ, அவ்வாறே நம் தொன்மை வாய்ந்த, பெருமைமிகு வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் புதைந்து கிடக்கும் நெறிகளும், விதிகளும், இயல்பான வாழ்க்கை முறைகளும் நம்மையும், நம் நாட்டையும் மேம்படுத்த வல்லவைதானே? நாம் தான் சற்றே மெத்தனமாக இருக்கிறோம்! அவ்வளவே!

    அது சரி, நீங்கள் என்னுடைய வலைத்தளம் பக்கம் வந்து நீண்ட நாள் ஆகிறதே? குறுகிய உங்கள் நேர அட்டவணையில் இடம் இருந்தால் வாங்களேன்! இதோ எனது புதிய பதிவு:லேனா தமிழ்வாணன் இப்படிக் காரணமின்றிக் கோபித்துக் கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  43. ஐயா, உங்களை பெயர்க்காரணம் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்:http://sengovi.blogspot.com/2011/04/blog-post_20.html

    நன்றி!

    பதிலளிநீக்கு
  44. நல்ல பதிவு. திருமண விழாவில் கூட தேவையில்லாமல் ஆடம்பரத்திற்காக பல வித உணவு வகைகளை தயார் செய்து நாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் தான் மைய அரசு கூட திரும்பவும் Guest Control Act கொண்டுவரலாமா என ஆலோசித்துக்கொண்டிருப்பதாக கேள்வி.

    பதிலளிநீக்கு
  45. மனம் திறந்து... (மதி) கூறியது...
    //மண்ணுக்கு அடியில் இருக்கும் எண்ணெய் எப்படி நாம் ஆகாயத்தில் பறக்க உதவுகிறதோ, அவ்வாறே நம் தொன்மை வாய்ந்த, பெருமைமிகு வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் புதைந்து கிடக்கும் நெறிகளும், விதிகளும், இயல்பான வாழ்க்கை முறைகளும் நம்மையும், நம் நாட்டையும் மேம்படுத்த வல்லவைதானே? நாம் தான் சற்றே மெத்தனமாக இருக்கிறோம்! அவ்வளவே! //
    முற்றிலும் உண்மை!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதி!
    அவசியம் உங்கள் பதிவைத் தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  46. செங்கோவி கூறியது...

    //ஐயா, உங்களை பெயர்க்காரணம் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்:http://sengovi.blogspot.com/2011/04/blog-post_20.html

    நன்றி!//
    அழைப்புக்கு நன்றி!முடித்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  47. வே.நடனசபாபதி கூறியது...

    //நல்ல பதிவு. திருமண விழாவில் கூட தேவையில்லாமல் ஆடம்பரத்திற்காக பல வித உணவு வகைகளை தயார் செய்து நாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் தான் மைய அரசு கூட திரும்பவும் Guest Control Act கொண்டுவரலாமா என ஆலோசித்துக்கொண்டிருப்பதாக கேள்வி.//
    நடவடிக்கை அவசியம் தேவை!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு