தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 12, 2015

அம்மா இங்கே வா வா!

அம்மா இங்கே வா வா

ஆட்சி செய்ய வா வா

இரட்டை விரலைக் காட்டு

ஈசன் அருளைப் போற்று

உலகம் வியந்து பார்க்க
 

ஊரோர் மகிழ்ந்து நோக்க
 

எங்கள் சாமி குமரன்
 

ஏமாற்றாத அமரன்
 

ஐயம் இன்றிச் சொல்வேன்
 

ஒன்றே இன்று லட்சியம்
 

ஓடும் பகைகள் நிச்சயம்
 

ஔடதம் போன்றதுன் ஆட்சி.
 

அஃதே உந்தன் மாட்சி.
******************************
(இது எப்படி இருக்கு?!)

17 கருத்துகள்:

 1. அமைச்சர் பதவி நிச்சயம் :)

  வரும்மாண்டு முதல் வகுப்பில் இந்த அம்மா ஆத்திச்சூடியை வைக்கக் குரல் கொடுக்கப் போகிறேன்.

  நமக்கு ஒரு வட்டச் செயலாளராவது .... :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //..வரும்மாண்டு முதல் வகுப்பில் இந்த அம்மா ஆத்திச்சூடியை வைக்கக் குரல் கொடுக்கப் போகிறேன்//...
   தொடங்கட்டும் ஒரு பேரியக்கம் வ.செ. அவர்களே

   நீக்கு
  2. விஜூ அண்ணா !!! நீங்களுமா????!!!!!!! இந்த வலை உலகம் எப்பிடி இருந்தவரை இப்படி ஆகிடுச்சே:(((

   நீக்கு
 2. ஸூப்பர் சூடி வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  புகழ்மாலை அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அம்மாடி !!! மிடில சார்!!! எப்படி இப்படி!!!

  பதிலளிநீக்கு
 5. உயிர் எழுத்து முற்றும் முறையாக வந்தன!

  பதிலளிநீக்கு