தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 27, 2012

நிர்வாண தேசம்!


ஒரு நாடு இருந்தது.

அந்நாட்டு மக்கள் எவருமே உடை அணிவதில்லை

 ஆண் ,பெண் அனைவரும் எப்போதும் நிர்வாணமாகவே இருப்பர்.

இதற்கும் ஒரு கதை  உண்டு. 

ஒரு வியாபாரியால் முன்பு ஒரு அரசன் யாருக்கும் தெரியாத உடை என்று  சொல்லி ஏமாற்றப்பட்டான்.

அதன் பின் அந்த  மன்னன்,நிர்வாணமே சிறந்த உடை என்று பிரகடனம் செய்து மக்கள் அனைவரும் ,அரச குடும்பம் உட்பட ,நிர்வாணமாகவே இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தான்.

காலப்போக்கில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன,.அரசியல் நிர்ணயச் சட்டத்திலேயே காலத்துக்கேற்ப  திருத்தங்கள் வரும் போது அரசாணையில் வரக்கூடாதா என்ன?

மணமான ஆணும் பெண்ணும் அவர்களது  பிறப்புறுப்பை மறைத்து ஒரு கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டது.அதற்குப் பூட்டும் உண்டு!

இந்தச் சாவி கணவன் பூட்டுக்கான சாவி மனைவியிடமும்,மனைவி பூட்டுக்கான சாவி கணவனிடமும் இருக்கும்.இதன் காரணமாக இருவரும் எந்நேரமும் சேர்ந்தே இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.வேலையில் கூட இருவரும் ஒரே இடத்தில் பணி புரிவதற்காகச் சட்டம் இயற்றப் பட்டது.    ஒருவர் மற்றவருக்குத் துரோகம் செய்வதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத செயலாயிற்று. இருவரும் விரும்பினாலொழிய, உடலுறவு என்பது இயலாததாயிற்று.

அந்நாடு ஒரு அடர்ந்த கானகத்தின் நடுவே இருந்தது.மிகப்பெரிய கோட்டைச்  சுவர் இருந்தது.கதவு கிடையாது.மக்கள் யாரும் வெளி உலகத்தைப் பார்த்ததில்லை.வேண்டியன எல்லாம் உள்ளேயே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஒருநாள் ஒரு அந்நியன் காட்டுக்குள் வந்தவன்,கோட்டைச் சுவரைப் பார்த்து,அதில் உள்ள.குழிகள்,கற்கள் மீது கால் வைத்து ஏறி ,அது போலவே உள்ளே இறங்கினான்.அப்போது இரவு நேரம்.ஒரு புதர் மறைவில் அவன் தூங்கிப் போனான்.

காலை குரல்கள் கேட்டு விழித்தான் . புதர் மறைவிலிருந்து பார்த்தான். அவன் கண்டதை அவனால் நம்ப முடியவில்லை.ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகச் சென்று கொண்டிருந்தனர்.அருகில் இருந்த வயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தனர்.

இப்போது அவர்கள் முன் போய் நின்றால் தன் உடைகளைக் கண்டு அவர்கள் அந்நியன் எனத் தெரிந்து கொண்டு விடுவார்கள் பிரச்சினை யாகி விடும் எயோசித்தான்.தன் உடைகளைக் களைந்து விட்டு வெளியே வந்தான்.

அவர்கள் முன் நடந்தான்.

அவர்கள் பிறவியிலிருந்தே  நிர்வாணத்துக்குப் பழகிப் போனவர்கள். அனால் அவன் அப்படியல்ல.அந்தப் பெண்களின் நிர்வாணம் அவனையும்  மீறி வெளிப்படையான மாற்றத்தை அவனில் நிகழ்த்தியிருந்தது. அதைப் பார்த்த அவர்கள் அவன் அவர்களில் ஒருவன் அல்ல என்பதைத் தெரிந்துகொண்டனர்.சத்தம் போட்டனர்.அவன் தப்பிக்க முடியாதபடி ஆண்கள் அவனை வளைத்துப் பிடித்தனர்.

அவர்களில் மூத்ஒருவன் சொன்னான்”நாம் இவனை மன்னர் முன் இழுத்துச் செல்வோம்.இவனுக்கான தண்டனையை மன்னர் முடிவு செய்வார்”

அவன் இழுத்துச் செல்லப்பட்டான்.

(தொடரும்)

15 கருத்துகள்:

  1. 18 + ன்னு போடுங்க அய்யா...-:)

    பதிலளிநீக்கு
  2. கதைக் களமே ரொம்ப வித்தியாசமா இருக்குது. சரியான கட்டத்து தொடரும்னு போட்டுட்டிங்களே... மன்னன் என்ன சொன்னாருன்னு சீக்கிரம் வந்து சொல்லுங்கய்யா...

    பதிலளிநீக்கு
  3. மன்னன் என்ன சொன்னான்.....?

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. வழக்கம்போல் எதிர்பாராத முடிவைத்தான் தருவீர்கள் என நினிக்கிறேன்.

    அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா, மன்னர் என்ன சொல்லியிருக்கப்போறார்??சரியான இடத்தில் சஸ்பென்ஸ்.....

    பதிலளிநீக்கு
  6. தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா,
    சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீங்க.

    நல்லதோர் ஆரம்பத்துடன் தொடர் ஆரம்பித்திருக்கிறது.
    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

    பார்ப்போம், மன்னர் என்ன செய்யப் போகிறார் என்று.

    பதிலளிநீக்கு
  8. விரைவில் முடிவை எதிர்பார்க்கிரோம் நன்பரே

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா!கதை நன்று.முடிவில் என்ன ஆகும்?அவன் விசாரிக்கப்படுவான்.///அந்தப் பெண்களின் நிர்வாணம் அவனையும் மீறி வெளிப்படையான மாற்றத்தை அவனில் நிகழ்த்தியிருந்தது.////அரசனுக்கு அவன் விளக்குவான்.மீண்டும் எல்லோரும் ஆடை அணிய அரசன் உத்தரவிடுவான்,அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  10. என்னாங்க இது.. ரெண்டு நாளா பாக்குறேன் முடிப்பீங்களானுட்டு..

    பதிலளிநீக்கு
  11. சரியான இடத்தில் தொடரும்....போட்டுவிட்டிங்க....அடுத்த பகுதியில கண்டிப்பாக ஒரு கருத்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. உங்களுக்கு வணக்கத்தை தெரிவித்து உள்ளேன் வலைச்சரத்தில்....

    பதிலளிநீக்கு