பதிவர் திருவிழா சிறப்பாக நடந்து
முடிந்து விட்டது.புலவர் ஐயாவுடன் என்னையும் மேடையில் ஏற்றி,முன்னிலை வகித்தல்
என்ற ஒரு பணியை அளித்து,சால்வை அணிவித்துப் பெருமைப் படுத்திவிட்டார்கள்.
அதனால்தான் எனக்குள் ஒரு குற்ற உணர்வு,நாள் முழுவதும்
அங்கு இருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதை எண்ணி .
ஆனால் என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்
எனக்கு இருக்கும் சில கடமைகள்; அவற்றுக்கு
எப்போது முன்னுரிமை அளிக்கவே நான் விரும்புகிறேன்.
இருப்பினும்,அனைத்துப் பதிவர்களுடன் நாள் முழுதும் கலந்துரையாட முடியாமல் போனதற்காக மன்னிப்புக்
கேட்டுக் கொள்கிறேன்.
திருவிழா மிகச் சிறப்பாக நடை பெற்றது என்பதில்
இரண்டாவது கருத்து இருக்க முடியாது.
கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடனும் முழுத்
திருதிப்யுடனுமே வீடு திரும்பியிருப்பர்
பொதுவாகப் பதிவர் திருவிழாக்கள் குறித்து
என் சில எண்ணங்கள்…
விழாவில் விருந்தினர் சிறப்புரை என்பது அவசியமா?
விழாவின் முக்கிய நோக்கம் பதிவின் மூலம் மட்டுமே பழகி நட்பை
வளர்த்துக் கொண்ட பதிவர்களுக்கு நேரில் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்புக் கொடுப்பதே.
மேடையில் ஏறி ,சிறு அறிமுகம் செய்து கொண்டு
இறங்கி விட்டால் அது நிச்சயம் போதாது.
பதிவர்கள் வெறும் பார்வையாளர்களாகி
விடாமல்,பங்கேற்பவர்களாகவும் இருக்கும் படி நிகழ்ச்சிகள் அமைதல் நலம்.
எனவே பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடலுக்கு
அதிக நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
என்ன மாதிரி
நிகழ்ச்சியாக அமைக்கலாம் என்பதை யோசித்துத் தீர்மானிக்கலாம். இண்டிப்ளாக்கர்
சந்திப்பில் சில நிகழ்ச்சிகள் அமைத்திருப்பார்கள்.அது போல் ஏதாவது
செய்யலாம்.பதிவர்களின் திறமையை வெளிப்படுத்தும் கலை
நிகழ்ச்சிகளுக்கு இடம் தரலாம்.
பதிவர்களுக்கு எழும் பதிவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ‘பிளாக்கர் நண்பன்’ பாசித் போன்றவர்கள் விளக்கமளிக்கலாம்;ஏற்கனவே விளக்கம் அவர்கள் பதிவில் இருந்தால் அதற்கான சுட்டி அளிக்கலாம்
பதிவர்களுக்கு எழும் பதிவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ‘பிளாக்கர் நண்பன்’ பாசித் போன்றவர்கள் விளக்கமளிக்கலாம்;ஏற்கனவே விளக்கம் அவர்கள் பதிவில் இருந்தால் அதற்கான சுட்டி அளிக்கலாம்
புத்தக வெளியீடு என்பது , தவிர்க்க
இயலாத நிகழ்ச்சியாகி விட்டது.ஏனெனில் பதிவர் களுக்கு தங்கள் புத்தகங்களை
வெளியிடுவதற்கு இதை விட சிறந்த களம் ஒன்று இருக்க முடியாது.
எனவே இது ஒரு தவிர்க்க முடியாத
நிகழ்ச்சியே!
இவை எனது சில கருத்துக்களே; இவற்றிலும்
குற்றம் குறைகள் இருக்கலாம்.
ஆனால் புதிய சிந்தனைகள் பிறப்பதற்கு இதை
ஒரு தொடக்கமாக அளிக்கிறேன்.
மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண்
துஞ்சாது உழைத்துத் திருவிழாவை இமாலய
வெற்றி பெறச் செய்த குழுவினருக்கு,இந்த வெற்றியேதான் பரிசு!
வாழ்த்துகள்!