தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 02, 2019

போவோமா,புதுக்கோட்டைக்கு.......


நான் புதுக்கோட்டைக்கு இன்று வரை போனதில்லை.

போக வேண்டும் என்றொரு ஆசை ,பலமான ஆசை சில முறை எழுந்ததுண்டு.

 1967

ஒரு பகலில் ஓடும் ரயிலில்  சந்தித்த நட்பை மாலை பிரிகையில் அந்நட்பு புதுக்கோட்டையைச்  சேர்ந்தது என்பது தவிர வேறெதுவும் அறியாமல்  திரும்பிய காலம்.

சில நாட்கள்சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததுண்டு. போய்த் தேடிப்
பார்க்கலாமா என.னாலும் ஓர் அச்சம்.   ஊரில் எங்கென்று தேடுவது.அங்கும் இங்கும் அலைந்து யாருக்காவது ஐயம் ஏற்பட்டால்?எனவே போகாமலே இருந்து விட்டேன்.இன்றும் புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது அந்த அழகிய நட்பே!

மற்றொரு தொடர்பு சாந்தானந்த சுவாமிகள்.என் உறவினர் ஒருவர் என்னை அவரது புவனேச்வரி அதிஷ்டானத்தில்  ஆயுட்கால உறுப்பினர் ஆக்கி விட்டார்.பணம் நான்தான் கட்டினேன்!முன்பெல்லாம் என் பிறந்தநாளன்று குங்குமப் பிரசாதம் வந்து கொண்டிருந்தது;சுவாமிகளையும் நான் புதுக்கோட்டையில் பார்க்கவில்லை,சேலத்தில்தான் பார்த்தேன்.


என் அம்மாவின் சித்தி,புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்,கல்யாண சமையலைக் கூடக் கவனிக்கும் சாமர்த்தியம் பெற்றவர்கள்.புதுக்கோட்டைக் காரர்கள் எல்லாருமே சமையலில் விற்பன்னர்களோ என நினைக்கிறேன்


புதுக்கோட்டைப் பிரபலம் என்றால் என் நினைவுக்கு வருபவர் ஜெமினி கணேசன் அவர்கள்.

இப்போது போகலாமா என ஒரு ஆசை!

ஆனால் கொல்லன் உலையில் ஈக்கென்ன வேலை என்று என் மனம் என்னையே கேட்கிறது!
நானும் ஒரு காலத்தில் தீவிரமாக  தமிழில் வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தவன்தானே....இது நான்.
ஆனால் இப்போது நடக்கப் போவது பதிவர் சந்திப்பு இல்லையே,இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்தானே என்கிறது மனம்.
அதனால் என்ன?..நான்
அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்,கொ உ.ஈ எ வே என்று.
உனக்குத் தமிழில் எழுதுவதைத் தவிர  வேறு எந்தத் தொழில் நுட்பமும் தெரியாது.அந்தக்காலத்திலேயே உன் வலைப்பூவில் பிரச்சினை என்றால் உடனே   திண்டுக்கல்லுக்குத் தொலை பேசி உதவி கேட்பாய்.
திண்டுக்கல்லா?  நான்.
ஆம்.திண்டுக்கல் என்றால் போதும்.அவரைத்தான் குறிக்கும்.
ஓ!
ஆம்.அதனால்தான் சொன்னேன் நீ புதுக்கோட்டைக்குப்போய் உருப்படியாக என்ன செய்யப் போகிறாய் என்று.....
எழுத்தில் மட்டுமே பார்த்த நண்பர்களை நேரில் சந்திப்பேன்.நானும் ஏதாவது கற்றுக் கொள்வேன்.கல்லாதது உலகளவு அல்லவா?
என்னவோ செய்.

பேச்சு முடிந்தது
என்ன செய்யப் போகிறேன்?

கீழே............


 கணினித் தமிழ்ச் சங்கம்புதுக்கோட்டை

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினிகொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன் அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்) 

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன்சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்திகஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி,ஸ்ரீமலையப்பன்காயத்ரிஉதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன்ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலிமகா.சுந்தர்.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்மைதிலி,தென்றல்பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம் –
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி –
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –
(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 
(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு) 

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
(இந்த முயற்சியை நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன் மேற்கொண்டு வருகிறார்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு பார்த்து, புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த ”எம்.எஸ்.ஸ்க்ரீன்ஸ்” ஆசிரியர் எம்.எஸ்.ரவி அவர்கள் தொடர்பு கொண்டு, “நான் ஃபோட்டோ ஷாப் வழியாக எப்படி போஸ்டர்கள் வடிவமைப்பது என்பது பற்றிச் சொல்கிறேன்” என்று சொன்னார். நமது அமைப்புகளில் எப்படியும் மாதம் 4,5கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு அழைப்பிதழ், போஸ்டர்கள் வடிவமைக்க நாமே தெரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என்று தோன்றியது! எனவே அவரது யோசனையைப் 
பயிற்சி முகாமில் செயல்படுத்தலாம் என்பதுஎன்கருத்து 
– நா.மு., 01-09-2019 இரவு 10.20

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363 






7 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா இன்றுதான் ரயிலை வைத்து உங்களைக் குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டேன்...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றே உங்களது வரவும்.

    எல்லாம் அத்தி வரதரின் திருவிளையாடல்.

    வாருங்கள் புதுக்கோட்டை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமித்த சிந்தனை!
      வருவதற்கு முயற்சி செய்வேன் கில்லர்ஜி
      நன்றி

      நீக்கு
  2. தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன் ஐயா...

    இந்தப் பகிர்வுக்கு எத்தனை நன்றி சொன்னாலும், தங்களின் சந்திப்பு தான் அதற்கு ஈடுதரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சந்திப்பதில் ஆவலாய் உள்ளேன் டிடி.
      நடக்குமென்று நம்புகிறேன்.
      நன்றி.

      நீக்கு
  3. ஆஹா... புதுக்கோட்டை செல்ல ஆர்வம் தான். ஆனால் செல்ல முடியாத சூழல்.

    விழா சிறக்க எனது வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  4. நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன்.
    பார்க்கலாம்
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  5. நீண்ட இடைவெளிக்குப்பின் பதிவுலகம் வரும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன். புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் – 4 இல் தங்களின் அனுபவங்களை சொல்லி புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு