தொடரும் தோழர்கள்

புதன், டிசம்பர் 25, 2013

நல்ல மேய்ப்பர்



ஆடுகள்!

மந்தை மந்தையாய்

ஒன்றோடொன்று நெருக்கியடித்து

ஒன்று போல் சென்றாலும்

எல்லாம் ஒன்றல்ல!

குறும்புக்கார ஆடுகள்

வேலி தாண்டிச் சென்று

மேயத் துடிப்பவை

முட்டி விரட்டுபவை

முன்கோபம் கொண்டவை

சாதுவாய்ச் செல்பவை

சண்டைக்கு நிற்பவை

ஆடுகள் பலவிதம்

எல்லாவற்றையும்

மேய்ப்பன் அறிவான்

அவை அவன் சொல்வதைக்

கேட்பினும்,கேளாதிருப்பினும்

 அவனை நம்பினும்,நம்பாவிடினும்

அவை பத்திரமாயிருக்கும்

மேய்ப்பன் இருக்கிறான்

ஏனெனில்

காப்ப்பது அவன் தொழில்

ஆடுகள் மட்டுமல்ல

மாடுகளும்தான்

இடையனின் குரலுக்கும்

குழலுக்கும் மயங்குபவை

அவன் பார்வையில்

பயமற்றுத் திரிபவை

காப்பவர்

எவராயினும்

காப்பது அவர்  தொழில்

எனவே ஆடுகளும் மாடுகளும்

பாதுகாப்பாய்,பயமற்று!


என் மனங்கனிந்த இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

7 கருத்துகள்:

 1. அவனிருக்க பயமேன்! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. //அவன் பார்வையில் பயமற்றுத் திரிபவை. காப்பவர் எவராயினும் காப்பது அவர் தொழில்//

  சந்தோஷம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 5. வணக்கம்!

  தமிழ்மணம் 1

  இன்றுதான் உய்கள் வலையை ஆடாமல் பார்க்க முடிந்தது

  தக்க சமயத்தில் தந்த கவிதையில்
  சொக்கும் மனமே சுருண்டு

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 6. அருமை.

  த.ம. +1

  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 7. அருமையான கிறிஸ்துமஸ் கவிதை. பேத்தியின் வருகையால் இணையமே மறந்து போயிருந்தது. இன்றுதான் இதை படிக்க நேர்ந்தது. எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு