காந்தியை மறக்கவில்லை நாங்கள்!
ஊழல் தலை விரித்தாடுகிறது
கையூட்டு கரை புரண்டு ஓடுகிறது
ஆனாலும்
காந்தியை மறக்கவில்லை நாங்கள்
கைமாறும் ஒவ்வொரு நோட்டிலும்
காட்சி தந்து அவர் சிரிக்கையில்
எப்படி மறக்க முடியும் எங்களால்?!
இதையெல்லாம் பார்த்து
வெட்கி வேதனைப்பட்டு அவர்
முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டாமோ?!
பார்த்துச் சிரித்துக் கொண்டே இருக்கிறாரே
என்ன மனிதர் இவர்?
ஓ! அவர் மகானோ!
அதை மறந்தே போனோம் நாங்கள்!
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்ம!நீ வாழ்க! வாழ்க!

