தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 19, 2012

வெட்டு ஒண்ணு!துண்டு ரெண்டு!!---மாயத்தோற்றம்!

டேவிட் காப்பர்ஃபீல்ட்!ஒரு சிறந்த மாயக்காரர்.மாயத்தோற்றம் உருவாக்குவதில் வல்லவர்.உடல் வெட்டுப்பட்டு அவர் இரு துண்டாவதைக் காணுங்கள்!எப்படி இது?!

                                
    இதுதான் மாயம்--ஒரு காதலனின் புலம்பல்
---------------------------------------------------------------------------
   என்னவோ  பெரிய மாயம் இதுவென்றார்
                   சிரிப்புத்தான் வருகுதையோ!
   உன்னால் உடைந்து நொறுங்கிய உள்ளத்தை
                  ஒட்டவைத்து உயிர் சுமந்து
   இன்னமும் வாழ்கிறேன் நான்
                  இதுவன்றோ பெரிய மாயம்!!
-------------------------------------------------------------

27 கருத்துகள்:

 1. காதலனின் புலம்பல் உண்மை. உண்மை சிலநேரங்களில் மாயையாகி விடுவதுண்டு.

  பதிலளிநீக்கு
 2. மாயத்தோற்றத்தை ரசித்தேன்.மேஜிக் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டது.இப்போது ஆசை வருகிறது.

  பதிலளிநீக்கு
 3. உன்னால் உடைந்து நொறுங்கிய உள்ளத்தை ஒட்டவைத்து உயிர் சுமந்து
  இன்னமும் வாழ்கிறேன் நான்’’’’

  காதலின் வலியை வலிமையாக சொன்ன கவிதை.

  பதிலளிநீக்கு
 4. ஆம் இதுவன்றோ பெரிய மாயம்...மிக நன்று...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. அண்ணே உண்மையிலேயே கண்கட்டு வித்தை தானுங்க...பய புள்ள எப்படி ரெண்டா பொளந்து ஒன்னா வந்து நிக்குராரு...காதல் அதேஅதே!

  பதிலளிநீக்கு
 6. க்யா ஜாதூ ஆப் கியா... கவிதை மாயம் செய்தது மனதில்! அருமை!

  பதிலளிநீக்கு
 7. னீ நீங்களும் மாயக்காரர் தான் போலும்.பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 8. வீடியோ சிலிர்க்க வைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
 9. வீடியோவை விட காதலனின் புலம்பல் சிறப்பு

  நல்ல பகிர்வு பாஸ்

  பதிலளிநீக்கு
 10. விடியோ நன்றாக இருக்கு. அதைவிட கவிதை சிறப்பாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. மாயத்தோற்றம் என நீங்களே சொல்லிவிட்டதால் டேவிட் காப்பர்ஃபீல்டின் உடல் வெட்டுப்படுவது நிஜம் அல்ல எனத்தெளிவாகிவிட்டது. ஆனால் அந்த காதலன் உடைந்து நொறுங்கிய உள்ளத்தோடு உயிர்வாழ்வது தான் ‘உண்மையான’ மாயம்!

  அருமையான காணொளியையும், அழகான பொருள் பொதிந்த கவிதையையும் தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு