தொடரும் தோழர்கள்

நிகழ்வுகள்.புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள்.புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 01, 2015

இன்றைய இளைஞனும் நாளைய முதியவன்தான்!(உலக முதியோர் தினம்)

ஒரு இளைஞன்,தன் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்காக் காத்திருந்தான்.
ஒரு அழகிய விலை உயர்ந்த மகிழ்வுந்தைக் கடையில் கண்டு அது வேண்டும் என ஆசைப் பட்டான்.பண வசதியுள்ள தன் தந்தையிடம் தனக்கு அது பட்டம் பெறும் தினப் பரிசாக வேண்டும் எனத் தெரிவித்தான்.
தந்தை புன்னகைத்தவாறு தலையசைத்தார்.
பட்டம் பெற்றான்.
அன்று அவன் தந்தை அவனைத் தன் அறைக்கு அழைத்து அவனைப் பாராட்டி விட்டு அவன் கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துச் சொன்னார்”இது உனக்கு மிக உதவியாக இருக்கும்”.
அவன் அதை ஆர்வத்துடன் பிரித்தான்.உள்ளே ஒரு அழகிய பகவத்கீதைப் புத்தகம் இருந்தது.
அவனுக்கு அளவற்ற கோபம் வந்தது.
புத்தகத்தை மேசை மீது போட்டான்.
தந்தையை கண்டவாறு இகழ்ந்தான்.
வீட்டை விட்டு வெளியேறினான்.
ஆண்டுகள் ஓடின.
அவன் நல்ல வேலை,பணம்,வீடு குடும்பம் எல்லாம் பெற்றான்.
ஒரு நாள் அவன் தந்தை இறந்ததாகச் செய்தி வந்தது .
அவன் தன் ஊருக்குச் சென்றான்.
தந்தையின் அறைக்குச் சென்றபோது அந்த பகவத்கீதை கண்ணில் பட்டது.
அதை எடுத்துப் பிரித்தான்.அது திறந்த பக்கத்தில் ஓர் உறை ஒட்டப்பட்டிருந்தது.
அதன் மேல் என் அன்பு மகனுக்கு என எழுதப்பட்டிருந்தது.
அந்த உறையைப் பிரித்தான் .உள்ளே ஒரு மகிழ்வுந்து சாவியும், முழுத்தொகயும் செலுத்தி யதற்கான சீட்டும் இருந்தன.
அவன் கண்ணீர் விட்டான்.
………………………………..
ஆம்! நாம் பல நேரங்களில் நம் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதில்லை!
அன்பு மட்டுமல்ல;அவர்களின் உணர்வுகள் எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்களைக் காயப்படுத்தி விடுகிறோம்.
எத்தனையோ பெற்றோர் தங்கள் வறுமை நிலையிலும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை இயன்ற அளவு செய்து கொடுக்கிறார்கள்,தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு!
ஆனால் நாமோ பெரியவர்களான பின் அவற்றை மறந்து அவர்களை அலட்சியப் படுத்து கிறோம்.
முதியோர் வேண்டுவது மிகப்பெரிய வசதிகளை அல்ல.
அவர்கள் முக்கியத் தேவை அன்பு மட்டுமே.
 
 
அது கிடைத்தால் நீங்கள் குடிக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக 
உங்களுடன் காலம் கழிப்பார்கள்.
இந்த உலக முதியோர்  நாளில் ,எல்லா மகன்/மகள்களுக்கும் அந்த விழிப்புணர்வு வரட்டும்!
 
 
(மீள் பதிவு)
.......................................................

திங்கள், செப்டம்பர் 28, 2015

’கிரேசி ’கரடி!

 பார்த்தசாரதி எழுதுகிறார்........!

ஆரண்ய காண்டம்” பதிவுக்கு வாசகர்களின் எதிர்வினை அன்று ”நடந்த நிகழ்ச்சிகளை சுற்றியே இருந்தன; இதனை நினைத்து கரடி தன்னிரக்கம் அடைந்து மனக்கலவரத்துடன் என்னை அணுகியது. 



நான்   கிணற்ரிலிருந்து வெளியில் வந்தேனா இல்லையா என்று எந்த ஒரு வாசகரும் கவலைப் படவில்லையே. ஏன்?”

சிறுவாரி அனுபவங்கள் தான் அதற்கு முக்கிய காரணம்.  நீ அந்த விறகு வெட்டிகளுக்காக வருந்தவில்லையா

இல்லாமல் இல்லை. நீங்கள் தான் எதை எதனுடன் முடிச்சுப் போடுவது என்று தெரியாமல் எனக்கு வரவேண்டிய அனுதாபத்தை இருட்டு அடையச் செய்துவிட்டீர்கள். நான் உங்கள் பதிவாளர் சென்னை பித்தனிடம் புகார் செய்யப் போகிறேன் என்று மிரட்டியது.

கொஞ்சம் பொறு. இப்பொழுது உன் கதைக்கு மூன்று முடிவுகள் தருகிறேன். எந்த முடிவு சரியாக இருக்கும் என்று நீயே தேர்ந்தெடு. 

சொல்லுங்க, பிடிச்சிருக்கா பார்க்கறேன் என்றது கரடி.

முடிவு 1.

இரவு வந்தது. அன்று அமாவாசை. நட்சத்திரங்களின் வெளிச்சம் மேகமூட்டத்தில் மறைந்திருந்தது. ஒரு நாகப்பாம்பு கிணற்றுக்கள் இறங்கியது. சரசரவென்று சத்தம் கேட்டு கரடி பயந்தது. கிணற்றுக்கடியில் இருந்த மறைவிடத்தில் சென்று ஒளிந்து கொண்டது. அப்போது நல்ல பாம்பு மாணிக்கத்தை கக்கியது. கரடிக்கு கண்கள் கூசின. பரம்பொருளை பார்த்த உணர்வு. சிறிது நேரத்தில் அருகிலிருந்த ஒரு பொந்தில் பாம்பு நுழைந்து மறைந்தது. கரடி மாணிக்கத்தை எடுத்து வாளியில் போட்டுவிட்டு ஏணி ஏறி கானகம் விரைந்தது. மாணிக்கத்தை, உணவு, தண்ணீர், ஏணி முதலியவற்றை வைத்து உதவிய கிழவன் எடுத்துக் கொள்ளட்டுமே என்று கருணை உள்ளத்துடன் அப்படி செய்தது கரடி. 

முடிவை கேட்ட கரடி, நாங்ககெல்லாம் பாம்பை பார்த்து பயப்பட மாட்டோம்”.

நீ என் கதையின் ஹீரோ. நான் நினைச்ச மாதிரி தான் கதையின் போக்கு இருக்கும் என்ற என் பதில் கரடியை கோபமூட்டியது. பிறகு சாந்தப்படுத்திக் கொண்டு வேறு முடிவுகளை கேட்க ஆர்வம் காட்டியது.

இடக்கு முடக்கா பேசாதே அப்ப தான் மத்த முடிவுகளை சொல்லுவேன் என்று கரடியை கண்டித்துவிட்டு முடிவுகளை சொல்ல ஆரம்பித்தேன்.

முடிவு 2.

உலர்ந்த கிணற்றில் நிலவிய குளிர்ச்சி கரடியை சற்று ஒய்வெடுக்கத் தூண்டியது. அப்ப வேட்டு வெச்ச மாதிரி ஒரு பெரிய சத்தம். கிணற்றின் ஒரு பக்கம் வெடித்துப் போய் வாயு வேகமாக பீரிட்டுக் கொண்டு வெளியானது. கொஞ்ச நேரத்தில் கரடிக்கு மயக்கம் வந்தது. விஷவாயுவாக இருக்குமோ?! உடனே கரடி தத்தித் தத்தி ஏணியிலே ஏறி கிணத்துக்கு வெளியே வந்து சற்று தூரத்துக்கு தள்ளாடி நடந்து வெளியே விழுந்தது. வெள்ளி  முளைக்கும் நேரம். வாளியிலே தண்ணியும் சாப்பாடும் வச்ச கிழவன் வந்து உதவி பண்ணியதால கரடி ஒரு மிருக வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர வைத்தியம் பார்த்து கரடியை பிழைக்க வைத்து பின் அதை ஹைதராபாத் மிருக காட்சிச்  சாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

முடிவான முடிவு 2.

