தொடரும் தோழர்கள்

.புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 16, 2015

சுமை சுமந்து சோர்ந்திருக்கும் பெண்ணே!




சுமக்கத் தொடங்கி விட்டாயா பெண்ணே?

உனக்குத்தான் எத்தனை சுமைகள் வாழ்க்கையில்!

இன்பமானவை சில;துன்பமானவை சில.

இந்த வயதில் பிற சிறுமிகள் சுமப்பர் புத்தகச் சுமை.

அதுவின்றி வந்ததோ உனக்கு இந்தக் குடச்சுமை?

காலிக்குடம் இப்போது ,கனமின்றி இருக்கும்

நிறை குடமானபின் எங்ஙனம் சுமப்பாய்?

ஒன்றல்ல மூன்று குடம் சுமப்பது எளிதோ?

பழ்கத்தான் வேண்டும்,சுமக்க

உடற்சுமை,உயிர்ச்சுமை

வயிற்றுச்சுமை,இடுப்புச்சுமை

கைச்சுமை,கால்சுமை யென

எல்லாச்சுமையும் சிறிதேனும் இறக்கலாம்

இறக்குவது எங்கே வாழ்நாளில் உன் மனச்சுமை?


(நிழற்படம் :டைம்ஸ் ஆஃப் இந்தியா)