பாய்ந்தது ராமபாணம்
மாய்ந்தனள் அரக்கி தாடகை
மனதினுள் கலங்கினான் இராமன்
மாதைக் கொன்றது பாவமென்றெண்ணி
எப்படித் தொலைப்பது இப்பாவம்
இப்படி எண்ணி மருகினான் இராமன்
பாதையில் கல்லைக் கண்டான்
கோதையின் கதை சொன்னான் முனிவன்
பாதம் பதித்தான் ராமன்
கல் பெண்ணானதக் கணமே
பெண்ணைக் கொன்றவன் இன்று
பெண்ணுக்கு வாழ்வு தந்தான்-அகலிகை
சாப விமோசனம் அல்ல அது -ராமனின்
பாப விமோசனம்!