தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 02, 2012

பெண்ணின் பின்புறத்துக்கு க் காப்பீட்டுத்தொகை 4 மில்லியன் ஸ்டெர்லிங்


நமக்கெல்லாம் ஆயுள் காப்பீடு தெரியும்.பல பிரபலங்கள்,தங்கள் அழகுக்கு முக்கியம் எனக்கருதும் உடல் உறுப்புகளைக் காப்பீடு செய்து கொள்வார்கள் ,தெரியும்.ஆனால் ஒரு பெண் தனது பின் புறத்தை-முதுகு அல்ல,உட்காரும் இடம்-நான்கு மில்லியன் ஸ்டெர்லிங்குக்குக் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார் என்கிறது பத்திரிகைச் செய்தி!அது அவள் அழகுக்குக் காரணமானது என்பதால் அல்ல!அவளுக்கு  வருவாய் ஈட்டித்தருகிறது என்பதால்!

பிரிட்டனில் இருக்கும் ஒரு ஓட்டல் சங்கிலியின் பல ஓட்டல்களில் மொத்தம் 46000 படுக்கைகள்,தங்குபவர்களுக்கான அறைகளில் போடப்பட்டுள்ளன. அவற்றின் மிருதுத்தன்மையைச் சோதிப்பதே அவரது வேலை.அதில் உட்கார்ந்து,படுத்துக்  குதித்துபார்த்துச் சோதித்து அதன் தரத்தை அவர் உறுதி செய்ய வேண்டும்.படுக்கையில் ஒரு சிறு உறுத்தல்,முடிச்சு  இருந்தாலும் அவர் கண்டு பிடித்து விடுகிறார். இப்பதவிக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ’படுக்கையில் குதிக்கும் இயக்குநர்’!!ஒரு நாளைக்கு 24 படுக்கைகளை அவர் சோதித்துப் பார்க்கிறார்.

இந்த வேலைக்கு அந்த உறுப்பு மிக முக்கியம் என்பதால் அதை மிகக் கவனமாகப் பேணி வருகிறார். எஎனவேதான் காப்பீடு!

எஸ்.வி.சேகர் நாடக ஜோக்

” டாக்டர்,உட்காரும் இடத்தில் கட்டி.
 
கொஞ்சம் தள்ளி உக்காரேன்யா!”

க்ரேஸி மோகன் நாடகத்தில்

“நீங்க பாட்டுக்கு உக்காரர  இடத்தில கிழிஞ்சிருக்கு தச்சு வைன்னு சொல்லிட்டுப் போயிட்டேள்.பாத்தேன்.நீங்க சோஃபாவில உக்காருவேள். அதைத்தச்சு வச்சேன். ஸ்கூட்டர் சீட்ல உக்காருவேள்.அதைத்தச்சு வச்சேன்.இன்னும் ஏதாவது தைக்கணுமா?”

32 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா தல கொன்னுட்டீங்க போங்க ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 2. எஸ் வி சேகர், கிரேசி மோகன் ஜோக் அட்டகாசம் சிரிச்சி முடியல...!!!

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. நன்னாயிருக்கே கொழந்தே!
  நம்ம "கொழந்த" கூட கிளு கிளு பதிவு போட்டா இன்னமும் நல்லாதான் இருக்கும்.
  வேணாம், அதுக்குத்தான் வேற நெறைய பேர் இருக்காளே !

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பணிசுமை, நேரமின்மை காரணமாக இங்கு வர முடிவதில்லை.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் பாணியில் கலக்கியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 6. // தனது பின் புறத்தை-முதுகு அல்ல,உட்காரும் இடம் //

  ஹி.. ஹி... ரொம்ப கஷ்டப்பட்டு ஆபாசமில்லாமல் விளக்கியிருக்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஐயா!என்னமோ போங்க.எது,எதுக்கெல்லாமோ இன்சூரன்ஸ்(காப்புறுதி)பண்ணுறாங்க! நமக்கு வீட்டுக்கு இன்சூரன்ஸ் பண்ணவே தாவுதீந்து போவுது!

  பதிலளிநீக்கு
 8. காலக்கொடுமைதான்
  எதுக்கெல்லாம் காப்பீடு செய்வது என்று இல்லாமல் ஆகிவிட்டது
  நகையுணர்வோடு பதிவாக்கியவிதம் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 9. சுவையான பதிவு.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. டீ எஸ்டேட்ல டீயை சுவைச்சுப் பார்த்து தரம் பிரிக்கறதுக்கு ஒரு ஆளை வெச்சிருப்பாங்கன்னு சொல்வாங்க. ஹோட்டல்ல கூட இப்படி ஒரு ஆளா? ஹா... ஹா... கிரேஸியின் ஜோக் அட்டகாசம்!

  பதிலளிநீக்கு
 11. தேயிலைத் தொழிற்சாலையில் Tea Taster என்று ஒருவர் இருப்பார். தயாரிக்கப்படும் தேயிலையின் தேநீர் பருகி, அதன் சுவை மூலம் தரத்தை கண்டுபிடிப்பதே அவர் வேலை.அது போல அல்லவா இது இருக்கிறது.

  எதை எதைத்தான் காப்பீடு செய்வது என்பதற்கு வரைமுறை இல்லாமல் போய்விட்டது போலும். ம்.ம்.. காலம் மாறித்தான்(கெட்டுத்தான்) போய்விட்டது!

  பதிலளிநீக்கு
 12. இதுகளை எங்க போய் சொல்லுறது ஜயா

  இப்படித்தான் முன்பு ஒரு முறை ஒரு பொப் பாடகி சப்பி துப்பின சுவிங்கம் 150 கோடிக்கு ஏலம் போனதாம்

  என்ன கொடுமை சரவணன்

  பதிலளிநீக்கு
 13. அண்ணே வருமானம் வருதுன்னா காப் ஈடு போட்டு வைக்க வேண்டியது தானே..ஹிஹி...என்ன இருந்தாலும் உக்கார்ர இடமாச்சே அதான் சொன்னேன் ஹிஹி!

  பதிலளிநீக்கு
 14. இளமையான இனிமை
  வழமையான வியப்பு
  பாந்தமான பதிவு
  அமர்க்களம் அய்யா...........

  பதிலளிநீக்கு
 15. சுவாரஸ்யமான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. Sorry for my long absence sir. Because of my heavy work. Pinpurathukku ivvalo periya amount ku insurance a? Acharyamthan sir. Nagaisuvai apaaram. Thodarga.

  TM 9.

  பதிலளிநீக்கு