அமாவாசை. காரிருள். பேய்க் காற்று. கனக மின்னலுடன் சுறாவளி. கானகம் கரைப்புரண்டு வெள்ளக்காடாகியது. ஏணியில் ஏற முயலும் கரடி வழுக்கி விழுகிறது. கஷ்டப்பட்டு ஏறி வந்து நீச்சலடித்து தப்பி செல்ல முழு முயற்சி எடுக்கிறது. உத்தம வில்லன் படத்தில் வந்த உத்தமன் கமல்போல் சாகா வரம் பெற்றதா இந்த கரடி? அருவியில் இருந்து விழுந்து பரிசலில் மிதக்கிறது. 


கானகம் கடந்து பறிதவிக்கும் கரடி அடுத்த கானகத்தின் கரையில் ஒதுங்குகிறது. அந்த கானகத்தின் கரடி தலைவன் ஆணையின் பேரில் முதலுதவி அளிக்கப்பட்ட கரடி மயக்கம் தெளிகிறது. தலைவனின் அழகிய மகள் லஜ்ஜையுடன் அண்ணலை நோக்கினாள். அவரும் நோக்கினார்.

இந்த முடிவுகள் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் சென்னைப் பித்தன் இதைவிட பிரமாதமான முடிவை தருவார் என தான் நம்புவதாக கூறி அவரிடம் விரைகிறது.

-தொடரும்

டிஸ்கி:அடக்கடவுளே!இந்தப் பார்த்தசாரதி நம்மளை இப்படி மாட்டி விட்டுட்டாரே!கரடி எப்ப வரப் போகுதோ?என்ன ஆகப் போகுதோ!ஜாம்பவானே ,காப்பாத்து!

செவ்வாய், செப்டம்பர் 15, 2015

வீடென்று எதனை...வீடு-காட்சி-2

 இந்த நாடகம் எழுதி முடித்த பின் இதை மேடையேற்றலாமா என யோசித்தோம்.ஆனால் நண்பர் ஒருவர் தொலைக்காட்சி நாடகமாக்கலாம் என்று ஆலோசனை சொல்லி  சென்னைத் தொலைக்காட்சயில் தயாரிப்பாளராக இருந்த அவரது நண்பர் ஒருவரைப் பார்க்கச் சொன்னார். நண்பர் பார்த்தசாரதி அவரைப் பார்த்து நாடகத் தயாரிப்பு பற்றிப் பேசினார். அவரும் நாடகத்தைப் படித்துப் பார்த்தபின்,கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. யார் நடித்தால் நாடகம் சிறப்பாக இருக்கும் என்பது பற்றிப் பேச்சு வந்தது.முதல் பையனாகப் பூர்ணமும், கடைசிப்பையனாக நிழல்கள் ரவியும், வயதான பெண்மணியாகச் சௌகாரும் நடிக்கலாம் என்ற எண்னினோம், இரண்டாவது மகன் கிச்சாமியாக எங்களில் ஒருவரான,மனமகிழ் மன்ற நாடகத்தில் இரு வேடங்களில் நடித்துக் கலக்கிய,ஒருவரைப் போடலாம் எனத் தீர்மானித்தோம்! அவர் யார் என்பதைப் பின்னர் சொல்கிறேன்.

காட்சி -  2

பட்டாபி  மறு நாள்  அதி  காலை ஒரு  ஆட்டோவில் வந்து  இறங்குகிறார்.

அம்மா  என்னடா இந்த விச  ஆட்டோவில் வந்து  இறங்குற.   கார்  தடபுடல்  எல்லாம்  என்ன  ஆச்சு
பட்டாபி  எப்போழுதும்   ஆபீஸ் விஷயமா வருவேன். இந்த தடவை  சொந்த விவகாரம்  ஆச்சே.    ஆமா ஏன்  இப்படி  இளச்சி  போயிட்டே.  உடம்புக்கு  ஒன்னும்  இல்லையே?”

அம்மா   ஒன்னும்  வரமாட்டேங்கறது தான் கவலை.  சரி பல்  தேச்சுட்டுவா.  காபி போட்டு தரேன்

பட்டாபி  காபி  சாப்பிட்டுக்கொண்டே  இந்த  ருசி வேறெந்த காபிலெயும் வரமாட்டேங் கறதே  ஏன்?”

அம்மா  என் பிள்ளைக்கு  இவ்வளவு  தைரியம்  வந்துடுத்தே. ஏதேது.  ராஜி காதிலே  விழுந்தா,  உன்னை  இதுக்காகவே  விவாகரத்து  பண்ணிடுவா.

பட்டாபி கிருஷ்ணருக்கு  சகுனி  மாதிரி உனக்கு  எப்போதும்  என் ஆம்பிடையா  ஞாபகம்தான்”

அம்மா அது  சரி, பசங்கள்ளாம்  செளக்கியமா இருக்காளா. பசங்கள்ளாம்னா என்ன!   பெத்தது மூணு  அதுலே  ரண்டு  பேர,  ராஜி  பேச்சைக்  கேட்டுண்டு,      ஸ்நாந  ப்ராப்தி இல்லாம  ஆக்கிண்டாச்சு.  எனாக்கென்ன உன் பாடு  அவ பாடு...ம்..   பேத்தி  திவ்யா குட்டி  எப்படி  இருக்கு.  அதுக்கு  மூணு வயசு  ஆகியிருக்குமே!

பட்டாபி   அது  ஸ்கூலுக்கு வேற இப்ப போறது.   உனக்கு  காட்டணும்னுதா  இந்த  போட்டோவை ஞாபகமா கொண்டுவந்தேன்

அம்மா  நம்பாத்து ஜாடையே அப்படியே  கொண்டிருக்கு இந்த குட்டி

பட்டாபி  சிரித்துக்கொண்டே    உன் சம்மந்தி  அம்மா இதை ஒத்துப்பாளோ

அம்மா அவ  கெடக்கறா.   திவ்யா குட்டிக்கு  நம்மாத்து ஜாடைதான்.   துளிக்கூட    சந்தேகமே இல்ல.   கிச்சாமியும்  பாபுவும்  வரட்டும்.  கேக்கலாம்

பட்டாபி  நச்சு கடுதாசி  போட்டுண்டு இருக்கான்லேயோ

அம்மா    மாசம்  தவறாம ஒன்னு  வந்துடறது.  இத பாரு  லேடஸ்டா வந்தது.  அவன் கை  அட்சரம்தான்  மணி மணியா என்ன அழகா  இருக்கு.  உனக்கு  லெட்டர்  போடறானா?”

பட்டாபி  அடிக்கடி  போன்ல பேசிடறான்

அம்மா  எனக்கு  என்னமோ  இந்த வீட்டை  விக்கறது  பிடிக்கல

பட்டாபி  இவ்வளவு  பெரிய  வீட்டை  மெயிண்டெய்ன் பண்ணறது   கஷ்டமாச்சே

அம்மா டெல்லிலெ உக்காந்துண்டு அதை பத்தி  பேசாதே.  பராமரிக்கறது  நான். 

பட்டாபி  இப்ப  நல்ல ஆஃபர் வந்திருக்கே

அம்மா அடுத்தது  ஒண்டி  ஆளுக்கு  இவ்வளவு பெரிய வீடா?....இந்த லைன்லே  உன்  பேச்சு  போகும்.  கட்டிக்கொண்டவ சொல்லித்தந்த பாடம்

பட்டாபி    சரி சரி  ..  நான் போய்  பக்கத்துக்  கடைலெ  பேப்பர்  வாங்கிண்டு  வந்துடறேன்

அம்மா  நீ தான்  டெல்லி  மேட்டுக்குடி ஆச்சே. காத்தாலெ  பேப்பர்  இல்லாட்டா  சப்த நாடியும் ஒடுங்கிடுமே.  நான்  போய்  சமையல  ஆரம்பிக்கறேன்.தினமணி  வாங்காதே.  கொஞ்ச நாழி கழிச்சி நம்மாத்துக்கே  கொண்டு வந்து போடுவான்.

(நாளை தொடரும்)
----------

வீடு என்பது எது?கேள்வியைக் கேட்டதும் மாலனின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது...

வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை  ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே  கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ


வாவ்! நன்றி மாலன்!

=