தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 05, 2012

புதுக் காரின் விலை ரூ.3000!

அந்த விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் அந்த மனிதர்.அவரைப் போலவே அதைப் பார்த்தவர்கள் அனைவருமே   ஆச்சரியப்பட்டி ருப்பார்கள் என்று அவர் எண்ணினார். அச்சுப்பிழையாக இருக்குமோ என்றும், ஒரு வேளை இது வெறும் முட்டாளாக்கும் ஒரு வேலையோ என்றும் கூட எண்ணினார்.அப்படி என்ன இருந்தது அந்த விளம்பரத்தில்?

“2011 ஆம் ஆண்டு மாடல் செவர்லே ஸ்பார்க் கார்.3000 கிலோ மீட்டர்களே ஓடியது.ஷோ ரூம்இல் இருப்பது போல் மெருகு குலையாத வண்டி,விற்பனைக்கு.விலை ரூ.3000. உடன் தொடர்பு கொள்ள –தொலை பேசி எண்—xxxxxxxx”

இதுவே  அந்த விளம்பரம்.அவர் யோசித்தார்.பின் பேசித்தான் பார்ப் போமே    என்று தொலை பேசினார்.

“ஹலோ!உங்கள் விளம்பரம் பார்த்தேன்.உண்மையிலேயே புது வண்டியா?”

மறு முனையில் பெண்குரல்”ஆம்”

“மூவாயிரம் கி.மி.தான் ஓடியிருக்கிறதா?

“ஆம்”

”விலை?”

”அதுதான் விளம்பரத்தில் போட்டிருந்தேனே!ரூ.3000.”

”காரில் ஏதும் பிரச்சினையா?”

“ஒன்றும் இல்லை.உண்மையில் நீங்கள் ஒருவர்தான் இதுவரை பேசியவர்.எல்லோரும் இது ஜோக் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.”

அவர் போய்ப் பார்த்தார் .ஓட்டிப் பார்த்தார்.பிடித்திருந்தது.3000 ரூபாயைக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்டார்.

பின் கேட்டார்”நீங்கள் இதை 3 லட்சத்துக்கு விற்றிருக்க முடியும்.ஏன் 3000க்கு விற்றீர்கள்?”

அவள் சொன்னாள்”இது என் கணவரின் சென்ற பிறந்த நாளுக்கு நான் பரிசாகக் கொடுத்த கார்.போன மாதம் அவர் வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டார்.நேற்று  டார்ஜீலிங்கில் இருந்து அவர் ஒரு தந்தி அனுப்பியிருந்தார்.கையில் பணமில்லாததால் காரை விற்றுப் பணம் அனுப்பச் சொல்லியிருந்தார்.காரை விற்று விட்டேன்.3000 அனுப்பி விடுவேன்!”

இது தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள  அப்பெண் தேர்ந்தெடுத்த வழி.

இவ்வாறு சிலர் செயலில்  தீர்த்துக் கொள்கிறார்கள்
                 சிலர் காத்திருத்தலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
                 சிலர் பழிதீர்த்துத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
                 சிலர் சண்டை மூலம் முடிவு கட்டுகிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் மேலும் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.

பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.

உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

எல்லாம் சரியாகும்.

52 கருத்துகள்:

  1. அருமை அருமை .....முதல் வருகை

    tamil manam 2

    பதிலளிநீக்கு
  2. கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு அமர்வான் என்பது இதுதானோ

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா...

    உண்மையிலே ஆச்சரியமான விடயம் தான் மூன்று இலட்சம் பெறுமதியான காரை மூவாயிரத்திற்கு விற்றது.

    ஆனாலும் இக் கதையுடன் சொல்லியிருக்கும் நீதிக் கருத்துக்கள் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா ஹா! செம்ம! இதைவிடப் பழிவாங்க வேற வழியே இல்லை! :-)
    நான்கூட பதிவின் தலைப்பைப் பார்த்து என்னடான்னு யோசிச்சேன்! சூப்பர் பாஸ்!

    //பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி//
    உண்மை!

    பதிலளிநீக்கு
  5. அண்ணே என்ன ஒரு Revenge lady...உண்மைதான் பேசி தீர்ப்பதே நல்லது!

    பதிலளிநீக்கு
  6. //உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.
    உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.
    தெளிவாகப் பேசுங்கள். எல்லாம் சரியாகும்.//

    ஒரு நல்ல கருத்தை இக் கதையின் மூலம் கொடுத்தற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    எல்லாம் சரியாகும்.

    அருமையான பழிவாங்கல்...

    பதிலளிநீக்கு
  8. உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    இதைக் கடை பிடிப்பின் எப்பிரச்சனையும் இல்லை..

    சரணடைகிறேன்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா!அருமையான நீதி விளக்கக் கதை!பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்கிற மனோபாவத்தினால்தான் இந்த விளைவு. அருமையான பதிவு.

    தமிழ்மணம் 8.

    பதிலளிநீக்கு
  11. கலக்கல் சார். இப்படியும் ஒரு பழிவாங்கலா?

    தமிழ்மணம் 8.

    பதிலளிநீக்கு
  12. அருமை. இப்பயும் ஒரு பழிவாங்கலா?

    த ஓ 8.

    பதிலளிநீக்கு
  13. இப்படியும் பழிவாங்கலா? ஆச்சர்யம்தான். அருமை.

    தமிழ்மணம் 8.

    பதிலளிநீக்கு
  14. இப்பிடியும் ஒரு பழிவாங்கலா? அருமையான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
  15. ஆஹா இப்பிடியும் பழிவாங்க கிளம்பி இருக்காங்களா...?

    பதிலளிநீக்கு
  16. எல்லா பிரச்சினைகளுக்கு நேரிடையாக பேசி தீர்ப்பதே நல்லது...!!!

    பதிலளிநீக்கு
  17. கார் போச்சே!!!
    கோபம் மட்டும் அல்ல அந்த பெண்மணியின் ஏமாற்றமும்தான் காரணம்!

    பதிலளிநீக்கு
  18. Sorry for repeted comments. Ennoda Computer la ulla pirachinaiyal ivvaaru nigalnthu vittathu. Sorry Sir.

    பதிலளிநீக்கு
  19. செவர்லே ஸ்பார்க்....கணவன் இதயத்தில் ஸ்பார்க்கோ ஸ்பார்க்!

    பதிலளிநீக்கு
  20. ரியாஸ் அஹமது கூறியது...

    //அருமை அருமை .....முதல் வருகை

    tamil manam 2//
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  21. ரஹீம் கஸாலி கூறியது...

    //கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு அமர்வான் என்பது இதுதானோ//
    சரிதான்!நன்றி கஸாலி.

    பதிலளிநீக்கு
  22. நிரூபன் கூறியது...

    // வணக்கம் ஐயா...

    உண்மையிலே ஆச்சரியமான விடயம் தான் மூன்று இலட்சம் பெறுமதியான காரை மூவாயிரத்திற்கு விற்றது.

    ஆனாலும் இக் கதையுடன் சொல்லியிருக்கும் நீதிக் கருத்துக்கள் அருமை ஐயா.//
    நன்றி நிரூ.

    பதிலளிநீக்கு
  23. ஜீ... கூறியது...

    // ஹா ஹா ஹா! செம்ம! இதைவிடப் பழிவாங்க வேற வழியே இல்லை! :-)
    நான்கூட பதிவின் தலைப்பைப் பார்த்து என்னடான்னு யோசிச்சேன்! சூப்பர் பாஸ்!

    //பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி//
    உண்மை!//
    நன்றி ஜீ.

    பதிலளிநீக்கு
  24. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே என்ன ஒரு Revenge lady...உண்மைதான் பேசி தீர்ப்பதே நல்லது!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  25. வே.நடனசபாபதி கூறியது...

    //உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.
    உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.
    தெளிவாகப் பேசுங்கள். எல்லாம் சரியாகும்.//

    //ஒரு நல்ல கருத்தை இக் கதையின் மூலம் கொடுத்தற்கு நன்றி.//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  26. இராஜராஜேஸ்வரி கூறியது...

    உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    எல்லாம் சரியாகும்.

    //அருமையான பழிவாங்கல்...//
    நன்றி இராஜராஜேஸ்வரி .

    பதிலளிநீக்கு
  27. மதுமதி கூறியது...

    உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    //இதைக் கடை பிடிப்பின் எப்பிரச்சனையும் இல்லை..

    சரணடைகிறேன்//
    நன்றி மதுமதி.

    பதிலளிநீக்கு
  28. Yoga.S.FR கூறியது...

    //வணக்கம் ஐயா!அருமையான நீதி விளக்கக் கதை!பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி Yoga.S.FR

    பதிலளிநீக்கு
  29. துரைடேனியல் கூறியது...

    //கலக்கல் சார். இப்படியும் ஒரு பழிவாங்கலா?

