//காதலிலே
தோல்வியுற்றான் காளையொருவன்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்? காலம்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்? காலம்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?
அன்பு மயில்
ஆடலுக்கு மேடையமைத்தான்
துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான்
இன்பத்தினை விதிக்கு இரை கொடுத்தான்
இருந்தும் இல்லாத உருவெடுத்தான் //
துன்பமெனும் நாடகத்தை கண்டு ரசித்தான்
இன்பத்தினை விதிக்கு இரை கொடுத்தான்
இருந்தும் இல்லாத உருவெடுத்தான் //
கல்யாண பரிசு படத்துக்காக
பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்.
கடைசி வரி”இருந்தும் இல்லாத உருவெடுத்தான்” என்னை சிந்திக்க வைத்தது
சில பேரை எப்படி இருக்கீங்க
என்று கேட்டால் சொல்வார்கள்”ஏதோ உயிரோட இருக்கேன்”.
இருக்கிறார்கள்;அவ்வளவே
இருக்கிறார்கள்;அவ்வளவே
இருப்பது வேறு வாழ்வது வேறு
அவன் வாழ்வில் இழந்ததுதான்
எத்தனை?
காதலித்த பெண்ணின்
அவசர புத்தியால் படிப்பை இழந்தான்.
காதலியின் சகோதரி
ஆசையால் தன் காதலை இழந்தான்
மனைவியின்
சந்தேகத்தால் நிம்மதி இழந்தான்;
மீண்டும் அவள்
கிடைப்பாள் என்று எண்ணும்போது அவளையும் இழந்தான்.
இழப்பதற்கு எதுவுமே
இல்லை என்ற நிலையில் அவன் வாழ்வில் என்ன இருக்கிறது?
அவன் கோழை
அல்ல,தற்கொலை செய்து கொள்ள!
ஆனால் இனி வாழ
மாட்டான்
இருப்பான்
இருந்தும்
இல்லாதவனாக!
மன்மதனும் இருந்தும்
இல்லாமல் போனவன்தானே?
பஞ்ச மலர்க்கணைகளை
பரமன் மீது தொடுத்துப் பரமனின் நெற்றிக்கண் பார்வையால் சாம்பலாகிப் பின் உயிர்
பெற்று மனைவிக்கு மட்டுமே தெரியும் வரம் பெற்றவன்
எனவே இருந்தும்
இல்லாதவன்!
இறைவனை இருக்கிறான்
என்று சொல்வோரும் உண்டு;இல்லையென்று சொல்வோரும் உண்டு.
அவன் எங்கும்
நிறைந்தவன்; நிறைந்து இருப்பவன்.
அவன் இருக்கிறான் என்று நம்புபவர்கள் கூட அவனைக் காண முடிவதில்லை!
அவர்களுக்கும் அவன் இருந்தும் இல்லாத உருவெடுத்தவனாக இருக்கிறான்
அவன் இருக்கிறான் என்று நம்புபவர்கள் கூட அவனைக் காண முடிவதில்லை!
அவர்களுக்கும் அவன் இருந்தும் இல்லாத உருவெடுத்தவனாக இருக்கிறான்
அவன் நம்முள்ளே இருக்கிறான்
என்பதை உணர்ந்தவர் எத்தனை பேர்?
அங்கு இருக்கிறான்,இங்கு உறைகிறான் என்று அங்கும் இங்குமாய் அலைபவர்தாம் எத்தனை?
திருமூலர்
சொல்கிறார்.....
”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன் கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”--
இறைவனிடம் என்ன வேண்டிக் கொள்கிறோம்.? இன்னும் காடு,கழனி
வாங்க வேண்டும்,சொத்து பெருக வேண்டும் இது போன்ற உன் பல ஆசைகளைப்
பூர்த்தி செய்ய வேண்டும் என்றுகேட்கிறோம் அல்லவா?. அனைவருமே
அப்படித்தான். ஆனால் இறைவன் நம் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும், கூடத்திலும், கோவிலிலும்,வேடம் அணிந்த
ஆஷாடபூதிகளிடமும் இல்லை. ஆசையை விட்டவர் யாரோ அவருடைய நெஞ்சத்தில் இருக்கிறான்.
நெஞ்சம் என்பது ஆசைகளால் நிரம்பியிருந்தால் அந்த ஆசைகள் மூலம் வரும் மற்றவை--கோபம், பொறமை, வெறுப்பு இப்படிப் பலவும்- நிரம்பி அதனால் ஏற்படும் குப்பைகளும் சேர்ந்து
நிரம்பியிருக்கும்.ஏற்கனவே நிரம்பியிருக்கும் ஒரு இடத்தில் எப்படி வேறு ஏதாவது புக
முடியும்.எனவே மனதை ஆசைகளற்றுத் தூய்மை யாக வைத்துக் கொண்டால் அந்தக் காலி
இடத்தில் இறைவன் அமர்ந்து கொள்வான்”
ஆம்!அவன் இருக்கிறான்!ஆனால் இருந்தும்
இல்லாதவனாக இருக்கிறான்!
டிஸ்கி:நேற்று நண்பர் பார்த்தசாரதி பாடலின் இந்த வரியைக்
குறிப்பிட்டு,எவ்வளவு அருமையான வரி;இதை
அடிப்படையாக வைத்து ஏதாவது எழுதுங்கள் என்றார்.ஏற்றுக் கொண்டேன்.விளைவு இப்பதிவு!
இப்படி எதையாவது சொல்லி உசுப்பேத்தி
விடறாரு அவர்!