தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 27, 2015

ரே, பெனெகல்,அடூர்!



பதிவுலகம் எனக்குத் தந்த நண்பர்களான இளைஞர்கள் பலர் தற்போது குறும்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.மிகவும் பெருமையாக இருக்கிறது.தங்கள் அன்றாடப் பணிகளின் மத்தியில் இதற்கும் நேரம் ஒதுக்கி எவ்வாறு இவர்களால் சாதிக்க முடிகிறது என வியப்பாக இருக்கிறது.


ஒரு காலத்தில் நானும் சினிமாவில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்,குறிப்பாக இணை சினிமா.மதுரையில் பணிபுரிந்த காலத்தில்—1970-77-அங்கு இயங்கிக் கொண்டிருந்த ரே ஃபிலிம் சொசைட்டியில் சேர்ந்து பல ஞாயிற்றுக்கிழமை  காலைகளில் சத்யஜித் ரே படம் மட்டுமன்றி வேறு இணை சினிமாக்களும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அபுர்சன்சார்,பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா தவிர வேறு சில படங்களும் பார்த்த நினைவு.அடூரின் சுயம்வரம்,பெனகல்லின் அங்கூர்,நிஷாந்த்,இவை அவற்றில் அடங்கும்.


அந்தக்காலகட்டத்தில்தான் எழுத்தாளர் ஜெயபாரதியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து படம் எடுக்கத் திட்டமிட்டனர்.இவர்களைப் பற்றிச் சொல்லும்போது சுஜாதா சொன்னார்”ஒரே விதமான ஆசையும் மீசையும் உள்ள இளைஞர்கள்” என்று.அந்த முயற்சிக்கு உதவ எண்ணி என்னால் இயன்றை ஒரு மிகச்சிறு தொகையை அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரு கடிதமும்,ஒரு சிறப்பு மலரும் வந்தன”கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்”எங்களைக் கொஞ்சம் உயரே பறக்க விட்டிருக்கிறீர்கள் ” என்று.ஆனால் படம் அப்போது வெளிவரவில்லை.

1979 இல் தான் ஜெயபாரதியின் “குடிசை” படம் வெளி வந்த்து.

மதுரைக்குப்பின் ஊர் ஊராகப்  பணி இட மாற்றத்தில் சுற்றி வந்ததில்,இந்த ஆசையெல்லாம் பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டது.சினிமா இயக்கத்திலும் அதை விட நடிப்பிலும் ஆர்வம் இருந்தபோதும்//(என் நடிப்பு அனுபவங்களைப் பற்றி அறிய,இங்கேயும்,இங்கேயும் க்ளிக்கவும்//

 நான் முயலாததற்குக் காரணம்.

1)நான் சென்னையில் இல்லை
2)துணிந்து இறங்கும் தைரியம் இல்லாத மத்திய தர வர்க்க மனப்பாங்கு.

படம் பார்ப்பதே குறைந்து போன நிலையில் மீண்டும் நான் பார்த்த இணை சினிமா அரவிந்தனின் “சிதம்பரம்”-1986.

இப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.

ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்

எனக்கு ஒரே வடிகால்  அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..


14 கருத்துகள்:

  1. நினைவலைகள் அருமை ஐயா.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. பதிவு --பழைய தினங்களின் உந்துதல் --பழைய திரைப்படங்களின் உதிரம் -படித்த தினங்களின் உத்வேகம். -- அருமை. வயதானவர்களின் எண்ணப்பதிவு --

    பதிலளிநீக்கு
  3. மனச்சோர்வை போக்கும் வழியாக வலையுலகம் இருக்கு ஐயா நினைப்பது எல்லாம் நடப்பதில்லை என்றாலும் அந்தக்கனவு உங்களின் மனதில் இன்னும் இருப்பது அறியமுடிகின்றது.

    பதிலளிநீக்கு
  4. கூட்டுப்புழுவும் ஒரு நாள் சிறகடித்து வெளிவரும். எனவே கூட்டைவிட்டு வெளியே வாருங்கள். திரை அரங்குகளுக்கு செல்லாமல் இணையத்தில் வெளியிடபப்டும் படங்களைப் பார்த்து திறனாய்வு செய்து பதிவிடலாமே?

    பதிலளிநீக்கு
  5. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்று பாடத் தோன்றுகிறது. "25 வயதில் பைலட் ஆக ஆசைப்பட்டேன்..." என்று ஆரம்பித்து " ...70 வயதில் காலை பாத்ரூம் தடங்கலின்றி போய்வந்தால் அதுவே நிம்மதி" என்று 'ப்ரக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ்' பற்றி சுஜாதா தனது கற்றதும் பெற்றதும் தொடரில் எழுதி இருப்பார்! இன்று அவர் நினைவு நாளும் கூட!

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பெயர்கள் இன்று எத்தனை பேருக்குத் தெரியுமோ?

    உடலில் தெம்பிருந்தால் மனம் பட்டாம்பூச்சி. காலமாற்றம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    தங்களின் எண்ண சிதறல் நிச்சயம் வெற்றியடையும்.... பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இப்படி வெளிப்படியாக சொல்வதே பெரிது ஐயா...

    சிறிது மனது வைத்தால்... உடலும் ஒத்துழைத்தால்...

    நேரில் சொல்கிறேனே...

    பதிலளிநீக்கு
  9. பதிவில் வித்தியாசமாக அசத்துவது ஒன்றே போதும் ஐயா உங்கள் திறமையைச் சொல்ல! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.

    ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்

    எனக்கு ஒரே வடிகால் அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..

    என் நிலையும் இதுதானே!

    பதிலளிநீக்கு
  11. **ஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்** படிக்க வருபவர்கள் எல்லோரையும் உங்கள் வலையில் சிறை செய்யும் நீங்கள் இப்படி சொல்வதுதான் தன்னடக்கம் என்பதா??!!

    பதிலளிநீக்கு