தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

உன்னை நினைத்து!என்றாவது உனக்கு
அழ வேண்டும் எனத் தோன்றினால்
அழை என்னை உடனே!
நான் வாக்களிக்கிறேன்
உன்னைச் சிரிக்க வைக்க முடியா விடினும்
உன்னுடன் சேர்ந்த அழ நான் இருக்கிறேன்.

என்றாவது உனக்கு
யார் பேசுவதையும் கேட்கப் பிடிக்கவில்லை என்றால்
அழை என்னை உடனே
நான் வாக்களிக்கிறேன்
உன் அமைதியில் நானும் பங்கு கொள்வேன்!

என்றாவது ஒரு நாள்
எல்லாம் துறந்து ஏகாந்தமாய்ச் செல்ல விரும்பினால்
அழை என்னை உடனே
நான் வாக்களிக்கிறேன்
உன்னைத் தடுத்து நிறுத்த மாட்டேன்
உன்னுடன் சேர்ந்து நானும் வருவேன் .

ஆனால்
என்றாவது ஒருநாள்
உன் அழைப்புக்குப் பதில் இல்லையென்றால்
விரைந்தோடி வா  என்னைக் காண
ஏனெனில்
அந்நேரம்
உன் அண்மையே என் தேவையென்பதால்!

6 கருத்துகள்:

 1. விடமாட்டேன் விட மாட்டேன் என்னுடைய லொள்ளுத் தாத்தாவை
  இந்த மாதிரி இடங்களுக்கு விடுவதற்கா இன்னும் உயிரோடிங்கே
  இருக்கின்றோம் !

  செந்தமிழால் பாட்டிசைத்து
  சிந்தை குளிர வைக்கலாம் ....
  விந்தையாக பேசி நாளும்
  விடிய விடிய சிரிக்கலாம் ....
  எந்தனுயிர்த் தாத்தாவே நீ
  ஏழ்பிறப்பும் மகிழலாம்

  வந்து பாரும் வலைத்தளத்தில்
  வாழ்வனைத்தையும் உமக்களிப்போம் ...

  இங்ஙனம்
  பேத்தி ,பேரன் ,பூட்டப் பிள்ளைகள்

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை ஐயா! நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம்:))))

  பதிலளிநீக்கு

 3. வணக்கம்!

  நெஞ்சுள் புகுந்து நிலைக்கும் கவியடிகள்
  கொஞ்சும் தமிழைக் கொடுத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 4. அய்யா நலமா? இப்போது அமைதிதான் தேவைப்படுகிறது. அந்த பரபரப்பான நாட்கள் ஓடிவிட்டன.
  த.ம.3

  பதிலளிநீக்கு