தொடரும் தோழர்கள்
ஞாயிறு, மார்ச் 04, 2012
வியாழன், மார்ச் 01, 2012
ஓய்வில் உறவுகள் தேடும் ஓர் உள்ளம்!
நேற்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் வாசகங்கள் இவை—
“நான் 29-02-1952 அன்று ,முழுகிக் கொண்டிருக்கும் ஒரு குடுமபத்தைக் காப்பதற்காக மிகக் குறைந்த சம்பளத்தில் வங்கிப் பணியொன்றில் சேர்ந்தேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் என் முயற்சிகள் வீணாகி விடவில்லை என்பதாகவே தோன்றுகிறது.எத்தனை பேருக்கு இன்னும் நினைவிருக்கிறதோ, தெரியவில்லை.அவர்கள் அனைவருக்கும் கடவுளின் அருள் கிட்டட்டும்”
இம் மின்னஞ்சலை அனுப்பியவர் எனக்கு நெருக்கமான உறவினர்தான்.தனது 18 வயதில் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்புத்,தலை மகனான அவருக்கு வந்து சேர்ந்தது. குடும்பத் தலைவனான அவரது தந்தையை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த குடும்பம் அது.அவருக்குப் பின் நான்கு குழந்தைகள்.எனவே வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்.முதல் இரண்டு மாதங்கள் சம்பளமின்றிப் பணி பயில்பவராக சேவை.பின் 40 ரூபாய் சம்பளம்.அவர் தன் உடன் பிறப்புகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்து வந்திருக்கிறார்.அவரது கடமைகளை அவர் என்றும் செய்யத் தவறியதில்லை. அவரது முயற்சிகள் நிச்சயம் நல்ல பலனளித்தே இருக்கின்றன. எனவே அவர்கள் அனைவரும் அவரை நிச்சயமாக நன்றியுடன் நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால் காலம் மாறுகிறது.அனைவருக்கும் வயதாகி விட்டது.அவரவர் குடும்பம் குழந்தைகள், பேரப்பிள்ளைகள், பல புதிய உறவுகள்,பிரச்சினைகள் என்ற சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் கட்டாயங்கள், பழைய நினைவுகளை பின்னுக்குத் தள்ளுவது நிகழக் கூடியதே.அதனால் அவர்கள் அதை நினைக்கவில்லை ,மறந்து விட்டார்கள் என்பதல்ல.சமயம் வரும்போது அந்நினைவுகள் மேலேறி வரும் என்பது சந்தேகமில்லை.
ஒரு வேளை அவர் அவருடன் பணி புரிந்தவர்கள் எத்தனை பேருக்கு நினைவி ருக்கிறதோ எனக் கேள்வி எழுப்பியிருப்பாரானால்,அந்த சந்தேகமும் அவருக்கு வந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. ஏனெனில் அவர் எப்போதுமே மிக நகைச்சுவை உணர்வு மிகுந்த. .மற்றவர்களுடன் எளிதில் நன்கு பழகக் கூடியவராக, தான் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவரையும் மகிழ்விப் பராகவே இருந்திருக்கிறார்.எனவே உடன் பணி புரிந்தவர்களும் அவரை நினைவில் வைத்திருப்பர் என்பது திண்ணம்.
இந்த நாளில்,சுற்றம்,நட்புகள் சூழ இல்லாமல் தனிமையாக அமர்ந்து பழையவற்றை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறதே என அவருக்குத் தோன்றியிருக்கலாம்.அதுவும் காலத்தின் கட்டாயமே!
அவருக்கு எல்லாம் வல்ல இறைவன்.நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்.மகிழ்வும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கையையும் அளிக்கட்டும். அவனது புத்தகத்தில் அவரது இந்த கடமை உணர்வு மிக்க நற்செயல்கள் பதிவாகியிருக்கின்றன.
அவரது மருமகன் சொன்னது போல் அவரது வாழ்க்கை அம்மருமகனுக்கு மட்டுமன்றிப் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
அவருக்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள்.
செவ்வாய், பிப்ரவரி 28, 2012
காலம் மாறிப் போச்சு!!
