தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 26, 2012

எதிர் வீட்டுப் பெண்ணும் நானும்!

சன்னல் ழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதிர் வீட்டில் குடியிருக்கும் பெண் ஸ்கூட்டியில் வந்து இறங்கி உள்ளே சென்றாள்.
அவளுக்கு வயது 30 இருக்கலாம்.
அழகான பெண்.
வாளிப்பான உடற்கட்டு.
இன்னும் திருமணமாகாதவள்.
அந்த வீட்டில் தனியாகத்தான் இருந்தாள்.
அவள் உறவினர் என்று யாரும் வந்து நான் பார்த்ததில்லை.

அவள் ஒரு செல்ல நாய் வளர்த்து வந்தாள்.என்னைக் கண்டால் வாலாட்டும்
அவள் காலை அலுவலகம் சென்று ,மாலை திரும்பி வரும் வரை அந்த நாயைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு வேலைக்காரி வைத்திருந்தாள்.
அந்த நாயை ராஜா என்று பெயரிட்டு அழைத்து வந்தாள்.

அன்றும் அவள் வந்து சிறிது நேரத்தில் வேலைக்காரி போய் விட்டாள்.
நானும் என் ஆசனத்தில் சென்று அமர்ந்து விட்டேன்

சிறிதுநேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்தேன்.
அவள்!
புதிதாக ஒப்பனை செய்து அழகாக உடுத்தியிருந்தாள்.
வெளியில் செல்லத் தயாராக இருக்கிறாள் என்பது தெரிந்தது.
”வாங்க!” அழைத்தேன்.

உள்ளே வந்தாள்.”இன்றைக்கு எனக்கு ஒரு ஊக்கத்தொகை கிடைத்தது. எனவே நான் கொண்டாடும் மன நிலையில் உள்ளேன்.வெளியில் சென்று,கொஞ்சம் ஒயின்,பின் நல்ல உணவு.இரவு சினிமா என ஜாலியாகக்  கொண்டாட நினைக்கிறேன்.அதற்காகத்தான் உங்களைத் தேடி வந்தேன்.உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கிறதா?”

எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?மனம் எங்கோ பறந்தது. எதையெதையோ நினைத்தது.

”ரொம்ப சந்தோஷம்.எனக்கு ஒரு வேலையும் இல்லை”  சொன்னேன்.

”அதற்குத்தான் உங்கள் உதவி வேண்டும்.நான் இல்லையென்றால் ராஜா கத்த ஆரம்பித்து விடுவான்.உங்களுடன் அவன் பழகியிருக்கிறான்.எனவே நான் வரும் வரை ராஜாவைக் கொஞ்சம் பார்த்துக் கொள்வீர்களா?”

இப்படி ஒரு பல்பா?!

37 கருத்துகள்:

 1. ஆசை தோசை அப்பளம் வடை...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா!அருமை.வைன் அடித்து பிரியாணி?!சாப்பிடக் குடுத்து வைக்கலியே?சரி விடுங்க, "ராஜா"வைப் பாத்துக்கிற வேலையாச்சும் கெடைச்சுதே,ஹ!ஹ!ஹா!!!!!!

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. படிச்சுட்டே வந்தப்ப இப்படி ஒரு பல்பு கிடைக்கும்கறத நான் எதிர்பார்க்கவே இல்லை. ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 5. ;) அருமையான நகைச்சுவையான முடிவு. பாதி படிக்கும்போதே எனக்கு பொறி தட்டி விட்டது.

  பதிலளிநீக்கு
 6. ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! என்னா பல்பு! :-)

  பதிலளிநீக்கு
 7. அதானே பார்த்தேன்,கதையில் ட்விஸ்ட் நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 8. //ரெவெரி கூறியது...

  //ஆசை தோசை அப்பளம் வடை..//
  :) நன்றி ரெவெரி

  பதிலளிநீக்கு
 9. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அடக்கடவுளே....தேடிவந்த சோதனை!!//
  எப்படியெல்லாம் வருது சோதனை!

  பதிலளிநீக்கு
 10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்???????.........//
  ?????!!!!!! நன்றி சிபி

  பதிலளிநீக்கு
 11. Yoga.S.FR கூறியது...

