தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 09, 2015

புத்திர சோகம்ஒரு தாய்.

வயது 96.

முப்பத்திரண்டாவது வயதில் கைம்பெண்ணானவள்.

அப்போது மூத்த மகனுக்கு வயது 16

கடைக்குட்டிப் பையனுக்கு வயது 5.

இடையில் மூன்று பெண்கள்.

குடும்பம் சிரமப்பட்டு முன்னேறியது.

படிப்பைத் தொடராமல் பெரிய மகன் 18 வயதில் ஒரு வங்கிப்பணியில் சேர்ந்தான்

முதல் மூன்று மாதம் சம்பளம் கிடையாது.

பின் நாற்பது ரூபாய் சம்பளம்.

குத்தாலத்தில் (மாயவரம்)ஒரு சொந்த ஓட்டு வீடு.

அதிலிருந்து வாடகை ரூபாய் 15.

சிக்கனமாகக் குடும்பம் நடத்தி பெண்களை எஸ் எஸ் எல் ஸி வரை படிக்க வைத்து மணம் முடித்தும் கொடுத்தாயிற்று.

குடும்பத்துக்காக மகன் தன் சில தேவைகளைத் தியாகம் செய்ய நேர்ந்தததுண்டு.

கடைசிப்பையன் கல்லூரியில் படிப்பது என்றால் விடுதியில் தங்கிப் படிக்க வைக்கும் அளவுக்கு வருமானம் போதாது.

எனவே பெரிய மகன் வங்கி நிர்வாக இயக்குனரைச் சந்தித்துக் கல்லூரி இருக்கும் ஊருக்கு மாற்றல் கேட்டுப் பெறுகிறான்

சிறிய ஊர்தான்,தம்பியைப் படிக்க வைக்கிறான்.

பட்டப்படிப்புக்குப் பின் மேற்படிப்பு சாத்தியமில்லை!

ஆனால் அந்த வங்கியைப் பெரிய வங்கி ஒன்று எடுத்துக் கொள்ள,அதனால் சம்பளம் உயர,அண்ணன் தயவில் தம்பி சென்னை சென்று பட்ட மேற்படிப்புப் படிக்க முடிகிறது.

இருவருக்கும் வயது வித்தியாசம் 11.

தனக்குப் படிக்க முடியாமல் போனாலும் தம்பி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெற்றி.


தன கடமைகள் செவ்வனே செய்து வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர் 81 வயதில் இறைவனடி சேர்ந்தார்

ஆனால் தலைச்சன் மகனை இழந்து மாளாத புத்திர சோகத்தில் தவிக்கும் அந்தத் தாயைப் பார்த்து இளைய மகன் மனதுக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.?

அந்தத்தாய் சில காலமாகவே இறைவனை வேண்டி வந்தாள்- முதலில் தான் போய்ச் சேர வேண்டும் என.

ஆனால் இறைவனுக்குக் கருணையில்லை.

தவிக்க விட்டு விட்டான்.

இறை நம்பிக்கையே ஆட்டம் காண்கிறது-அத்தாய்க்கு அல்ல.இளைய மகனுக்கு.

தாய்க்கு என்ன ஆறுதல் சொல்ல?

அவளுக்கு மனச்சாந்தி கொடு என்று யாரை வேண்ட?


                                                     அம்மாவும் அண்ணாவும்

அண்ணாவுக்கு என் அஞ்சலி

17 கருத்துகள்:

 1. சுருக்கமாக விரைவாகச்
  சொல்லிப் போயிருப்பினும்
  மனம் கனக்கச் செய்து போகும் பகிர்வு

  அவர் ஆத்மா சாந்தியடைய
  பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. பதிவை படிக்க ஆரம்பித்ததுமே புரிந்துகொண்டேன் நீங்கள் யாரைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று. தங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

   நீக்கு
 4. கஷ்டத்திலேயே பெரிய கஷ்டம் புத்திர சோகம்தான்.
  தங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. புத்திரசோகம் பெரும் துயரம்தான்! தங்கள் அண்ணனின் ஆத்மா சாந்தியடைய என்னுடைய ப்ரார்தனைகளும் அஞ்சலிகளும்!

  பதிலளிநீக்கு
 6. அந்தத்தாய் சில காலமாகவே இறைவனை வேண்டி வந்தாள்- முதலில் தான் போய்ச் சேர வேண்டும் என.//

  புத்திர சோகம் கொடுமை. தன் கண் முன்னால் குழந்தைகள் நலம் மட்டுமே விரும்பும் தாய்.
  தங்கள் அண்ணன் அவர்களுக்கு அஞ்சலிகள்.
  அம்மாவுக்கும், குடும்பத்தினர்களுக்கும் இறைவன் மன ஆறுதலை தரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. மனதை கனக்கச் செய்யும் பதிவு! அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

   நீக்கு
 8. மனம் கணக்கிறது ஐயா...
  அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.,

  பதிலளிநீக்கு
 9. அண்ணாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகளும் ஸார்.

  பதிலளிநீக்கு
 10. வருத்தமாக இருக்கிறது. :( காலம் தான் சோகத்தை மாற்ற வேண்டும். என்றாலும் ஆறாப் புண் தான். அந்தத் தாயை நினைக்க நினைக்க வேதனையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. மகாபாரதத்தின் உபகதை ஒன்றில், உலகின் தலையாய சோகம் எது என்ற கேள்விக்கு நகுலன், " புத்திர சோகம் " என கூறியதாக படித்திருக்கிறேன்...

  உங்கள் அண்ணாவின் ஆன்மாவின் சாந்திக்கு பிரார்த்திப்போம்.

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 12. அண்ணாவுக்கு எங்கள் அஞ்சலி......

  எல்லாம் வல்லவன் அம்மாவிற்கு மனோதிடத்தினைத் தரட்டும்....

  பதிலளிநீக்கு
 13. என்ன சொல்வது .பட்ட துன்பங்கள் போதாதா. அந்தத் தாய்க்கு இந்த வருத்தம் பாக்கி இருந்ததா.என் அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு