தொடரும் தோழர்கள்

சனி, செப்டம்பர் 20, 2014

தம்பி இராமனா.இராவணனா?கருவுற்றிருந்த தாய் மகளிடம் கேட்டாள்

“கூறு மகளே!தம்பி வேண்டுமா,தங்கை வேண்டுமா?”

மகள் சொன்னாள் “தம்பியே வேண்டும்”

அம்மா வினவினாள் ”யாரைப் போல்?”

தயக்கமின்றிச் சொன்னாள் பெண்

“இராவணன் போல்” என்று

அதிர்ந்து போனாள் அன்னை

“என்ன உளறுகிறாய்,இராமன் என்பதற்கு

இராவணன் என்றாயோ?”

சிரித்தாள் மகள்.

”தங்கையின் அவமானம் தீர்க்க

தன் அரசையும் ஆயுளையும்

இழக்கத் துணிந்தவன்.

அன்னியன் மனைவியைக் கவர்ந்தாலும்

கை விரல் கூட வைக்காதவன்.

ஆனால் என்ன செய்தான் ராமன்

அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான்

அன்பு மனைவி தன்னை.

எவனோ பழி சொல்லக்கேட்டு

கருவுற்ற மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான்

அம்மா!நீயும் ஒரு சகோதரி,ஒரு மனைவி

நீயே சொல்!இராவணன் போல் தம்பி வேண்டுவதில்

தவறெதேனும் உண்டோ?”


(கருத்து இணையத்திலிருந்து.கால மாற்றம் ;இளைஞர்களின் கருத்து மாற்றம்.பார்வை மாற்றம்,புரிதல் மாற்றம்!!)


10 கருத்துகள்:

 1. இக்கால இளைஞர்களின் பார்வையில் இந்த புதிய கருத்து சரி என்றே தோன்றுவதில் வியப்பேதுமில்லை! ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரு வேறு பார்வை உண்டல்லவா? நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. மாற்றுக்கருத்து கண்டு மயங்கி விட்டேன்,,, இதில் தவறிருப்பதாக தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 3. இராவணனை வில்லனாவே பார்த்தா எப்படி ?அவர் கேரக்டரே இப்போதானே புரியத் தொடங்கியிருக்கு ?
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. மாற்றுச் சிந்தனை. இராவணன் ஒரு சிவபக்தன். வீணை இசைக் கலைஞன் . நல்ல அரசன். எல்லாம் இருந்தென்ன , பெண்ணாசை பேரைக் கெடுத்ததே

  பதிலளிநீக்கு
 5. நெத்தியடி வினாக்கள்...
  அந்த அம்மாவால் பதில் சொல்ல முடியாது...
  இன்றைய இளையோர்கள் அறிவில் சிறந்தவர்கள்
  எனபதற்கு இன்னுமொரு உதாரணம் இந்தக் கதை..
  யோசித்து பார்த்தால் குழந்தை சொல்வதும் சரி தானே...

  பதிலளிநீக்கு
 6. நல்ல கவிதை. உண்மை தான் இராவணன் ஒரு நல்ல மனிதர்.

  பதிலளிநீக்கு
 7. சிந்திக்க வைத்த சிறப்பான வினா !விடையும் பொருந்தும் என்றே மனம்
  சொல்கிறது எங்கள் குறும்புத் தாத்தாவே பகிர்வுக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 8. இது தான், இந்த மாற்றுச்சிந்தனைதான், பெரியார் சொன்ன பகுத்தறிவு !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா...

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

  நன்றி

  பதிலளிநீக்கு