நாட்டின் பிரதமர் முதியய பெண்மணியின் காலில் விழுந்தது அந்தக்காலம்
நாடாள நினைப்பவர் காலில் மூதாட்டி விழுவது இந்தக்காலம் !!
மேரா பாரத் மகான்!
நாடாள நினைப்பவர் காலில் மூதாட்டி விழுவது இந்தக்காலம் !!
மேரா பாரத் மகான்!
திங்கள், பிப்ரவரி 27, 2012
சனி, பிப்ரவரி 25, 2012
ஒரு கொள்ளை!ஒரு என்கௌண்டர்!ஒரு கேள்வி!
எதிர்பார்க்கவேயில்லலை,இப்படி நடக்குமென்று
கொள்ளை போய்விட்டது, என் இதயம்
பார்வை ஒன்றிலே திருடி விட்டாள் அவள்
யாரும் அறியாமல்,மௌனமாக நிகழ்ந்த கொள்ளை
கொள்ளை அடித்தவரை நேசிக்கும் விந்தை இங்குதான்!
ஆம்,கொள்ளைக்காரி அவளை நான் காதலித்தேன்.
உலகமே அழகுமயமாய்த் தெரிந்த காலம் அது
ஆனால் ஒருநாள்
மீண்டும் எதிர்பாராதது நிகழ்ந்தது.
ஒரு என்கௌண்டரில் அவள் என்னைச் சுட்டு விட்டாள்
“என்னை மறந்து விடுங்கள்” என்ற மூன்று சொற்களால்.
தொடக்கமும் மூன்று சொற்கள்
முடிவும் மூன்று சொற்கள்!
ஆனால் என் இதயத்தைத் திருப்பித்தராமலே
அவள் சென்று விட்டாள்
கொள்ளையர்களை என்கௌண்டரில் கொல்வார்கள்
ஆனால் இங்கோ!
பறி கொடுத்தவனே என்கௌண்டரில் கொல்லப்பட்டு விட்டான்!
இது என்ன நியாயம்?
நீங்களே சொல்லுங்கள்!
டிஸ்கி1:தலைப்பு எழுதி விட்டுப் பதிவு எழுதுவது என்பது இதுதான்!
வியாழன், பிப்ரவரி 23, 2012
சிங்கமா?குரங்கா?
கென்யாவில் ஒரு மிருக்காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருந்தது.மிருகங்களை நன்கு பராமரிக்க வசதியற்ற இடம், அது.சிங்கத்துக்கு ஆட்டுக்கறி அளிக்கப் பட்டாலும் ,அது போதவில்லை..தனக்கு விடிவு காலம் வராதா என ஏங்கியது. ஒரு நாள் துபாயின் ஒரு மிக வசதியான மிருகக்காட்சி சாலையில் இருந்து வந்த மேலாளர் அந்த சிங்கத்தை துபாய்க்கு அனுப்பச்சொல்லி எற்பாடு செய்தார்.அந்த சிங்கத்துக்கு மிக மகிழ்சி. வசதியாக வயிறு நிறைய நல்ல ஆட்டுக்கறி சாப்பிட்டு வாழலாம் என நினைத்தது.
துபாய்க்குச் சென்றதும் முதல் நாள் அதற்கு உணவு வழங்கப்பட்டதுஅதற்கு ஏமாற்றம்!பத்து வாழைப்பழம் !இடம் மாற்றத்தினால் சீரணம் ஆவது பிரச்சினையாகுமோ எனப் பயந்து பழம் கொடுத்திருப்பார்கள் என நினைத்தது.
ஆனால் தொடர்ந்து இரு நாட்கள் இது போலவே நடந்தது.மறு நாள், உணவளித்த மனிதனிடம் அது கேட்டது”நான் சிங்கம்!எனக்கு இப்படியா உணவளிப்பது?”
அவன் சொன்னான்”நீ சிங்கம்தான் தெரியும்.ஆனால் நீ இங்கு வந்திருப்பது ஒரு குரங்கின் ’நாட்டு நுழைவனுமதி’யில்!”(visa)
..
..
..
..
நீதி:வெளிநாட்டில் குரங்காக வாழ்வதை விடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


