தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 18, 2014

ஐ!

ஐ என்ற தனி எழுத்து எதைக் குறிக்கும்?

வியப்பின் வெளிப்பாடாக இதைக் கொள்ளலாம்.

ஏதாவது வியப்பூட்டும் ஒன்றைப் பார்த்தால் “ஐ”என்று சொல்வோம் இல்லையா?
ஒரு புலவர் ஒரு செல்வந்தரிடம் பண உதவி கேட்டுச் சென்றார்.


அவர் மறுநாள் வரச்சொல்ல புலவரும் சென்று”ஐயா நூறு ரூபாய் தருகிறேன் எனச் 
சொன்னீர்களே” என்றார்.

பணக்காரர் எதோ வேலையாக இருக்கவே ,கைகாட்டிப் புலவரை இருக்கச்சொன்னார்

சிறிது நேரம் சென்றது.

புலவர் “ஐயா இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்களே” என்றார்.

மற்றவர் புலவரை ஒரு மாதிரியாகப் பார்ர்க்க,புலவர் சொன்னார்”முன்னூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்”

செல்வந்தரின் பார்வையில் கோபம் தெரிந்தது

இப்போது புலவர் சொன்னார்”நானூறு ரூபாய் தருகிறேன் எனச் சொன்னீர்கள்”

மற்றவர் சொன்னார் ”என்ன புலவரே?நூறு ரூபாய்தானே சொன்னேன்?”

புலவர்  சொன்னார் ”நூறு ருபாய் தருகிறீர்களா?”
செல்வந்தர் புரிந்து கொண்டார்.

சொன்னார்”அறு நூறு ரூபாய் தருகிறேன்”

பணம் எடுக்கச் செல்லுமுன் சொன்னார்”எழுநூறு ரூபாய் தருகிறேன்”

பணத்தைக் கொடுத்துச் சொன்னார்”எண்ணூறு ரூபாய் இதோ”

புரிந்ததா?!

21 கருத்துகள்:

 1. அருமையான சிலேடை விளையாட்டு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. எண்ணியபின் புலவர் சொன்னார் ஐயா "தொண்ணூறு" ரூபாய்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. எனக்குத்தெரிந்த இலக்கணப்படி ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமையின் உருபு. ஆனால் இதற்கு பொருள் புலவர் அய்யா அவர்கள் தான் சொல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐ ஆல் கு இன் அது கண் விளிவேற்றுமை!
   இந்த ஐ வேறு!ஐ நல்லாருக்கே என்று சொல்வதில்லையா ஐயா? அந்த ஐ!
   நன்றி

   நீக்கு
 4. என்னே அழகான வார்த்தை விளையாட்டு... அசத்தல்.

  பதிலளிநீக்கு
 5. அருமை அருமை
  இப்படிக் கெட்டிக்கார புலவரிடம் மாட்டினால்..
  ஆசனும் ஆண்டிதான்
  சுவாரஸ்யமான பதிவு
  அதுவும் ஊரெல்லாம் ஐ பேச்சாக இருக்கையில்...

  பதிலளிநீக்கு
 6. எண்ணுறு ரூபாய் இதோ என்று வெறும் நூறு ரூபாவைத் தான் கொடுத்தாரா?

  என்னமா சொல்லால் விளையாடி இருக்கிறார்....!!

  பதிலளிநீக்கு
 7. விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதை தான் போல...
  உங்கள் பதிவின் சுவாரஸ்யமே தனி தான் ஐயா...
  கடைசியில் பணக்காரர்... ஒரு நூறு கொடுத்து
  எண்ணூறு (என்னுடைய நூறு)
  என்று சொலவது உச்சகட்டம்...

  பதிலளிநீக்கு