  // வணக்கம் ஐயா!அருமை.வைன் அடித்து பிரியாணி?!சாப்பிடக் குடுத்து வைக்கலியே?சரி விடுங்க, "ராஜா"வைப் பாத்துக்கிற வேலையாச்சும் கெடைச்சுதே,ஹ!ஹ!ஹா!!!!!!//
  :-) நன்றி

  பதிலளிநீக்கு
 12. மகேந்திரன் கூறியது...

  // சரியான பல்பு தான்.. போங்க..//
  நன்றி மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 13. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //ராஜாவுக்கேற்ற துணையை கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி..//
  :)) நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 14. கணேஷ் கூறியது...

  // படிச்சுட்டே வந்தப்ப இப்படி ஒரு பல்பு கிடைக்கும்கறத நான் எதிர்பார்க்கவே இல்லை. ஹா... ஹா...//
  நன்றி கணேஷ்

  பதிலளிநீக்கு
 15. ஸ்ரீராம். கூறியது...

  // :)))))))//
  ஹா,ஹா.நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 16. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  // ;) அருமையான நகைச்சுவையான முடிவு. பாதி படிக்கும்போதே எனக்கு பொறி தட்டி விட்டது.//
  வைகோ சார்! நீங்கள் சிறுகதை மன்னனாயிற்றே!இதெல்லாம் ஜுஜூபி!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஜீ... கூறியது...

  //ஹா ஹா ஹா! சூப்பர் பாஸ்! என்னா பல்பு! :-)//
  நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 18. Asiya Omar கூறியது...

  //அதானே பார்த்தேன்,கதையில் ட்விஸ்ட் நல்லாயிருக்கு.//
  நன்றி Asiya Omar

  பதிலளிநீக்கு
 19. ஏமாற்றம் உங்களுக்கு மட்டுமல்ல!

  பதிலளிநீக்கு
 20. பதிவின் தொடக்கத்தைப் படிக்கும்போதே முடிவில் ஏதோ ஒரு எதிர்பாரா திருப்பத்தை எதிர்பார்த்தேன்.அதுபோலவே இறுதியில் தந்த ‘சஸ்பென்ஸை’ படித்ததும் சிரிப்பை அடக்கமுடியவில்லை!

  பதிலளிநீக்கு
 21. ஹா.ஹா.ஹா.ஹா. பாஸ் செம பல்பு வாங்கியிருக்கீங்க போங்க

  பதிலளிநீக்கு
 22. நல்ல ட்விஸ்ட்... :) ராஜாவுடன் பொழுதை எப்படி கழித்தீர்கள் என்றும் ஒரு பதிவு போடலாமே... :))))

  பதிலளிநீக்கு
 23. FOOD NELLAI கூறியது...

  //ஏமாற்றம் உங்களுக்கு மட்டுமல்ல!//
  நன்றி சங்கரலிங்கம்

  பதிலளிநீக்கு
 24. வே.நடனசபாபதி கூறியது...

  //பதிவின் தொடக்கத்தைப் படிக்கும்போதே முடிவில் ஏதோ ஒரு எதிர்பாரா திருப்பத்தை எதிர்பார்த்தேன்.அதுபோலவே இறுதியில் தந்த ‘சஸ்பென்ஸை’ படித்ததும் சிரிப்பை அடக்கமுடியவில்லை!//
  நன்றி சபாபதி அவர்களே

  பதிலளிநீக்கு
 25. RAMVI கூறியது...

  //அடப்பாவமே!!நல்ல டிவிஸ்ட்.//
  நன்றி ராம்வி

  பதிலளிநீக்கு
 26. துரைடேனியல் கூறியது...

  // Super than. But....m...m...ippadi ellaam vera ninaippu irukka. irukkattum...irukkattum.//
  :) நன்றி துரைடேனியல்

  பதிலளிநீக்கு
 27. K.s.s.Rajh கூறியது...

  // ஹா.ஹா.ஹா.ஹா. பாஸ் செம பல்பு வாங்கியிருக்கீங்க போங்க//
  நன்றி ராஜ்

  பதிலளிநீக்கு
 28. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நல்ல ட்விஸ்ட்... :) ராஜாவுடன் பொழுதை எப்படி கழித்தீர்கள் என்றும் ஒரு பதிவு போடலாமே... :))))//
  :) நன்றி வெங்கட்

  பதிலளிநீக்கு