குருடன் மிக வசதியாக அந்நாட்டில் வாழத் தொடங்கினான்.
ஓரிரு முறை அவன் கொடுத்த ஆலோசனை,குருட்டு அதிர்ஷ்டத்தால் நன்மையில் முடியவே அவன் செல்வாக்கு வளர்ந்தது.
இந்நிலையில் ஒரு நாள் அந்த நாட்டின் வாசலுக்கு ஒரு ஊமை வந்து சேர்ந்தான்.
அவனைக் கண்ட காவலர்கள் அவனைக் கேட்டனர்”யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”
அவன் எப்படி பதில் சொல்வான்?பேச இயலாதவன் ஆயிற்றே?
சைகையால் சொல்ல முயன்றான்.
காவலர்களுக்குப் புரியவில்லை.
“என்னாடா?கையைக் காலை ஆட்டுகிறாய்?பதில் சொல்.”
மீண்டும் அவன் செய்த சைகைகள் அவர்களுக்குப் புரியவில்லை.
“இவன் பதில் சொல்ல மறுக்கிறான்.திமிர் பிடித்தவன் போலத் தோன்றுகிறது. இவனை மன்னர் முன் கொண்டு நிறுத்துவோம்.”
அவனை இழுத்துச் சென்றனர்.மன்னன் முன் நிறுத்திச் செய்தி சொன்னார்கள்.
மன்னன் கேள்விகளும் பயனளிக்கவில்லை.அதற்குள்,குருடனை அவையில் பார்த்த அவன்,கையைக் குருடன் பக்கம் நீட்டி ஏதோ சைகைகள் செய்தான்.
மன்னன் குருடனிடம் சொன்னான்.
”அறிஞரே! அவன் பதில் எதுவும் சொல்ல மறுக்கிறான்.உங்களைக் காட்டி ஏதோ சைகை செய்கிறன்.புரியவில்லை”
குருடனுக்குப் பொறிதட்டியது போல் விளங்கியது.”வந்திருப்பவன் என் பழைய நண்பன்.சுற்றித்திரிந்த காலத்தில் வழிகாட்டியவன்.அவனைப் பிரிந்துதான் இங்கு வந்தேன்.”நினைத்துக்கொண்டான்
யோசித்தான்”இப்போது இவனைத் தெரிந்தது போல் காட்டிகொண்டால் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை.மாறாக ஏதாவது பாதகம் வரலாம். என்ன செய்யலாம்?”
முடிவுக்கு வந்தான்
“மன்னா!எனக்கு விளங்கி விட்டது .இவன் ஒரு பாவி. சபிக்கப்பட்டவன். ஆனால் அப்போதே இவனுக்கு மோட்சம் இங்குதான் என்று தீர்மானிக்கப் பட்டு விட்டது.நாம் இவனுக்குச் செய்யக் கூடிய நன்மை. இவனை மேலும் அல்லல் பட விடாமல் முக்தியளிப்பதுதான் கொற்றவை முன் இவன் பலியிடப்பட வேண்டும்.”
ஊமையன் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தான். மன்னன் அவனை இழுத்துச் சென்று பலியிட ஆணையிட்டான்.அவன் இழுத்துச் செல்லப்பட்டான், கதறியபடியே.
குருடன் நிம்மதியாக மூச்சு விட்டான்.—அகக்கண்ணும் தொலைந்தவனாய்!
கதை நன்றகாவுள்ளது அன்பரே..
பதிலளிநீக்குவித்தியாசமான கவிதை ! அதை உங்கள் பாணியில் சொன்னது மிகவும் அருமை ! நன்றி சார்
பதிலளிநீக்குquite interesting.
பதிலளிநீக்குஅடுத்து யார் வருவாரோ...உள்குத்து இப்போ புரியறா மாதிரி இருக்கற மாதிரித் தெரியுது!!!
பதிலளிநீக்குகதை நல்லா இருக்கு அண்ணே!
பதிலளிநீக்குகுருடன் நிம்மதியாக மூச்சு விட்டான்.—அகக்கண்ணும் தொலைந்தவனாய்!
பதிலளிநீக்குபுறக் கண்ணை இழந்தவன்
தற்போது அகக்கண்ணும் தொலைந்தவன்!
நற்கருத்து பித்தரே!
புலவர் சா இராமாநுசம்
கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன சார்?
பதிலளிநீக்குஅருமையாக இருக்கு கதை.
பதிலளிநீக்கு//குருடன் நிம்மதியாக மூச்சு விட்டான்.—அகக்கண்ணும் தொலைந்தவனாய்!//
சிறப்பான வரிகள்.
நன்றி குணசீலன்.
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்குநன்றி சித்ரா
பதிலளிநீக்குநோ உள்குத்து.நன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி விக்கி
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி ஆதி வெங்கட்
பதிலளிநீக்குநன்றி ராம்வி
பதிலளிநீக்குஅட அகக்கண்ணும் தொலைத்தானே....
பதிலளிநீக்குநல்ல கதை...