”நான் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தேன்.
முதல் பந்தயத்தில் 2ஆம் நம்பர் குதிரை
மீது பணம் கட்ட எண்ணினேன்.
அப்போது”நம்பர் 6”என்று
ஒரு குரல் கேட்டது.
ஏதோ பிரமை என்று ஒதுக்கி விட்டு 2 இல் கட்டப் போனேன்
மீண்டும் குரல்”நம்பர் 6” என்றது.
குரல் வந்த திசையில் பார்த்தேன்.
ஒரு தவளை இருந்தது. அதுதான் பேசியிருக்குமோ!
கட்டிப் பார்க்கலாமே.
ரூ.1000 கட்டினேன்.—ஒன்றுக்கு 10 விலையில்
6 வென்றது எனக்கு 10 ஆயிரம் கிடைத்தது.
எனக்கு ஆச்சரியம்.
அடுத்தரேஸ் ஆரம்பிக்கும் முன் தவளையைப் பார்த்தேன்.
நம்பர் 8 என்றது.
யோசிக்காமல் 8 இன் மீது 10000 கட்டினேன்.
அது ஒரு தொத்தல் குதிரை எனவே ஒன்றுக்கு 20 விலை!
8 வென்றது.எனக்கு 2 லட்சம் கிடைத்தது.
எனக்கு மிக மிக மகிழ்ச்சி.
தவளையையும் எடுத்துக் கொண்டு,5 நட்சத்திர ஒட்டலில் ஒரு அறைஎடுத்தேன்.
தவளையிடம் கேட்டேன்”உனக்கு எப்படி நன்றி சொவது என்றே தெரியவில்லை!உனக்கு
நான் ஏதாவது செய்ய வேண்டும்;நீயே சொல்,என்ன வேண்டும்?”
தவளை சொன்னது “என்னை முத்தமிடு”
இவ்வளவு செய்த தவளைக்கு நாம் இது கூடச் செய்யக் கூடாதா?
தவளையை முத்தமிட்டேன்.
முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதே அது என் அணைப்பில் ஒரு பதினாறு வயது அழகிய
பெண்ணாக
மாறியது.
அப்போதுதான் மைலார்ட் போலிஸ் உள்ளே வந்து எங்களைப் பிடித்தது!...........”
(நான் சொல்வதெல்லாம் உண்மையைத் தவிர வேறொன்றில்லை!”
..............கைதான ஒருவரின் வாக்குமூலம்!!
..............கைதான ஒருவரின் வாக்குமூலம்!!
ஹா,ஹா,ஹா!