தொடரும் தோழர்கள்

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

விருதும் நானும்!

எதுவுமே பகிர்ந்துகொண்டால் குறையும்.துயருமும் அது போல்தான்.என் துயரத்தை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டதாலும், உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தை களாலும்,இப்போது மனம் பெருமளவு லேசாகியிருக்கிறது.நன்றி.

இப்போது கடமை அழைக்கிறது..

நண்பர் “மின்னல் வரிகள்” கணேஷ் அவர்கள் எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை கௌரவப்படுத்தியிருக்கிறார்,அதுவும் உண்மையிலேயெ பல்துறைப்புலமை மிக்க நால்வர் குழாத்துடன் என்னையும் இணைத்து!


நன்றி கணேஷ்.எனக்கு புதிய கவலையைத் தந்து விட்டீர்கள்.இந்த விருதுக்குத் தகுதியானவனாக எப்படித்தொடர்ந்து இயங்கப்போகிறோம் என்ற கவலை! 


இந்த விருதைப்பெற்ற நான் சில உடனடிக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும் .

எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

மற்றும் இந்த விருதை ஐந்து பேருக்கு வழங்க வேண்டும். 


முதலில் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்


         நல்ல கர்நாடக இசை,புத்தகங்கள்,அமைதியான தனிமை, நண்பர்கள் சந்திப்பு,டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்,அசோகாஹல்வா(திருவையாறு),நல்ல நகைச்சுவை.
 


அடுத்து நான் விருது வழங்கி,அதன் மூலம் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் பதிவுலக நண்பர்கள்.
             1.வே.நடனசபாபதி 
             2.ரஹீம் கஸாலி
             3.முனைவர் இரா.குணசீலன்  
             4.சண்முகவேல்
             5.சங்கரலிங்கம்(உணவு உலகம்) 


விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்துமாறு ஐவரையும் கேட்டுக் கொள்வதுடன்,இந்த விருதை அவர்களைக் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்து நண்பர் வே.நடனசபாபதி அளித்த விருது மீண்டும் ஒரு அங்கீகாரம்,அதனால் எழும் மகிழ்ச்சி,தொடரும் பொறுப்பும் ,கவலையும்..........




 விருது வழங்கி என்னைக் கௌரவித்தமைக்கு நன்றி நடனசபாபதி அவர்களே.


இப்போது இந்த விருதின் விதிமுறைகளின் படி நான் ஐந்து பதிவர்களுக்கு இவ்விருதை வழங்க வேண்டும்.அவர்கள்.....
        1.சிராஜ்
        2.கே.ஆர்.விஜயன்
        3.சிவகுமார்
        4.A.R.ராஜகோபாலன்
        5.ரியாஸ் அஹமது.
              
விருதை ஏற்று என்னைப் பெருமைப்படுத்தி,இந்த விருது வழங்கலை,விதிமுறைகளின்படித் தொடர வேண்டுகிறேன்.
நன்றி. 

தமிழ்மணத்தில் வாக்களிக்க--http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1140356

38 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் உங்களுக்கும் - அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  2. Versatile Blogger விருதை தந்து, நான் மேலும் சிறப்பாக, முனைப்போடு பதிவிட உற்சாகப்படுத்தியுள்ளீர்கள் என எண்ணுகிறேன். அதற்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் ஐயா..

    தங்கள் அன்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி அய்யா. மிக்க மகிழ்ச்சி. விருதையும்,அத்தோடு பொறுப்பையும் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் என்னிலும் சிறந்தவர் என்பது என் திட நம்பிக்கை. எப்போதும் போல் இனியும் சிறப்பாகவே செயல்படுவீர்கள்... உடன் வர நாங்களிருக்கும் போது! தகுதியான நபர்களுக்கு விருது வழங்கியதற்கு என் மனப்பூர்வமான பாராட்டும், அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  7. விருதுகள் பெற்ற உங்களுக்கும், உங்களால் விருது பெற்ற நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் விருது வழங்கி கவுரவித்ததற்கு நன்றி அய்யா... இந்த விருதை நிச்சயம் தகுதியானவர்களுக்கு வழங்குவேன்.

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் பெற்ற விருதுகளுக்கு,
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. உங்களின் உயர்ந்த மனதில்
    உதித்த உயரிய விருதுக்கு
    மனம் மகிழ்ந்த
    நெஞ்சம் நெகிழ்ந்த
    நல் நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  12. இரண்டு விருதுகள்... உங்களுக்கு வாழ்த்துகள்....

    உங்கள் மூலம் விருது பெறும் மற்றவர்களுக்கும் பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  14. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சார். உளவுத்துறை அளவிற்கு வொர்த் இல்லாத எனக்கு விருதா..?? :))

    பதிலளிநீக்கு
  15. மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் . பொருத்தமானவர் தான் நீங்கள் ...நான் முன்பே ஒரு முறை உங்களை பற்றி கூறினேன் . பல கலையில் தேர்ந்தவர் என்று ..சரிதானே வாசு

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்! தாங்கள் பெற்ற விருதுகளுக்கும், தங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு