தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 16, 2012

கோடரிக்காய்க் காத்திருக்கும் மரம்!


                 நான்!
                இன்றிருப்பது போல்
                முன்பிருக்கவில்லை

               முன்பெல்லாம்,
               கிளைகள் பரவி நிற்க
               இலைகள் அடர்ந்திருக்க
               கம்பீரமாய் நின்றவன்.

              ஒவ்வொரு ஆண்டும்
              இலைகள் உதிர்ந்தாலும்
              மீண்டும் துளிர்த்தெழும்!

               பூத்தேன்,காய்த்தேன்
              கனி கொடுத்தேன்.

              என் மீது ஏறி விளையாடி
              மகிழ்ந்தவர் எத்தனை?

             கல்லடித்துக் கனிபறித்த
             சிறுவர்கள் எத்தனை?

             உச்சி வெயிலில்
             என் மடியில் இளைப்பாறி
             சுகம் கண்டோர் எத்தனை?

             பறவைகள் கூடுகட்டும்
            முட்டையிட்டுக் 
            குஞ்சு பொறிக்கும்

            எப்போதும் கூச்சலும் கும்மாளமும்

            அதெல்லாம் இன்றில்லை!

            இன்று நான் பட்டமரம்.

            பறவைகள் கூடு கட்டக்
            கிளைகளில்லை,
           இலைகளில்லை.

           சிறுவர்கள் பறிக்கக்
           காயில்லை பழமில்லை

           என் அடியில் இளப்பாற
           கொஞ்சமும் நிழலில்லை.

           என்னால் யாருக்கும்
           பயனில்லை.

           நான் நிற்கிறேன்

           தனி மரமாய்

           உடல் காய்ந்து,சுருங்கி
           இருக்கும் கிளைகள்
           உடைந்து
           உடலெல்லாம் ஒரே வலி.

          நான் காத்திருக்கிறேன்
          ஒரே ஒரு கோடரிக்காய்!
                


43 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா!தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!!மனித வாழ்க்கையை அழகாக கவி வரிகள் மூலம் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள், நன்றி!!!!

  பதிலளிநீக்கு
 2. அருமை...ரசித்தேன்...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்!
  //உடல் காய்ந்து,சுருங்கி
  இருக்கும் கிளைகள்
  உடைந்து
  உடலெல்லாம் ஒரே வலி.

  நான் காத்திருக்கிறேன்
  ஒரே ஒரு கோடரிக்காய்! //

  மரமும் மனிதனும் ஒண்ணு என்று கவி காளமேகம் பாணியில் சிலேடைப் பாடலை படத்தோடு முடித்து இருக்கிறீர்கள். புதுமை! அருமை!

  பதிலளிநீக்கு
 4. அருமையான வரிகள்
  கடைசி வரியும் படமும்
  கோடாரியாக மனதில் பாய்ந்தது.

  பதிலளிநீக்கு
 5. என்ன இது...? நீங்க கருனைக்கொலைக்கு ஆதரவு தெரிவிக்கிறீங்களா...

  பதிலளிநீக்கு
 6. பழுத்த இலைகள் உதிர்ந்து மரம் இயலாமையடன் ஏக்கத்துடன் புலம்புவதை நன்றாகச் சொல்லியுள்ளது கவிதை. மரம் என்றும் கோடரி என்றும் எவற்றைச் சொல்கிறீர்கள் என்பது புரிந்ததில் மனம் சற்றே பாரமாய்!

  பதிலளிநீக்கு
 7. கோடாரிக்காய் காத்திருக்கும் மரங்கள் நிறையவே இந்த சமூகத்தில்/மரங்கள் மட்டும்தானா?

  பதிலளிநீக்கு
 8. பூவும்,பிஞ்சும்,காயும்,கனியுமாக நிறைந்து தொங்கிய மரம் பட்டுப்போனவுடன் அதன் நிலை,,,,,,?எதையோ நினைக்க வைக்கிறது.நல்ல் பதிவு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. முதுமையின் ஆற்றாமை.இளமையில் விரும்பும் நாமே, முதுமை அடைந்தவுடன் உதாசீனம் செய்கிறோம். அழகிய ஒப்பீடு.சிந்திக்க செய்யும். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அருமையான கவிதை. இந்த கவிதை மரத்தை உருவாக்கப்படுத்தி எழுதப் பட்டிருந்தாலும் கீழே உள்ள புகைப்படம் உண்மையான உட்பொருளை உணர்த்துவதாக நான் அறிகிறேன்.மனதைப் பிசைந்த கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. கோடரிக்காக காத்திருக்கா? கோடரியாக காத்திருக்கா?

  ரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 12. மரத்தை வைத்து மனித வாழ்க்கையை சொல்லியிருக்கிங்க..

  கடைசி கோடரி வரியை தவிர்த்து..

  பதிலளிநீக்கு
 13. ஒரு வாழ்வியல் தத்துவத்தை கவிதையாக்கியிருக்கீங்க அருமை பாஸ்

  பதிலளிநீக்கு
 14. அண்ணே கவிதை என்று சொல்லிச்செல்லும் நிதர்சனம்..கொன்னுட்டீங்க!

  பதிலளிநீக்கு
 15. வாழ்க்கை சக்கரத்தை புரிய வைத்து மனதில் பாரத்தை ஏற்றிய அருமையான கவிதை மற்றும் படம்!

  பதிலளிநீக்கு
 16. வாழ்க்கை சக்கரத்தை புரிய வைத்த மற்றும் மனதில் சுமையேற்றிய கவிதை வரிகள் & படம்

  பதிலளிநீக்கு
 17. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  //அருமை.//

  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. Yoga.S.FR கூறியது...

  //வணக்கம் ஐயா!தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!!மனித வாழ்க்கையை அழகாக கவி வரிகள் மூலம் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள், நன்றி!!!!//

  நன்றி Yoga.S.FR .வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

  பதிலளிநீக்கு
 19. ரெவெரி கூறியது...

  //அருமை...ரசித்தேன்...வாழ்த்துக்கள்.//
  நன்றி ரெவெரி

  பதிலளிநீக்கு
 20. தி.தமிழ் இளங்கோ கூறியது...

  வணக்கம்!
  //உடல் காய்ந்து,சுருங்கி
  இருக்கும் கிளைகள்
  உடைந்து
  உடலெல்லாம் ஒரே வலி.

  நான் காத்திருக்கிறேன்
  ஒரே ஒரு கோடரிக்காய்! //

  // மரமும் மனிதனும் ஒண்ணு என்று கவி காளமேகம் பாணியில் சிலேடைப் பாடலை படத்தோடு முடித்து இருக்கிறீர்கள். புதுமை! அருமை!//
  நன்றி தமிழ் இளங்கோ.

  பதிலளிநீக்கு
 21. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //அருமையான வரிகள்
  கடைசி வரியும் படமும்
  கோடாரியாக மனதில் பாய்ந்தது.//
  நன்றி ஏ.ஆர்.ஆர்

  பதிலளிநீக்கு
 22. Philosophy Prabhakaran கூறியது...

  //என்ன இது...? நீங்க கருனைக்கொலைக்கு ஆதரவு தெரிவிக்கிறீங்களா...//
  அதை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள் பிரபா?இந்த மாதிரி முதியவர்கள் வேண்டுதலைக் கேட்டதுண்டா? ”ஆண்டவா என்னைச் சீக்கிரமே கூட்டிச் செல்”என்றே வேண்டுவார்கள். இங்கு கோடரி ஒரு குறியீடு.-மரணம்.வெட்டுபவன் அவன்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. கணேஷ் கூறியது...

  //பழுத்த இலைகள் உதிர்ந்து மரம் இயலாமையடன் ஏக்கத்துடன் புலம்புவதை நன்றாகச் சொல்லியுள்ளது கவிதை. மரம் என்றும் கோடரி என்றும் எவற்றைச் சொல்கிறீர்கள் என்பது புரிந்ததில் மனம் சற்றே பாரமாய்!//
  நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 24. விமலன் கூறியது...

  //கோடாரிக்காய் காத்திருக்கும் மரங்கள் நிறையவே இந்த சமூகத்தில்/மரங்கள் மட்டும்தானா?//
  உண்மை.

