தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 20, 2012

சொர்க்கத்துக்குப் போன ஜோடி!

மணம் புரிந்து கொள்வதற்காக ஒரு ஜோடி சர்ச்சுக்குப் போய்க் கொண்டி ருந்தனர்.அப்போது ஒரு விபத்தில் சிக்கி இருவரும் மரணமடைந்தனர். சொர்க்கத்தை அடைந்த இருவரும்  அதன் வாயிலில் காத்திருந்தனர்.சிறிது நேரத்தில் வெளியே வந்த சொர்க்கக் காப்பாளர்,அவர்களை உள்ளே வருமாறு அழைத்தார்.

அவர்கள் அவரிடம் சொன்னார்கள்”ஐயா!நாங்கள் மணமுடிக்கச் சென்று கொண்டிருந்த போது மரணமடைந்தோம்.சொர்க்கத்தில் நாங்கள் திருமணம்  செய்து கொள்ள இயலுமா?”

இது புதிய கேள்வியாக இருக்கவே அவர் குழம்பினார்.பின்”சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

அவர் சென்றபின், அவர்கள் சொர்க்கத்தில் தங்கள் மண வாழ்க்கை பற்றிப் பேச ஆரம்பித்தனர்.ஒத்துப் போகவில்லை யென்றால்  என்ன செய்வது என யோசித்தனர்.

மூன்று மாதம் கழித்துக் காப்பாளர் திரும்பி வந்து சொன்னார்”நீங்கள் மணம் புரிந்து கொள்ளலாம்”.

அவர்கள் கேட்டனர்”ஒத்துப் போகவில்ல என்றால் நாங்கள்  மண விலக்குப்  பெற முடியுமா?”

அவர் வெறுத்துப் போய்ச் சொன்னார்.”மிகவும் சிரமப்பட்டுச் சொர்க்கத்தில்     மணம் செய்து வைக்க ஒரு பாதிரியாரைக்கண்டு பிடிப்பதற்கே  மூன்று மாதம் ஆகி விட்டது!ஒரு வக்கீலை இங்கு கண்டு பிடிக்க எத்தனை மாதம் ஆகுமோ?!”

!!!!!!!!!!!

56 கருத்துகள்:

 1. அப்படியானால் பாதிரியார்களில் பெரும்பாலானோர் நரகத்தில்தான் இருக்கிறார்கள் என்றுதானே நகைச்சுவையோடு சொல்லவருகிறீர்கள்..
  நல்லதொரு கதை.

  நேரமிருந்தால் வாருங்கள்..

  நீ யாரெனத் தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 2. திருமணம் செய்யாத வரைக்கும்தான் இது சொர்க்கம். நீங்கள் திருமணம் செய்து கொண்டால், இது உங்களுக்கு சொர்க்கமாக இருக்காது என்று, சொர்க்கக் காப்பாளர் அந்த ஜோடிகளிடம் சொல்வார் என்று நான் பாதியில் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது நினைத்தேன்.. ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறி எங்களை சிரிக்க வைத்துவிட்டது. நல்ல நகைச்சுவை பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. ஐயா உங்கள் வலைச்சர அறிமுகம் பற்றி இன்று தான் அறிந்தேன் ... மிக்க நன்றி ..இந்த அரசியல் உலகில் இந்த பொறுப்பற்ற என்னை நினைவில் வைத்து அறிமுகம் செய்தது மெய்சிலிரிக்க வைத்தது ....

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதிவு ஐயா .... ரசித்தேன் சிரித்தேன்

  பதிலளிநீக்கு
 5. கதையை நகைச்சுவையுடன் முடிப்பதில்
  நீங்கள் வல்லவர் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஐயா!அட,அங்க போயும் இதே கதை தானா?மூணு மாசம் கழிச்சு வந்து தான் பதிலே சொல்லுறாங்கன்னா????பூலோகமே பெட்டர் போலருக்குதே????????

  பதிலளிநீக்கு
 7. மொத்தத்துல,சொர்க்கத்துல நல்லவங்களே இல்லைன்னு சொல்ல வரீங்க!(நான் தப்பிச்சுக்குவேன்!)

  பதிலளிநீக்கு
 8. வலைச் சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. செய்தி அறிந்து நன்றி சொல்லவே எனக்கு இத்தனை நாளாகி விட்டது. நான் தகுதியானவனா தெரியவில்லை.
  நன்றி

  பதிலளிநீக்கு
 9. கிறித்துவ நண்பர்களிடம் இருந்து எதிர்ப்பு வரப் போகிறது. சமாளிக்க தயாராய் இருங்கள்

  பதிலளிநீக்கு
 10. சிந்திக்கச் செய்யும் கதை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம6

  பதிலளிநீக்கு
 11. அண்ணே சொர்கத்தை விட இங்கே மேல் போல ஹிஹி...நான் தப்பிச்சிட்டனா!

  பதிலளிநீக்கு
 12. சொர்க்கத்தில் வழக்கறிஞர் கிடைப்பது அபூர்வம் என்பதை சொல்லாமல் சொல்லி கிண்டலடித்திருக்கிறீர்கள். நகைச்சுவையை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 13. மேலான(சொர்க்கம்) பதிவு!
  நன்று நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 14. அட, இது நல்ல யோசனை!
  சொர்க்கமே நரகமாகவும் மறுபடி சொர்க்கமாகவும் மாறுமா....!!

  பதிலளிநீக்கு
 15. ஆகா என்ன ஒரு குத்தல்.அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
 16. திருமணம் செய்து வைப்பதே பாவமா?ஹா ஹா!

  பதிலளிநீக்கு
 17. கதையின் உள்குத்து நன்றாகவே புரிகிறது சார்...

  பதிலளிநீக்கு
 18. சிரிக்கவும்,சிந்திக்க வைத்தது கதை.அருமை.

  பதிலளிநீக்கு
 19. பாஸ் உங்கள் பதிவுகளில் உள்ள சிறப்பே இதுதான் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் சில விடயங்களை சொல்வீர்கள் அந்த வகையில் இந்த பதிவும் சிறப்பு

  சொர்க்கத்திலும் விவாகரத்து பற்றி பேசுராங்களே அவ்வ்வ்வ்வ்வ்

  வக்கீல் மட்டும் இல்லை நீதிபதியும் கொண்டுவரவேண்டுமே.நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 20. சொர்க்கத்துக்குப் போன ஜோடி!"

  ரசிக்க வைத்தார்கள்!

  பதிலளிநீக்கு
 21. நீங்கள் சிறந்த கவிஞர் என்பது எல்லோருக்கும் தெரியும் சிவகுமாரன்

  பதிலளிநீக்கு
 22. சொர்க்கத்துல போயும் டைவர்ஸா? வெளங்கிடும்

  பதிலளிநீக்கு