தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 13, 2012

அய்யோ பாவம் பேராசிரியர்!!


சட்டக் கல்லூரியில்,தேர்வில் தவறிய ஒரு மாணவன்,தனது வயதான பேராசிரியரைப் பார்க்கப் போனான்.அவர் சட்டத்தில் புலி. 

அவரிடம் கேட்டான்சார்,சட்டம் பற்றியும் நியாயம் பற்றியும் உங்களுக்கு எல்லாம் தெரியுமா?”

பேராசிரியர் சொன்னர்தெரிந்ததால்தான் நான் பேராசிரியராக இருக்கிறேன்

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.அதற்குச் சரியான பதில் சொல்லி விட்டீர்கள் என்றால் நான் சட்டப்படிப்பையே விட்டு விடுகிறேன்.உங்களுக்குப் பதில் தெரியவில்லையென்றால் எனக்கு முதல் வகுப்பு மதிப்பெண் அளிக்க வேண்டும்என்றான் மாணவன்.

பேராசிரியர் ஒப்புக் கொண்டார்.

மாணவன் கேட்டான்சட்டப்பூர்வமானது ஆனால் நியாயமில்லாதது, நியாயமானது ஆனால் சட்டத்துக்குப் புறம்பானது,சட்டம் நியாயம் இரண்டுக்கும் புறம்பானது எது? ”

பேராசிரியர் எவ்வளவு யோசித்தும் விடை தெரியவில்லை.தான் ஒப்புக் கொண்டபடி அந்த மாண வனுக்கு முதல் வகுப்பு மதிப்பெண்கள் வழங்கி விட்டார்.

எவ்வளவு யோசித்தும் விடை தெரியாததால் தன் மாணவர்களில் மிக புத்திசாலிகளை அழைத்து இந்தக் கேள்வியைச் சொல்லி யாருக்கு பதில் தெரியும் என்று கேட்டார்.

எல்லா மாணவர்களும் கை தூக்கினர். ஆச்சரியப்பட்ட  பேராசிரியர் ஒரு மாணவனைப் பதில் சொல் என்று கேட்க அவன் சொன்னான்-----

”சார்!உங்கள் வயது அறுபது.நீங்கள் ஒரு 25 வயதுப் பெண்ணை மணந்திருக்கி றீர்கள்,இது சட்டப்பூர்வமானது,ஆனால் நியாயம் அல்ல.உங்கள் மனைவி ஒரு 22 வயது வாலிபனுடன் தொடர்பு கொண்டுள்ளாள்;இது நியாயமானது ஆனால் சட்டத்துக்குப் புறம்பானது.உங்கள் மனைவியின் காதலன் தேர்வில் தோற்று விட்டான் .ஆனால் நீங்கள் அவனுக்கு முதல் வகுப்பு மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறீர்கள்.இது சட்டம்,நியாயம் இரண்டுக்கும் புறம்பானது!”

(இணையத்தில்படித்தது)

17 கருத்துகள்:

  1. பய புள்ள பிளான் பண்ணி தான் கேள்வியே கேட்டு இருக்கு...ஹாஹா சூப்பரண்ணே!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... அந்த மாணவனோட பதிலுல விவகாரமா எதோ இருக்கும்னு நினைச்சேனே தவிர... இப்படி நிச்சயம் எதிர்பாக்கலை. சூப்பரு.

    பதிலளிநீக்கு
  3. பயபுள்ளைங்க என்னமா யோசிக்கிறாங்கப்பா..

    பதிலளிநீக்கு
  4. எதிர்பார்க்காத பதில் சூப்பர் .
    Tha.ma.4

    பதிலளிநீக்கு
  5. ஆகா...கெலம்பிட்டாங்கய்யா கெலம்பிட்டாங்க....எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா யோசிக்கிறாங்க...:)

    பதிலளிநீக்கு
  6. அசந்து போனேன்!உண்மையிலேயே எதிர் பாராத
    பதில்!நன்று நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கென்று எங்கிருந்துதான் கிடைக்கின்றதோ? இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. ஜயோ கடவுளே இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களே......

    பதிலளிநீக்கு
  9. அப்பப்ப இப்படியும் போட்டு தாக்கிடுறீங்க! :)

    பதிலளிநீக்கு
  10. பதிவுக்கான தலைப்பு அத்தனைப் பொருத்தம்
    பாவம் பேராசிரியர்
    மன்ம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. கனி , /கருணாநிதி /அண்ணா/ பேராசிரியர் ..இன்னும் யார் யாரோ ...வாசுதேவன்

    பதிலளிநீக்கு