  பதிலளிநீக்கு
 25. விமலன் கூறியது...

  //பூவும்,பிஞ்சும்,காயும்,கனியுமாக நிறைந்து தொங்கிய மரம் பட்டுப்போனவுடன் அதன் நிலை,,,,,,?எதையோ நினைக்க வைக்கிறது.நல்ல் பதிவு.வாழ்த்துக்கள்.//
  நன்றி விமலன்.

  பதிலளிநீக்கு
 26. FOOD NELLAI கூறியது...

  //முதுமையின் ஆற்றாமை.இளமையில் விரும்பும் நாமே, முதுமை அடைந்தவுடன் உதாசீனம் செய்கிறோம். அழகிய ஒப்பீடு.சிந்திக்க செய்யும். நன்றி.//
  நன்றி சங்கரலிங்கம்.

  பதிலளிநீக்கு
 27. வே.நடனசபாபதி கூறியது...

  //அருமையான கவிதை. இந்த கவிதை மரத்தை உருவாக்கப்படுத்தி எழுதப் பட்டிருந்தாலும் கீழே உள்ள புகைப்படம் உண்மையான உட்பொருளை உணர்த்துவதாக நான் அறிகிறேன்.மனதைப் பிசைந்த கவிதை! வாழ்த்துக்கள்!//
  நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 28. மனசாட்சி கூறியது...

  //கோடரிக்காக காத்திருக்கா? கோடரியாக காத்திருக்கா?//
  // ரசித்தேன்..//
  கோடரி விழுந்தால்தான் கோடரியாகவும் ஆகமுடியும்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. Riyas கூறியது...

  // மரத்தை வைத்து மனித வாழ்க்கையை சொல்லியிருக்கிங்க..

  கடைசி கோடரி வரியை தவிர்த்து..//
  நன்றி ரியாஸ்

  பதிலளிநீக்கு
 30. K.s.s.Rajh கூறியது...

  //ஒரு வாழ்வியல் தத்துவத்தை கவிதையாக்கியிருக்கீங்க அருமை பாஸ்//
  நன்றி ராஜ்

  பதிலளிநீக்கு
 31. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே கவிதை என்று சொல்லிச்செல்லும் நிதர்சனம்..கொன்னுட்டீங்க!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 32. சைதை அஜீஸ் கூறியது...

  //வாழ்க்கை சக்கரத்தை புரிய வைத்து மனதில் பாரத்தை ஏற்றிய அருமையான கவிதை மற்றும் படம்!//
  நன்றி அஜீஸ்

  பதிலளிநீக்கு
 33. மனதை நெகிழ வைக்கும் கவிதை.அருமையாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 34. தோன்றியது எதுவும் நிலைத்தது இல்லையே!!வருவார்கள் பிளாட் போட...

  பதிலளிநீக்கு
 35. RAMVI கூறியது...

  //மனதை நெகிழ வைக்கும் கவிதை.அருமையாக இருக்கு.//
  நன்றி RAMVI

  பதிலளிநீக்கு
 36. இது ஒற்றைக் கவிதை அல்ல!
  கருத்துக் காவியம்!
  அருமை! பித்தரே! அருமை!
  பாடலும் படமும் மனித வாழ்வின்
  நிலையை உணர்த்தும் பாடமாகும்
  வெட்டப் படும் மரத்தின் கிளையே வெட்டும் கோடாரிக்கிக்
  காம்பாகப் பயன் படுவது போல
  நாமும் இறந்தும் பயன் பட வேண்டும்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 37. மனசைத்தொட்ட உண்மையிது!
  வாழ்த்துகள் சென்னைபித்தன்!நன்றி!

  வெட்டப்படும் பட்டமரம் விறகாகும்!
  மனிதன் விட்டுச்சென்ற நற்செயல்கள் நிலையாகும்!

  பதிலளிநீக்கு
 38. பட்ட மரம், வாழ்க்கையில் ஓடாக உழைத்து , தனி மரமாக நிற்கும் முதியவர் .... superb analogy வாசு

  பதிலளிநீக்கு