    தமிழ்மணம் 8.//
    நன்றி துரைடேனியல்.

    பதிலளிநீக்கு
  30. துரைடேனியல் கூறியது...

    // Sorry for repeted comments. Ennoda Computer la ulla pirachinaiyal ivvaaru nigalnthu vittathu. Sorry Sir.//
    இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது டேனியல்?! in fact,பின்னூட்ட எண்ணிக்கை கூடிவிட்டது என்று நான் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கிறேன்!!ஹா,ஹா.

    பதிலளிநீக்கு
  31. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஆஹா இப்பிடியும் பழிவாங்க கிளம்பி இருக்காங்களா...?//
    இதுவும் ஒரு விதம்!

    பதிலளிநீக்கு
  32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //எல்லா பிரச்சினைகளுக்கு நேரிடையாக பேசி தீர்ப்பதே நல்லது...!!!//
    ஆம்.நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  33. veedu கூறியது...

    //கார் போச்சே!!!
    கோபம் மட்டும் அல்ல அந்த பெண்மணியின் ஏமாற்றமும்தான் காரணம்!//
    எமாற்றத்தினால் பிறந்த கோபம்?!
    நன்றி veedu .

    பதிலளிநீக்கு
  34. ! சிவகுமார் ! கூறியது...

    // செவர்லே ஸ்பார்க்....கணவன் இதயத்தில் ஸ்பார்க்கோ ஸ்பார்க்!//
    பொறி பறக்குது!
    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  35. don't get mad, get even என்று சொல்வார்கள்... இதான்.

    பதிலளிநீக்கு
  36. நல்ல, பழி வாங்கல்!
    அருமை!

    இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  37. /*
    பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.

    உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    எல்லாம் சரியாகும். */
    உண்மையிலும் உண்மை அய்யா...

    பதிலளிநீக்கு
  38. அப்பாதுரை கூறியது...

    // don't get mad, get even என்று சொல்வார்கள்... இதான்.//
    நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  39. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // நல்ல, பழி வாங்கல்!
    அருமை!//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  40. சிராஜ் கூறியது...

    /*
    பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த வழி.

    உண்மையாகப் பேசுங்கள்.நியாயமாகப் பேசுங்கள்.உணர்ந்து பேசுங்கள். நம்பிக்கையோடு பேசுங்கள்.தெளிவாகப் பேசுங்கள்.

    எல்லாம் சரியாகும். */
    // உண்மையிலும் உண்மை அய்யா...//
    நன்றி சிராஜ்.

    பதிலளிநீக்கு
  41. பெண்களிடம் லொள்ளுவைத்துக் கொள்ளக்கூடாது
    அதுவும் குறிப்பாக மனைவியிடம்
    அதைவிட முக்கியமாக பெண்கள் விஷயத்தில்...
    அருமையான பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. Ramani சொன்னது…

    //பெண்களிடம் லொள்ளுவைத்துக் கொள்ளக்கூடாது
    அதுவும் குறிப்பாக மனைவியிடம்
    அதைவிட முக்கியமாக பெண்கள் விஷயத்தில்...
    அருமையான பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  43. ஆமாம் அய்யா! பேசித் தீர்த்துக்கொள்வதே சரியான வழி!

    பதிலளிநீக்கு
  44. அப்படி ஒரு கார் கெடைச்சா சொல்லி அனுப்புங்க

    பதிலளிநீக்கு
  45. கடைசியில் சொன்ன கருத்துக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  46. என்னதொரு யோசனை [என்னதொரு வில்லத்தனம்..... ] :(

    பதிலளிநீக்கு
  47. shanmugavel கூறியது...

    //ஆமாம் அய்யா! பேசித் தீர்த்துக்கொள்வதே சரியான வழி!//
    நன்றி shanmugavel

    பதிலளிநீக்கு
  48. சிவகுமாரன் கூறியது...

    //அப்படி ஒரு கார் கெடைச்சா சொல்லி அனுப்புங்க//
    ரெண்டு கிடைக்கணும்!
    நன்றி சிவகுமாரன்

    பதிலளிநீக்கு
  49. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //அருமை//
    நன்றி நண்டு @நொரண்டு

    பதிலளிநீக்கு
  50. ஆமினா கூறியது...

    //கடைசியில் சொன்ன கருத்துக்கள் அருமை.//
    நன்றி ஆமினா!

    பதிலளிநீக்கு
  51. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //என்னதொரு யோசனை [என்னதொரு வில்லத்தனம்..... ] :(//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு