என் அப்பா!
என்னை ஒரு கையால் உயரத் தூக்குவார்
அவர் ஒரு சூப்பர்மேன்
என் அப்பா
நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்
அன்பானவர் அவர்.
என் அப்பா
என் பாடங்களில் உதவி செய்வார்
அறிவாளி அவர்
என் அப்பா
எல்லோருக்கும் உதவுவார்
கருணையுள்ளவர் அவர்
ஆனால்....
அவர் பொய் சொல்வார்...
தான் நல்ல வேலையில் இருப்பதாக
உண்மையில் கூலிவேலை செய்து வருகிறார்
பணம் நிறைய இருப்பதாக,
அதற்காக மேலும் உழைப்பார்
தனக்குக்குக் களைப்பே இல்லை என்று.
வேலையின் களைப்பால் சாலையோரம்
படுத்திடுவார்
பொய் சொல்வார்
எனக்காக!
நேற்று நண்பர் கக்கு மாணிக்கம் அவர்கள்
பிளஸ்ஸில் ஒரு காணொளி பகிர்ந்திருந்தார்.அதன் வரி வடிவமே இது
இனி என் உணர்வுகள்..........
.
அப்பா!
உன் நினைவு
ஒரு கலங்கிய பிம்பமாகத்தான் இருக்கிறது
ஐந்து வயதுச் சிறுவனின் நினைவல்லவா?
உன் தோளில் அமர்ந்து நான்
பெருமாள் ஊர்வலம் பார்த்ததில்லை
உன் கரம் பற்றிக் கடற்கரை மணலில்
கால் புதைய நடந்தவாறு சுண்டல் ருசித்ததில்லை
நி சொல்லித்தந்து பாடம் படித்ததில்லை
பள்ளிக்கே போகாதபோது
பாடம் படிப்பதெங்கே
இழப்புதான் ஆனாலும் தெரியவில்லை
அன்பு செலுத்துவதில் அம்மாவாய்
கண்டிப்பில் தந்தையாய்
அர்த்த நரனாய்
இருவர் பணிகளையும் தானேற்று
வளர்த்திட்ட தாய்!
அவளே எங்கள் தந்தையுமானவள்!