பொதுவாகவே எல்லோரும் தொலைபேசியைக் கையில் எடுத்ததும் சொல்லும் முகமன் ”ஹலோ” என்பதுதான்.
ஆனால் நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக,தொலைபேசியில் ஹலோ சொல்வதில்லை .மாறாக”ஓம் நமச்சிவாய”என்று சொல்லி வருகிறேன்.என் நண்பர்களின் வீடுகளில் என் நண்பருடன் நான் பேச எண்ணும்போது தொலபேசியை எடுப்பவர்-அவர் மனைவி ,மக்கள்-யாராயிருப்பினும் “ஓம் நமச்சிவாய பேசுகிறார்” என்று சொல்லி விட்டுத் தொலை பேசியை நண்பரிடம் கொடுக்கிறார்கள்.தொலை பேசியில் மட்டுமன்றி நேரில் சந்திக்கும் நேரங்களிலும் நண்பர்களிடம் நான் கூறும் முகமன்”ஓம் நமச்சிவாய”இதனால் பலர் என்னை ஒம் நமச்சிவாய என்ற பெயரிலேயே அழைக்கவும் தொடங்கி விட்டனர்.
இது போன்று சில ஆன்மீக அமைப்புகளைச் செர்ந்தவர்கள் கூறுவது வழக்கம்.சின்மயா மிஷனில்”ஹரி ஓம்” என்றும் இஸ்கானில்” ஹரே கிருஷ்ணா” என்றும்,வேத்தாத்திரி மகரிஷி அமைப்பைச் சேர்ந்தவர்கள்”வாழ்க வளமுடன்”சத்ய சாயி பாபாவின் பக்தர்கள்”சாயிராம்” என்றும் கூறுவதை வழக்கமாகக் கொண்டுளனர்.
இந்த ஹலோவை விட்டு விட்டுத் தனித்துவமாக ஏதாவது சொல்ல அனைவரும் முயலாலாமே.மறு முனையில் கேட்பவர்கள்,உடனே நீங்கள்தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வர் அல்லவா?அது மட்டுமன்றி ஒரு நல்ல சொல்லைக் கேட்ட மன நிறைவு வேறு!
என் உறவினர் ஒருவர் என்னைப் பின்பற்றித் தொலை பேசியில்”திருச்சிற்றம்பலம்”என்று சொல்லத் தொடங்கி விட்டார்
என்ன சொல்லலாம்
1)வணக்கம்
2)வாழ்க ,வளர்க.
3)இந்த நாள் இனிய நாள்
4)நல்லதே நடக்கும்
5)நீங்கள் விரும்பும் கடவுள் பெயர்.
எத்தனையோ சாத்தியங்கள் இருக்கின்றன.உங்கள் கற்பனையின் வீச்சே எல்லை!


