தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 11, 2011

நாசமாய்ப் போகட்டும்!

என் நெருங்கிய தோழனின் திருமணம்.சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஊரில் பணி புரிந்து வந்தோம்.அந்த ஊரில் பொழுதுபோக்கு, திரைப் படம்தான்.அநேகமாக எல்லாப் படங்களையும் சேர்ந்தே பார்ப்போம்.மற்ற மாலைகளில் நாங்கள் நிம்மதியாய் அமர்ந்து அரட்டை அடிப்பது சிவன் கோவிலின் வெளிப் பிரகாரத்தில்.பின் நான் வேறு ஊருக்குப் போய்விட்டேன்.அவனும் இட மாற்றம் பெற்று விட்டான்.ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம்.அவனுக்குத் திருமணம்;அதுவும் நான் பணி புரிந்து வந்த அதே ஊரில்;பெண் அந்த ஊர்.

ஒரு திருமண மண்டபத்தில் திருமணம்;சென்றேன்.மாப்பிள்ளைக் களையுடன் மண மேடையில் என் நண்பன்.அருகில் சென்று கொஞ்சம் கலாய்த்தேன்.பின் என் பார்வையைச் சுழல விட்டேன்.என் கண்கள் அவன் தாயைத் தேடின.கணவனை இழந்தபின் தன் மகனை வளர்த்து ஆளாக்கிய தாய்;அவன் வீட்டுக்கு நான் செல்லும்போதெல்லாம் தன் மகன் போலவே என்னிடம் அன்பு காட்டும் தாய்.அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்”குமரன்(என் நண்பன்) இவ்வளவு சாதுவாக,சாந்தமாக இருப்பதில் அதிசயம் ஏதுமில்லை என்று.அவர்களைக் காணவில்லை.

அவனிடம் கேட்டேன்,”அம்மா எங்கே?”

”அந்த அறையில் இருக்கிறார்கள்” அவன் சொன்னான்.

அங்கு ஏதோ வேலையாக இருப்பார்கள் என்று நினைத்தேன்.

”பார்த்து விட்டு வருகிறேன்”

அவனிடம் சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

அறைக்குள் நுழைந்தேன்.

அவர்கள் அங்கு அமர்ந்திருந்தார்கள்,தனியாக.

வெளியில் இருக்கும் ஆரவாரத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் ஏதும் சம்பந்தமற்றவர்களாக.

வழக்கமாய் அணியும் அதே வெள்ளைச் சேலை.நெற்றியில் திருநீறு.

“வாப்பா,குமரனைப் பார்த்தியா” விசாரித்தார்கள்.

“பார்த்துவிட்டேன் அம்மா!நீங்கள் என்ன இங்கே இருக்கிறீர்கள்”

”நான் அங்கெல்லாம் வரக் கூடாதப்பா” யதார்த்தமாகச் சொன்னர்கள்.

ஒரே மகனின் திருமணம்,அதைக் காண அத்தாய்க்கு உரிமையில்லையா?

மகனுக்குத் திருமணம் என்ற மகிழ்ச்சி முகத்தில் இருந்தாலும் அந்த உள்ளம் அழுது கொண்டுதான் இருந்திருக்கும்,அதைக் காண முடியாத துர்ப்பாக்கியத்தை எண்ணி.

என் கண்களில் கண்ணீர் வந்தது துடைத்துக் கொண்டேன்.

(இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும்,இந்த வயதிலும், இதை எழுதும்போது கண்ணீர் வருவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.)

“போப்பா!இப்ப,தாலி கட்டிடுவான்,போய் அவன் கூட இரு”

வெளியே வந்தேன்.அந்த மண்டபத்தில் நுழைந்தபோது இருந்த மகிழ்ச்சி தொலைந்து போயிருந்தது.ஒரு இயந்திரம் போல்,ஒரு பொய்ச் சிரிப்புடன் மண மேடை அருகில் நின்றேன்.தாலி கட்டியாகி விட்டது.

உறவினர்கள்,மணமக்களுக்குத் திருநீறு வைக்கத் தொடங்கினர்.நான் கொஞ்சம் விலகியே நின்றேன்.
குமரன் அழைத்தான்”சந்திரசேகரன்,திருநீறு வையுங்க!”

என் உள்ளம் ஓலமிட்டது”நீ தாலி கட்டும்போது உன் மீது அட்சதை போட்டு ஆசி வழங்க வேண்டிய தெய்வம் அடுத்த அறையில் ,அதைப் பார்க்கும் பாக்கியம் கூட இல்லாமல் தனித்து இருக்கிறதே,நண்பா!”

உணவருந்தினேன் ;விடை பெற்றுப் புறப்பட்டேன்.

ஒரு தாயைத் தன் ஒரே மகனின் திருமணத்தைப் பார்க்க விடாமல் தடுத்ததுஒரு சமூகத்தின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,மூடப் பழக்க வழக்கங்கள் என்றால்-----

அவை நாசமாய்ப் போகட்டும்!

(இது நடந்தது,சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?தெரிந்தால் சொல்லுங்கள்)

46 கருத்துகள்:

 1. ஒரு தாயைத் தன் ஒரே மகனின் திருமணத்தைப் பார்க்க விடாமல் தடுத்ததுஒரு சமூகத்தின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,மூடப் பழக்க வழக்கங்கள் என்றால்-----

  அவை நாசமாய்ப் போகட்டும்!--///சரியான சவுக்கடி..

  பதிலளிநீக்கு
 2. இப்போதெல்லாம் இப்படி இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டதே!. விதவையே ஆனாலும் வீட்டில் நல்ல காரியங்களி முன் நின்று நடத்தும் பழக்கம் பல இடங்களில் வந்துவிட்டன. இளம் வயதில் /நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள் எல்லாம் கூட இப்போது முன்பு போல "விதவைக்கோலங்கள்" போட்டுக்கொள்வதில்லை. ஏன் ? நெற்றியில் பொட்டும்,தலையில் மலர்கள் கூட சூடிகொள்கிரர்களே!. நல்ல மாற்றம் தானே!!

  பதிலளிநீக்கு
 3. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // vadaya?//

  சுடச் சுட உங்களுக்குத்தான்!

  பதிலளிநீக்கு
 4. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // ஒரு தாயைத் தன் ஒரே மகனின் திருமணத்தைப் பார்க்க விடாமல் தடுத்ததுஒரு சமூகத்தின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,மூடப் பழக்க வழக்கங்கள் என்றால்-----

  அவை நாசமாய்ப் போகட்டும்!--///சரியான சவுக்கடி..//

  நன்றி கருன்

  பதிலளிநீக்கு
 5. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //இப்போதெல்லாம் இப்படி இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டதே!. விதவையே ஆனாலும் வீட்டில் நல்ல காரியங்களி முன் நின்று நடத்தும் பழக்கம் பல இடங்களில் வந்துவிட்டன. இளம் வயதில் /நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள் எல்லாம் கூட இப்போது முன்பு போல "விதவைக்கோலங்கள்" போட்டுக்கொள்வதில்லை. ஏன் ? நெற்றியில் பொட்டும்,தலையில் மலர்கள் கூட சூடிகொள்கிரர்களே!. நல்ல மாற்றம் தானே!!//

  உண்மை. ஆனால் மாற்றம் எல்லாத்தரப்பிலும்,நிலைகளிலும்,சமூகத்திலும் வந்து விட்டதா?
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாணிக்கம்!

  பதிலளிநீக்கு
 6. (இது நடந்தது,சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?தெரிந்தால் சொல்லுங்கள்


  .....எத்தனையோ விஷயங்கள் சமீப காலங்களில் மாறி இருக்கின்றன. இதுவும் மாறி இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. Chitra சொன்னது…

  //.....எத்தனையோ விஷயங்கள் சமீப காலங்களில் மாறி இருக்கின்றன. இதுவும் மாறி இருக்க வேண்டும்.//
  நம்புகிறேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 8. நிறைய மாற்றங்கள் அடைந்து விட்டது. எனினும், இன்னும் சிலர் மனதில்(கிராமத்தில்)இந்த மாதிரி இருப்பதாகவே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 9. அமைதி அப்பா சொன்னது…

  //நிறைய மாற்றங்கள் அடைந்து விட்டது. எனினும், இன்னும் சிலர் மனதில்(கிராமத்தில்)இந்த மாதிரி இருப்பதாகவே தோன்றுகிறது.//
  நீங்கள் சொல்வது சரியென்றே எண்ணுகிறேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 10. மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மணமகன் உறுதியாகச் சொல்லியிருக்க வேண்டும். தாயின் முன்னிலையில் தான் தாலி கட்டுவேன் என்று.

  பதிலளிநீக்கு
 11. //ஒரே மகனின் திருமணம்,அதைக் காண அத்தாய்க்கு உரிமையில்லையா? //

  கண்ணீரும் கோபமும்தான் வருகிறது...

  பதிலளிநீக்கு
 12. //(இது நடந்தது,சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?தெரிந்தால் சொல்லுங்கள்)//

  இப்போ எங்க ஊர்ல எல்லாம் இது மாறிவிட்டது தல....

  பதிலளிநீக்கு
 13. //கக்கு - மாணிக்கம் கூறியது...
  இப்போதெல்லாம் இப்படி இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டதே!. விதவையே ஆனாலும் வீட்டில் நல்ல காரியங்களி முன் நின்று நடத்தும் பழக்கம் பல இடங்களில் வந்துவிட்டன. இளம் வயதில் /நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள் எல்லாம் கூட இப்போது முன்பு போல "விதவைக்கோலங்கள்" போட்டுக்கொள்வதில்லை. ஏன் ? நெற்றியில் பொட்டும்,தலையில் மலர்கள் கூட சூடிகொள்கிரர்களே!. நல்ல மாற்றம் தானே!!//

  சரியாக சொன்னீர்கள் கக்கு மக்கா....

  பதிலளிநீக்கு
 14. இப்போதெல்லாம் இது குறைந்து விட்டது. இனி வரும் காலங்களில் முற்றிலும் மறைந்துவிடும்.

  பதிலளிநீக்கு
 15. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மணமகன் உறுதியாகச் சொல்லியிருக்க வேண்டும். தாயின் முன்னிலையில் தான் தாலி கட்டுவேன் என்று.//
  சரியாகச் சொன்னீர்கள்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஒரே மகனின் திருமணம்,அதைக் காண அத்தாய்க்கு உரிமையில்லையா? //

  //கண்ணீரும் கோபமும்தான் வருகிறது...//
  அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட உனர்வும் அதுவே!
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // இப்போ எங்க ஊர்ல எல்லாம் இது மாறிவிட்டது தல....//
  மகிழ்ச்சியே!

  பதிலளிநீக்கு
 18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கக்கு - மாணிக்கம் கூறியது...
  இப்போதெல்லாம் இப்படி இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டதே!. விதவையே ஆனாலும் வீட்டில் நல்ல காரியங்களி முன் நின்று நடத்தும் பழக்கம் பல இடங்களில் வந்துவிட்டன. இளம் வயதில் /நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள் எல்லாம் கூட இப்போது முன்பு போல "விதவைக்கோலங்கள்" போட்டுக்கொள்வதில்லை. ஏன் ? நெற்றியில் பொட்டும்,தலையில் மலர்கள் கூட சூடிகொள்கிரர்களே!. நல்ல மாற்றம் தானே!!//
  //சரியாக சொன்னீர்கள் கக்கு மக்கா....//

  நல்லாத்தான் சொன்னாரு!

  பதிலளிநீக்கு
 19. பாலா கூறியது...

  //இப்போதெல்லாம் இது குறைந்து விட்டது. இனி வரும் காலங்களில் முற்றிலும் மறைந்துவிடும்.//
  மகிழ்ச்சி தரும் மாற்றமே!
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 20. >>
  ஒரு தாயைத் தன் ஒரே மகனின் திருமணத்தைப் பார்க்க விடாமல் தடுத்ததுஒரு சமூகத்தின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,மூடப் பழக்க வழக்கங்கள் என்றால்-----

  அவை நாசமாய்ப் போகட்டும்!

  செம லைன்

  பதிலளிநீக்கு
 21. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  // >>
  ஒரு தாயைத் தன் ஒரே மகனின் திருமணத்தைப் பார்க்க விடாமல் தடுத்ததுஒரு சமூகத்தின் சடங்குகள்,சம்பிரதாயங்கள்,மூடப் பழக்க வழக்கங்கள் என்றால்-----

  அவை நாசமாய்ப் போகட்டும்!

  செம லைன்//

  மிக்க நன்றி சி.பி.எஸ்!

  பதிலளிநீக்கு
 22. படிக்கும்போது கண்ணீர் திரண்டது. நல்ல வேளை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் என்றதும் ஓர் ஆறுதல். இப்போது மாறியிருக்கும்...நிச்சயமாக!

  பதிலளிநீக்கு
 23. கே. பி. ஜனா... சொன்னது…

  //படிக்கும்போது கண்ணீர் திரண்டது. நல்ல வேளை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் என்றதும் ஓர் ஆறுதல். இப்போது மாறியிருக்கும்...நிச்சயமாக!//

  முழுவதும் மாறாவிட்டாலும், பெருமளவுக்கு மாறியிருக்கும் என்றே நம்புகிறேன்;நண்பர்களும் அதையே சொல்கிறார்கள்.
  நன்றி ஜனா!

  பதிலளிநீக்கு
 24. //சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?///

  I can reply for this. In my marriage we kept her grandma in the first row..

  பதிலளிநீக்கு
 25. Stock கூறியது...

  //சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?///

  //I can reply for this. In my marriage we kept her grandma in the first row..//

  good.definitely times have changed.even in those days all communities were not following this practice.
  thank you!

  பதிலளிநீக்கு
 26. அந்த காலத்தில்தான் எத்துணை மூட பழக்கங்கள். படிக்கும் பொது மனது மிகவும் கனத்து போனது ... நல்ல வேளை இந்த காலத்தில் இத்தகைய காட்சிகளை காண முடியாது . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 27. தங்கள் நினைவுகள் பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 28. தற்போது இந்த சூழ்நிலை கண்டிப்பாக மாறி விட்டது..

  பதிலளிநீக்கு
 29. Vasu சொன்னது…

  //அந்த காலத்தில்தான் எத்துணை மூட பழக்கங்கள். படிக்கும் பொது மனது மிகவும் கனத்து போனது ... நல்ல வேளை இந்த காலத்தில் இத்தகைய காட்சிகளை காண முடியாது . //
  வாங்க வாசு!எங்கே ரொம்ப நாளாக் காணும்?
  காலம் மாறத்தானே வேண்டும்?
  நன்றி!

  பதிலளிநீக்கு
 30. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //தற்போது இந்த சூழ்நிலை கண்டிப்பாக மாறி விட்டது..//

  மாறித்தானே ஆக வேண்டும்!

  பதிலளிநீக்கு
 31. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //தங்கள் நினைவுகள் பகிர்வுக்கு நன்றி..//

  நன்றி சௌந்தர்!
  (தேர்வுகள் முடிந்து விட்டனவா?)

  பதிலளிநீக்கு
 32. இப்பொழுது நிறையவே மாறியிருக்கிறதுதான்.ஆனால் சமுதாயம் அவர்களை பழிப்பதை இன்னும் நிறுத்தவில்லை.இதைபற்றி அக்கறை பட வேண்டியவர்கள் இலவசங்களில் மூழ்கிதிளைப்பதும்,நம்மை முட்டாள்களக்குவதும்தான் தொடர்கிறது.

  பதிலளிநீக்கு
 33. //இது நடந்தது,சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?தெரிந்தால் சொல்லுங்கள்//

  ஆமா மாறி இருக்கு

  பதிலளிநீக்கு
 34. விமலன் கூறியது...

  //இப்பொழுது நிறையவே மாறியிருக்கிறதுதான்.ஆனால் சமுதாயம் அவர்களை பழிப்பதை இன்னும் நிறுத்தவில்லை.இதைபற்றி அக்கறை பட வேண்டியவர்கள் இலவசங்களில் மூழ்கிதிளைப்பதும்,நம்மை முட்டாள்களக்குவதும்தான் தொடர்கிறது.//
  சரியாகச் சொன்னீர்கள்,விமலன்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 35. நசரேயன் கூறியது...

  //இது நடந்தது,சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்.இப்போது இதெல்லாம் மாறியிருக்குமா?தெரிந்தால் சொல்லுங்கள்//

  //ஆமா மாறி இருக்கு//
  நல்ல செய்திதான்.
  வருகைக்கு நன்றி,நசரேயன்!

  பதிலளிநீக்கு
 36. கவலையே வேண்டாம் சார்! முழுவதுமா மாறியாச்சு!...:)

  பதிலளிநீக்கு
 37. இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது. இருந்தாலும் பழைய நினைவுகள் மனதினை வருத்தத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 38. தக்குடு சொன்னது…

  //கவலையே வேண்டாம் சார்! முழுவதுமா மாறியாச்சு!...:)//

  நன்றி தக்குடு!

  பதிலளிநீக்கு
 39. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது. இருந்தாலும் பழைய நினைவுகள் மனதினை வருத்தத்தான் செய்கிறது.//
  உண்மை,வெங்கட்.எத்தனை ஆண்டுகளானாலும் அதை மறக்க முடியவில்லை.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 40. நண்பருக்கு வணக்கம் இதை வாசித்தபோளுது எனக்கும் இதயம் கனத்துப் போனது . ஆனால் ஒன்று மற்றவர்கள்தான் எதார்த்தமாக சொல்கிறார்கள் என்றால் உங்களின் நண்பருக்கு சுய அறிவு என்பது எதுவும் இல்லாமல் போனது எண்ணி வெட்கப் படுகிறேன் . பொதுவாக இன்னும் நமது கலாச்சாரத்தில் பலர் பிறருக்காகத்தான் வாழ்கிறார்கலேத் தவிர தங்களுக்காக யாரும் வாழ்வதில்லை அதுதான் இந்த அவல நிலை அந்தத் தாயிற்கு !

  பதிலளிநீக்கு
 41. !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ கூறியது...

  // நண்பருக்கு வணக்கம் இதை வாசித்தபோளுது எனக்கும் இதயம் கனத்துப் போனது . ஆனால் ஒன்று மற்றவர்கள்தான் எதார்த்தமாக சொல்கிறார்கள் என்றால் உங்களின் நண்பருக்கு சுய அறிவு என்பது எதுவும் இல்லாமல் போனது எண்ணி வெட்கப் படுகிறேன் . பொதுவாக இன்னும் நமது கலாச்சாரத்தில் பலர் பிறருக்காகத்தான் வாழ்கிறார்கலேத் தவிர தங்களுக்காக யாரும் வாழ்வதில்லை அதுதான் இந்த அவல நிலை அந்தத் தாயிற்கு !//

  நண்பனின் சுபாவமே அதுதான்; மிக சாது;யாரையும் அதிர்ந்து ஒரு சொல் சொல்லாதவன்.அங்கு அவன் சூழ்நிலையின் கைதி.என் கோபமெல்லாம் தனி மனிதர்கள் மீதல்ல;அந்தச் சமூகப் பழக்கங்கள் மீது!உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது!நண்பர்கள் பலர் சொல்கி றார்கள்,மாறிவிட்டது என்று.மகிழ்ச்சி.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்!

  பதிலளிநீக்கு
 42. இப்போது எல்லாம் மாறிவிட்டது. மேடையிலேயே இருக்கை போட்டு தாயை உட்காரவைத்து அவரிடம் ஆசி பெற்று, பின் திருமணம் நடந்து இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது.

  கண் மூடிப்பழக்கமெல்லாம் மண் மூடிபோய்விட்டன!

  பதிலளிநீக்கு
 43. வே.நடனசபாபதி கூறியது...

  //கண் மூடிப்பழக்கமெல்லாம் மண் மூடிபோய்விட்டன!//

  போகத்தானே வேண்டும்!
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 44. ஓட்டுக்குள் உடல்சுருக்கி உயிர்வாழும் ஆமையென
  வீட்டுக்குள் நாளெல்லாம் வெந்துவிழப் பிறந்தோமா ?

  அடங்கிக் கிடப்பதற்கும் அடிமையென வாழ்வதற்கும்
  முடங்களா நாமெல்லாம் ? முகங்கள் நமக்கிலையா ?

  ஆடவனுக் கொருநீதி அளிக்கிக்ன்ற தேசத்தின்
  கேடுகெட்ட சட்டங்கள் கிழிந்தொழிந்து போகட்டும்.

  பெண்ணினத்தை அடிமையென்னும் பேய்க்கூட்ட வாதங்கள்
  மண்ணுக்குள் மண்ணாகி மட்கட்டும் ! மாளட்டும் !

  அறைக்குள்ளே அடிமைகளாய் அடைபட்டுக் கிடப்போர்கள்
  சிறைக்கதைவை உடைத்தெறிந்து சிறகுதனை விரிக்கட்டும்.
  \
  --- சிலம்பின் புலம்பல் என்னும் என் கவிதையின் இந்த இறுதி வரிகள் தான் என் நினைவுக்கு வந்தன.
  காலம் மாறி விட்டது சார். என் தந்தை இறந்தபின் தான் என் கடைசித் தம்பியின் திருமணம் நடந்தது. என் தாயை மேடையில் முன்னிறுத்தித்தான் திருமணம் நடத்தினோம். அவளை விட வாழ்த்த தகுதியானவர் யார் ?

  விரிக்கும் சிறகுதனை வெட்டத் துடிப்போர்கள்
  எரிக்கும் நெருப்புக்கு இரையாகிப் போகட்டும்.

  பதிலளிநீக்கு
 45. @சிவகுமாரன்
  இந்தப் பதிவுக்காக எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்-இப்படி ஒரு அருமையான கவிதையைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியதற்காக!
  இப்பழக்கம் சில சமூகங்களில்தான் இருந்தது.என் அண்ணனின்(என்னை விட 11 வயது மூத்தவர்) திருமண த்தின் போதே என் அன்னை நிகழ்ச்சிகளில் முன்னிருந்தார்!
  கவிதைக்கும் கருத்துக்கும் நன்றி,சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு