தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஹாலிடே!ஜாலிடே!!

அப்பா:மகனே நான் பார்த்திருக்கும் பெண்ணை நீ மணந்து கொள்ள வேண்டும்.

மகன்:முடியாது .என் மனைவியை நான்தான் தேர்ந்தெடுப்பேன்.

அப்பா:நான் பார்த்திருக்கும் பெண் முகேஷ் அம்பானியின் மகள்.

மகன்:அப்படியென்றால் சரி!

அப்பா அதன்பின் முகேஷைச் சந்திக்கப் போகிறார்.

அப்பா:நான் உங்கள் பெண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன்.

முகேஷ்:இப்போது அவளுக்கு மணம் செய்வதாய் உத்தேசம் இல்லை.

அப்பா:நான் பார்த்திருக்கும் பையன் டி.சி.எஸ்.ஸில்.துணைத்தலைவராக இருக்கிறான்.

முகேஷ்:அப்படியென்றால் சரி!

அடுத்து டி.சி.எஸ்.தலைவரை பார்க்கப் போகிறார் அப்பா.

அப்பா:உங்கள் கம்பெனியில் துணைத்தலவராக் நியமிக்க ஒரு பையனைச் சிபாரிசு செய்ய வந்திருக்கிறேன்.

தலைவர்:இங்கு யாரும் தேவையில்லையே.

அப்பா:அந்தப்பையன் முகேஷ் அம்பானியின் மருமகன்.

தலைவர்:அப்படியென்றால் சரி!

இதுதான் வியாபார தந்திரம்!

20 கருத்துகள்:

  1. நல்ல தந்திரம் தான் போங்க - பிழைக்க தெரிந்தவர்கள்..

    பதிலளிநீக்கு
  2. பேஷா இருக்கு... உங்க அட்ரஸ் சொல்லுங்க... வர்றேன். எனக்கும் இந்த மாதிரி தந்திரங்கள்லாம் சொல்லிக் குடுங்க வாத்தியாரே.. அருமை. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இது அரசியல் தந்திரமும் வியாபாரத் தந்திரமும்
    சேர்ந்த தந்திரமா இருக்கும் போல இருக்கே
    மனம் கவர்ந்த பதிவு
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம2

    பதிலளிநீக்கு
  4. அநேகமாக அவர் வணிகவியல் துறை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதனாலதான் அவர் என்னைப்போல சிந்தித்திருக்கிறார்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இதெல்லாம் கண்டுக்காதிங்கப்பா!

    பதிலளிநீக்கு
  5. அந்த தந்தை கலைஞர் தந்திரத்தை உபயோகப் படுத்தி இருப்பார் போலிருக்கு

    பதிலளிநீக்கு
  6. இதுதான் வியாபார தந்திரம்! அருமை..

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா!ஐடியா நல்லாத் தானிருக்கு!மாட்னா???????("சங்கு தான்"ங்கிறீங்களா?)

    பதிலளிநீக்கு
  8. காந்தமிகு தந்திரம் தான்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. இது வியாபார தந்திரம் அல்ல... அரசியல்...

    பதிலளிநீக்கு
  10. வணிகர்களுக்கு வாழ்க்கை உட்பட எல்லாமே வணிகம் தான் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி,

    பதிலளிநீக்கு
  11. நல்ல தந்திரம்தான் அருமை

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  12. தந்தையின் சாமார்த்தியம் பாராட்டத்தக்கது தான்

    த.ம 6

    பதிலளிநீக்கு
  13. ஏற்கெனவே sms இல் வந்தது
    சுவையான பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  14. கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு