ராஜிக்கு இந்த ஜூலையில் 92
வயது முடிந்துவிட்டது.(2010)திடீரென்று உடல் தளர்ந்து விட்டது.முன்பே
தளர்ந்து விட்ட உடல்தான்.ஆனால் அவளது அசாத்திய மன உறுதி, தளர்ச்சியை
வென்று முன் நின்றது.ஆனால் அந்த மன வலிமை ஒரே நாளில் அகன்று விட்டது.எனவே உடல்
வென்று விட்டது.அவள் முன்பெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்”எங்காத்திலேயே
என் சித்திதான் 92 வயது வாழ்ந்தாள்.நானும் அதே மாதிரி
இருப்பேன் போலிருக்கு” என்று.எனவே அந்த 92 வயது என்பது மனோதத்துவ ரீதியாகவும் அவளைப் பாதித்திருக்கிறது.
இதுவரை,மெல்ல நடந்தாலும்,துணையின்றி நடந்த அவள்,இப்போது கம்பூன்றி நடக்கிறாள்.இரவில் பாத்ரூம் செல்லும்போது அவளது பிள்ளையின் அறிவுரைப்படி வாக்கர் உபயோக்கிறாள்.காது மந்தமாகி விட்டது.ஏதாவது படிக்க நினத்தாலும் நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை.ஆனாலும் காலையில் வழக்கம் போல் சீக்கிரம் குளித்து(நாற்காலியில் அமர்ந்துதான்), ஸ்லோகங்கள் சொல்கிறாள்.ராம ஜபம் செய்கிறாள்.அவளது பொழுது போக்கு கச்சேரி கேட்பது, ஓரிரண்டு தொலக்காட்சித்தொடர்கள் பார்ப்பது,பிடித்த திரைப்படம் ஒளிபரப்பப் பட்டால் பார்ப்பது-(அதுவும் பார்க்கும்போதே உறக்கம் வந்து விடுகிறது.)அடிக்கடி சோர்ந்து படுக்க வேண்டி நேர்கிறது.இப்போதெல்லாம் அவள் இறைவனிடம் வேண்டுவது ஒன்றுதான்”ஆண்டவா,நானும் கஷ்டப் படாமல்,மத்தவாளையும் கஷ்டப் படுத்தாமல் என்னைக் கொண்டு போயிடு”
இத்தகைய முதியவர்களின் உபாதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் எத்தகைய சோதனை என்பதை உணர்கிறோமா?இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?
இப்போதெல்லாம் ராஜி அடிக்கடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறாள்.
வாருங்கள்!நாமும் அவற்றில் பங்கு கொள்வோம்.