தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 21, 2014

அம்மாவின் பொய்கள்!




அம்மா!

அன்போடு அரவணைப்பாள்!

பசி அறிந்து அமுதளிப்பாள்

நல் வழி நடத்திச் செல்வாள்

ஆனால் அவளே பொய்யும் சொல்வாள்!

அன்றொரு நாள்

என் பசிக்கு அவள் உணவளித்த நேரம்

ஏக்கப்பார்வை பார்த்தேன் 

உணவு போதாமல்

எடுத்து எனக்களித்தாள் 

எஞ்சிய உணவனைத்தும்

என்னம்மா உனக்கு 

ஒன்றுமில்லையே என்றேன்

அவள் சொன்னாள்

என்னவென்று தெரியவில்லை

எனக்கு ஏனோ பசியே இல்லை!

அவள் சொன்ன பொய்!

தீபாவளி நேரம்!

எனக்கு உடை வாங்குதற்காய்

மற்றவர் உடைகளைத்தைத்து

நேரத்தில் கொடுக்க முனைந்து

கண்விழித்து வேலை செய்தாள்!

கண் விழித்த நான்  சொன்னேன்

”தூங்கம்மா,களைத்திருப்பாய்”!

சொன்னாள் சிரித்தவாறு

உறக்கமும் வரவில்லை

களைப்பும் அறவே இல்லை!  

அம்மா சொன்ன பொய்!

ஆம்

வள்ளுவத்தின் வழி நடந்தாள்.....!

”பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கும் எனின்”

24 கருத்துகள்:

  1. மற்றவர்களை சொன்னால் கூட அதில் ஒரு சிறு சுயநலம் இருக்கும்... இந்த குறளுக்கு இதை விட ஒரு உதாரணம் சொல்ல முடியாது ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. குறளுக்கு ஏற்ற அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா .எப்படி
    உள்ளீர்கள் ?...அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலந்தான் அம்மா! எழுதுவதில் ஏனோ மனம் ஒட்ட மறுக்கிறது!எனவே இடைவெளி.
      நன்றி

      நீக்கு
    2. முடிந்தவரை எழுதுங்கள் ஐயா தங்களின் ஆக்கங்களைக் காணும் போது
      தாங்கள் இன்னமும் எங்கள் அன்பு வலைக்குள் நலமாக இருக்கின்றீர்கள்
      என்று உணர முடிகிறது .உடல் நலத்திலும் அக்கறை எடுங்கள் ஐயா .

      நீக்கு
  3. அன்பு ஐயாவிற்கு வணக்கம்
    அம்மாவின் அழகான அன்பை கவிதையாய் தந்ததோடு குறளையும் இணைத்த விதம் மிக மிக அற்புதம் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன்

    பதிலளிநீக்கு
  5. இந்த தலைப்பி‌ல் பதிவிட்ட உங்களுக்கு தைரியம் அதிகம் தான். அம்மா எப்போதும் வள்ளுவர் வழி நடப்பவர் தான். நான் சொல்லுவது நம்மைப் பெற்ற அம்மாவை! பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  6. அம்மாவின் பொய்கள் இன்னும் அநேகம் உண்டு, அம்மாவின் தியாகங்கள் அளவிட முடியாது !

    பதிலளிநீக்கு
  7. கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை விடச் சிறந்த பாராட்டு எனக்கு வேறென்ன இருக்க முடியும்?
      நன்றி

      நீக்கு
  8. குறளுக்கு அழகான விளக்கமாய் அம்மாவின் பொய்கள்...
    அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  9. வள்ளுவத்தாயை அறிமுகப் படுத்தி விட்டீர்கள் !
    எழுத மனம் வரவில்லை என்றால் ,எங்களைப் போன்றோரை ஊக்குவிக்க வாருங்கள் >>எதுவும் இங்கே நிரந்தரம் இல்லையே !
    என் வேண்டுதல் ...தினசரி உங்களிடம் இருந்து பதிவு !
    த ம 2
    http://www.jokkaali.in/2014/02/blog-post_22.html
    சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?ஆனால் என் சைட்டை பார்க்க நான் அழைக்கிறேன்!
    த ம 5

    பதிலளிநீக்கு
  10. ஐயா வணக்கம். அண்மையில் நான் சென்னை வந்திருந்தபோது திரு.வே. நடனசபாபதியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் உங்களை பற்றிக் குறிப்பிட்டர்ர். அதுவே என்னை இங்கு வரவழைத்தது. அம்மாவின் பரிணாமங்களில் நலம் பெயக்க பொய் சொல்லும் தாய் பற்றி எழுதி இருப்பது ரசித்தேன். இன்னும் இரு விதமாக நான் எழுதிய பதிவைப் படிக்க அழைக்கிறேன்முதலில் இன்றைய அம்மா
    gmbat1649.blogspot.in/2013/05/blog-post_17.html ( நீ எங்கே இருக்கிறாய் அம்மா.)இன்னொன்று ஒரு மகனின் எண்ணங்கள் அம்மா என்ற தலைப்பில்
    gmbat1649.blogspot.in/2011/12/blog-post_10.html படித்துப் பாருங்கள். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. உடன் வந்து என் பதிவுகளைப் படித்துக் கருத்திட்டதற்கு நன்றி. அம்மா குறித்து என் பேரன் ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழ்ப் படுத்தியுள்ளேன்

    பதிலளிநீக்கு
  12. அம்மாவின் பொய்கள்..... ஒவ்வொரு அம்மாவும் சொல்லும் பொய்கள்!

    நல்ல கவிதை ஐயா..... சென்னையில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு