தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 07, 2012

புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ சில எளிய வழிகள்!

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நம் கையில்தான் இருக்கிறது

எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது?சில எளிய வழி முறைகள்!

1)ஓய்வெடுப்பதற்காகவே வாழுங்கள்!

2)உங்கள் படுக்கையை நேசியுங்கள்;அதுவே உங்கள் ஆலயம்!

3)பகல் நேரத்தில் நன்றாக ஓய்வெடுங்கள்;இரவு நன்கு தூங்க அது உதவும்!

4)பணி என்பது புனிதமானது;அதைத் தொடாதீர்கள்!

5)எந்த வேலையையும் மற்றவர்கள் செய்ய வாய்ப்புக் கொடுங்கள்.அதைக் கண்டு ரசியுங்கள்!

6)எந்த வேலையையும் நாளை செய்யலாம் என எண்ணாதீர்கள்; ஏனெனில் அதை நாளை மறுநாள் கூடச் செய்யலாம்!

7)கவலையே வேண்டாம்.சும்மா இருந்ததால் யாரும் இறப்ப தில்லை. மாறாக,வேலை செய்யும்போது உங்களுக்கு ஏதாவது ஊறு நேரலாம்!  

8)வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்தால்,சிறிது அமருங்கள்;பொறுத்திருங்கள்.அந்த நினைப்பு அகன்று விடும்!

9)மறவாதீர்கள்.வேலை செய்வது ஆரோக்கியம் தரும்.எனவே அதை உடல் நலமில்லாதவர்கள் செய்யட்டும்.அவர்கள் ஆரோக்கியமடைவார்கள்!

இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழுங்கள்!!

be happy!

15 கருத்துகள்:

 1. "புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ சில எளிய வழிகள்!"

  சுகவாசியாக வாழ அருமையான அனுபவ வழிகள்...பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. ஒன்பது அறிவுரைகளும் அபாரம். ஆனால் ஒவ்வொரு அறிவுரையும் உற்று கவனித்தால் , எதாவது ஒன்றை செய்ய சொல்கிறீர்கள் .... அதாவது நேசிப்பது, ரசிப்பது, தொடாமல் இருப்பது போன்றவைகள் . இவை அனைத்திலுமே எதோ ஒரு வித செய்கையை காண முடிகிறது ..அந்நியன் படத்தில் ஒரு காட்சி .. ஓய்வு எடுத்து எடுத்து களைத்து போய் அதன் காரணம் மீண்டும் ஓய்வு எடுப்பார் சார்லி ... ... இதற்கு மேல் எழுத முடியவில்லை ! ஏன் என்றால் சிந்திக்க வேண்டி உள்ளதே ?!! வாசு

  பதிலளிநீக்கு
 3. உண்மையில் ஏதோ உருப்படியாக சொல்லப் போகிறீர்கள் என எதிர்பார்த்தேன். ரொம்பத்தான் லொள்லையா உங்களுக்கு.

  அருட்கவி வலைத்தளத்தில் அரங்கனுக்குப் பாமாலை சூட்டியிருக்கிறேன். தங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஐயா, அய்யய்யோ.... என்னது?? மகிழ்ச்சி!!... புத்தாண்டு. சரி இதுவும் சர்ர்தான்.

  பதிலளிநீக்கு
 5. ஐயா
  முன்பே பின்னூட்டம் போடலாமா அல்லது வேண்டாமா என்று யோசித்தேன்.
  பணியைத் தொடக் கூடாது என்று சொல்லியிருக்கிறீர்களே..

  நல்ல நகைச்சுவைப் பதிவு - மற்றும் அறிவுரைகள்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அற்புதம் அய்யா! நிச்சயம் மகிழ்ச்சிதான்.

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகள் தந்தமைக்கு நன்றி..
  த.ம-3

  பதிலளிநீக்கு
 8. எதையுமே சுவையாக இடித்துக் கூறுவதில் உங்களுக்கு இணை
  நீங்கள் தான் ஐயா...

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் அறிவுரைகள் ஐயா....

  சும்மா இருக்கச் சொல்றீங்க! :) அது தான் ரொம்ப கஷ்டம்.... இல்லையா?

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஐயா!எப்படித்தான் கண்டு பிடித்தீர்களோ??????( நான் இப்படித்தான் இருக்கிறேன் ஹ!ஹ!ஹா!!!!)

  பதிலளிநீக்கு
 11. யாரோ என்னோட கொள்கைகளையெல்லாம் அப்படியே உங்க கிட்டே சொல்லியிருக்காங்களே?

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஐயா,
  மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய அருமையான வழிகளைத் தொகுத்து தந்திருக்கிறீங்க. நன்றி.
  படுக்கையை நேசியுங்கள்....ஹே...ஹே...இதில் வேறு அர்த்தம் ஏதும் வரலையே?

  பதிலளிநீக்கு
 13. புத்தாண்டில் மகிழ்ச்சியாய் வாழ தாங்கள் கூறிய சில எளிய வழிகள் கடைப் பிடிக்கக்கூடிய வகைகள் தான். அறிவுரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு