தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 11, 2011

கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்)

இன்று மார்கழி 27 ஆம் நாள்.திருப்பாவை 27ஆம் பாடல்”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று தொடங்குகிறது.எனவே இன்று வைணவர்களுக்கு ஒரு நல்ல நாள்.இன்று கூடார வல்லி என்று அழைக்கப் படுகிறது.இன்று அவர்கள் இல்லங்களில் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.அதற்கும் காரணம் இருக்கிறது.மேலே குறிப்பிட்ட பாடலில் ஒரு வரி”பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார” என்பது.’பாற்சோறு மூட ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி’ என்பது பொருள்.எனவேதான் இன்று சர்க்கரைப் பொங்கலின் அவசியம்.

ஆனால் பாட்டில் கூறியது போல் இன்று நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது என்பது நடக்காது.இன்றைய விலை வாசியில் கட்டுப்படியாகாது என்பது ஒரு புறம் இருக்க,நமது உடல் நிலையும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. பெரும்பானமையானவர்களுக்குச் சர்க்கரை வியாதி;சர்க்கரைப் பொங்கலை வளைத்துக்கொண்டு சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால் எல்லாம்.’நெய் பெய்து முழங்கை வழி வார’ எனபதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.சம்பிரதாயத்துக்கு ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொஙல் சாப்பிட வேண்டியதுதான்.

ஆனால் இன்று எனக்குக் கிடைத்த பொங்கல் அப்படிச் சம்பிரதாயப் பொங்கல் அல்ல.நல்ல ,இனிப்பான,நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல்!(சாப்பாடு ராமா!வந்துட்டியா?இந்த மார்கழி மாதம் முழுவதும் பொங்கலை விடமாட்டியே!.).அண்டை வீட்டில் வசிக்கும் வைணவர்கள் கொடுத்தது.(இரக்கப் பட்டுக் கொடுத்தது!);.இப்படி யாராவது இந்தமாதிரி விசேட நாட்களில், பொங்கல். களி, போளி, நோன்புஅடை என்று கொடுத்தால்தான் உண்டு. இல்லாவிடில் நமக்கு என்றுமுள்ளதுதான்!-குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டுக்,கேட்டரர் கொண்டு வரும் பொரியல்,கூட்டு,சாம்பார்,ரசம்தான்!
.!

ஒன்று நிச்சயம்.உணவு பற்றி இப்படியெல்லாம் எழுதுவது,just for fun!
உண்பதற்காக வாழ்வது என்ற நிலையை நான் கடந்து விட்டேன்.இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!

வள்ளுவர் அழகாகச் சொல்வார்-
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”
கூடாரவல்லித்திருநாள் வாழ்த்துகள்!

19 கருத்துகள்:

 1. இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!
  /////////////////

  என் இவ்வளவு வெறுமை?

  பதிலளிநீக்கு
 2. அழகான பகிர்வு.படித்தேன்,ரசித்தேன், சுவைத்தேன். பொங்கலுடன் குறளை கொண்டு வந்தது சிறப்பு

  பதிலளிநீக்கு
 3. // உண்பதற்காக வாழ்வது என்ற நிலையை நான் கடந்து விட்டேன்.இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்! //

  உண்மைதான். குறிப்பிட்ட அகவையை அடைந்தபின் நாம் உண்பதே வாழ்வதற்குத்தான். இருந்தாலும் இவ்வளவு விஸ்தாரமாக ’பாற்சோறு மூட ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி’சொன்னபிறகு அந்த சர்க்கரைப்பொங்கலை உண்ணாமல் இருப்பது எப்படி?

  பதிலளிநீக்கு
 4. THOPPITHOPPI கூறியது...

  // இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!
  /////////////////

  என் இவ்வளவு வெறுமை?//

  இது வெறுமையில்லை நண்பரே!அறுபதைக் கடந்த அனைவரும்,கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை.நாக்குக்கு நாம் அடிமையாகாமல்,நாக்கை நமக்கு அடிமையாக்க வேண்டும்.அதுவே நான் சொல்ல விரும்பியது.அது தவிர வாழ்வில் என்றுமே வெறுமை என்னைச் சூழ நான் அனுமதிப்பதில்லை!
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. கக்கு - மாணிக்கம் அவர்களே,
  உங்கள் முதல் வருகை என எண்ணுகிறேன்.வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி,தொடர்வதற்கும்!

  பதிலளிநீக்கு
 6. வே.நடனசபாபதி கூறியது
  //உண்மைதான். குறிப்பிட்ட அகவையை அடைந்தபின் நாம் உண்பதே வாழ்வதற்குத்தான். இருந்தாலும் இவ்வளவு விஸ்தாரமாக ’பாற்சோறு மூட ஊற்றிய நெய் முழங்கை வழியாக வழியும்படி’சொன்னபிறகு அந்த சர்க்கரைப்பொங்கலை உண்ணாமல் இருப்பது எப்படி?//

  விதிகளுக்கு விலக்குகள் உண்டுதானே!ருசித்துப் பார்ப்பதில் (என்றோ ஒரு முறை)தவறில்லை!

  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. \\உண்பதற்காக வாழ்வது என்ற நிலையை நான் கடந்து விட்டேன்.இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!///

  நான் இப்போதே அந்த பக்குவத்துக்கு வந்துவிட்டேன், அதற்குள் சர்க்கரை வந்து விட்டது. ( பெற்றோரின் சொத்து ).
  இன்னும் சில வருடங்களில் சர்க்கரை உண்ணத்தகாத பொருளாக மாறலாம். அதற்கு மாற்று வரும்.
  மிக நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 8. // ’க’ வை ‘சு’ வாக்கியதற்கு மன்னிக்கவும்.(வயசானாலே இதுதான் பிரச்சினை!).சென்னையைச் சேர்ந்த பித்தன்--எனவே சென்னைபித்தன். //

  ................சென்னை பித்தன்.

  அய்யைய ........இன்னாத்துக்கு இப்டி மேற்சளாயிட்டீங்க வாஜாரே. மன்னாப்பு அல்லா வேணாம். நல்ல தோஸ்தா
  இருந்துகினா இன்னாத்துக்கு மன்னாப்பு மண்ணாங்கட்டி எல்லாம்?

  அந்தபக்கம் சென்னை பித்தன்னா இப்பாளைக்கி சென்னை கிறுக்கன் நானு. சர்தானா?

  வூட்டாண்ட வந்துகினதுக்கு டாங்க்ஸ் வாஜாரே. வர்ட்டா.

  பதிலளிநீக்கு
 9. இன்று நம் தேசிய சொத்தாகி விட்டது சர்க்கரை வியாதி!விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மாற்று வரும்.கருத்துக்கு நன்றி,சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு
 10. @கக்கு - மாணிக்கம்
  டாங்க்ஸ் தோஸ்த்!

  பதிலளிநீக்கு
 11. உண்பதற்காக வாழ்வது என்ற நிலையை நான் கடந்து விட்டேன்.இப்போது வாழ்வதற்காக உண்கிறேன்!//
  பொதுவாக வயதான எல்லோரும் இன்றய காலகட்டத்தில் இப்படிதான் இருக்கவேண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 12. கூடார வல்லி பேரே அழகாக, இனிமையாக இருக்கிறது.
  இனிக்கும் பொங்கல் போல, இனிக்கும் பதிவு..

  பதிலளிநீக்கு
 13. //இன்று நம் தேசிய சொத்தாகி விட்டது சர்க்கரை வியாதி//

  உண்மைதான். இப்போது நோயெல்லாம் சகஜமாகிவிட்டதால் , அதனோடே வாழ பழகிவிட்டார்கள் மக்கள்.

  பதிலளிநீக்கு
 14. இனியவன் கூறியது...
  //பொதுவாக வயதான எல்லோரும் இன்றய காலகட்டத்தில் இப்படிதான் இருக்கவேண்டியுள்ளது.//
  முற்றிலும் உண்மை!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன்!

  பதிலளிநீக்கு
 15. பாரத்... பாரதி... கூறியது...

  //கூடார வல்லி பேரே அழகாக, இனிமையாக இருக்கிறது.
  இனிக்கும் பொங்கல் போல, இனிக்கும் பதிவு..//
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,பாரதி!
  பாரத்... பாரதி... கூறியது..
  //உண்மைதான். இப்போது நோயெல்லாம் சகஜமாகிவிட்டதால் , அதனோடே வாழ பழகிவிட்டார்கள் மக்கள்.//
  நோயை மட்டுமல்ல;இந்த இந்தியத்திருநாட்டின் எல்லா அவலங்களையும் சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டோம் மக்களாகிய நாம்!
  நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 16. இன்னும் சக்கரை வரவில்லை! அதற்குள் 'கூடாரவல்லியை' ஒரு பிடி பிடித்துவிட வேண்டியது தான்!

  பதிலளிநீக்கு
 17. bandhu கூறியது...

  //இன்னும் சக்கரை வரவில்லை! அதற்குள் 'கூடாரவல்லியை' ஒரு பிடி பிடித்துவிட வேண்டியது தான்!//
  ஜமாயுங்க!நாளைக்கும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வாய்ப்பு! அங்கே பொங்கல் பண்டிகை எல்லாம் உண்டு இல்லே?
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 18. அய்யங்கார் வீட்டு பொங்கல் அருமையா இருக்கும்

  பதிலளிநீக்கு
 19. எல் கே கூறியது...

  //அய்யங்கார் வீட்டு பொங்கல் அருமையா இருக்கும்//

  ஆஹா!அப்படித்தான் இருந்தது!நம்மை மாதிரி ரசிகர்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும்!
  நன்றி எல்.கே.!

  பதிலளிநீக்கு