தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 15, 2012

வலைச்சரம்,ரஹீம் கஸாலி,சிராஜ்


ஏழு நாட்களாக என் தலையில் சுமந்து கொண்டிருந்த முட்கிரீடத்தை இன்று கழற்றி வைத்து விட்டேன்.வலைச்சரப் பொறுப்பு என்பது மிகவும் கடினமான  பணிதான்.படிக்கப் படிக்க யாரைப் பற்றிச் சொல்வது,யாரை விடுவது என்ற குழப்பம் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கும். படித்ததைப் பகிரும் அதே நேரத்தில் அதைப் படிப்பவர் இரசிக்கும்படிச் சொன்னால்தான் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.ஒரு தலைப்பில் எழுதி வெளியிட்ட பின் இவரை விட்டுவிட்டோமோ என்ற சந்தேகம், வருத்தம் எழும்.இப்படி எத்தனையோ.எல்லாவற்றையும் சமாளித்து  90 பதிவுகளுக்கு மேல் பகிர்ந்து கொண்டேன்.இது மிகப் பெரிய வாய்ப்புதான். இந்த சுகமான முட்கிரீடத்தை என் தலையில் அணிவித் ததற்காக சீனா அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இன்று மதியம் 12.30 மணியளவில்  அலைபேசி அழைத்தது.பேசியவர் பதிவர் ரஹீம் கஸாலி .சென்னை வந்து இரண்டு நாட்களாகி விட்ட தாகவும்,இரவு ஊருக்குத் திரும்புவதாகவும்,அதற்கு முன் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். மாலை 6 மணியளவில் அவரும் அவர் நண்பர் பதிவர் சிராஜ் அவர்களும் என் வீட்டுக்கு வந்தனர். பத்துப் பதினைந்து நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம்.உலகத்தையே புரட்டிப்போடும் கருத்துப் பரிமாற்றம் எதுவுமில்லை.ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்  உரையாடல்தான்.என்னைத்தேடி வந்து சந்தித்து விட்டுப் போன அந்த அன்பில் நான் நெகிழ்ந்து போனேன்.

நன்றி கஸாலி.நன்றி சிராஜ்.( என்னை முதன்முதல் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தவர் கஸாலிதான்)


14 கருத்துகள்:

  1. வலைச்சர அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா,
    ஆய்...ஹசாலி அண்ணரையும் நம்ம வடை பஜ்ஜி சிராஜ் அண்ணரையும் ஒன்னா மீட் பண்ணியிருக்கிறீங்களா;-))

    சந்தோசமா இருக்கே!

    வலைச் சரத்தினை இனிதாக தொகுத்து வழங்கியிருந்தீங்க.

    ரொம்ப நன்றி ஐயா,
    உங்களைப் போன்ற பெரியவர்களின் உற்சாகவும், உங்களின் ஆக்கபூர்வமான எழுத்துலக செயற்பாடுகளும் சிறியவர்களாகிய எம்மையும் தொடர்ந்து எழுதுவதற்கான தூண்டியாக (தூண்டுதலாக) அமைகிறது.

    பதிலளிநீக்கு
  4. மிகபெரியகடினமான் பணியை செய்து முடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்,கூடவே ஒரு நல்ல சந்திப்பும்.இரட்டிப்பு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. கடினமான நல்ல பணியை செய்து முடித்திருக்கிறீர்கள்,கூடவே நண்பர்களின் சந்திப்பும்,இரட்டிப்பு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு மகிழ்ச்சி .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்களின் பகிர்வுகள் அனைத்தும் அருமை...நன்றி நண்பரே எங்களுக்கும் நண்பர்களை அறிமுகபடுத்தியதற்கு....

    பதிலளிநீக்கு
  8. வலைச்சரப் பணியை மிகச் சிறப்பாகவே செய்து முடித்தீர்கள். உங்களுடன் பயணித்தது இனிய அனுபவம். தம்பி கஸாலி பாசக்காரப் புள்ள. வடைபஜ்ஜி சிராஜையும் மீட் பண்ணீங்க என்பதில் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  9. வலைச் சரப் பணி மிகச் சிறப்பாக
    அமைந்தது!
    நேரில் வந்து சந்தித்த நண்பர்களுக்
    கும் தங்களுக்கும் புத்தாண்டு+பொங்கல்
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  10. வலைச்சரத்தை சிறப்பித்ததற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தலைவரே....


    வலைச்சரப்பணியை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக திரும்பிதற்கு வாழ்த்துக்கள்...

    வலைச்சரத்தி்ல கவிதைவீதியையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. உங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி+ நெகிழ்ச்சி அய்யா

    பதிலளிநீக்கு
  13. வலைச்சரத்தை ஒரு வார காலம் மணக்க செய்தமைக்கு நன்றி. வலைச்சரம் பணிமுடிந்த அதே நாள் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய திரு ரஹீம் கசாலி அவர்களை திரு சிராஜ் அவர்களுடன் சந்திந்தது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. தங்களுடைய வலைச்சரப் பணி சிறப்பாக இருந்தது ஐயா. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு