தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 09, 2012

கடவுளுக்கே அடையாளம் தெரியவில்லை!

ஒரு 50 வயதுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.அறுவைச் சிகிச்சைக்கு முன் ஒரு மயக்க நிலையில் கடவுளைக் கண்டாள்.

அவள் கேட்டாள்”கடவுளே! நான் சாகப் போகிறேனா?”

கடவுள் சொன்னார்.”இல்லை!உனக்கு இன்னும் 30 ஆண்டுகள் 6 மாதங்கள்,18 நாட்கள் வாழ்க்கை இருக்கிறது.”

அறுவைச் சிகிச்சை நடந்து அவள் சுகமடைந்தாள்.

அவள் யோசித்தாள்”இன்னும்30 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிப்போம்”

உடல் பூரண குணமான பின் அவள் மருத்துவ மனையில் இளமைத் தோற்றத்துக்கு வேண்டிய பல சிகிச்சைகளைச் செய்து கொண்டு,ஒரு இளம் பெண் போலத் தோற்றம் மாறினாள்.அழகு நிலையம் சென்று பல ஒப்பனைகள் செய்து கொண்டாள்.அங்கிருந்து வெளியே வந்து சாலையைக்  கடக்கும்போது ஒரு காரில் அடிபட்டு இறந்தாள்.

 இறந்த பின் கடவுளைப் பார்த்ததும் கேட்டாள்”இன்னும் 30 ஆண்டுகள் இருக்கிறது எனச் சொன்னீர்களே!பின் ஏன் இப்படி?

கடவுள் என்ன சொன்னார்?!

;;;;;;;
;;;;;;;
;;;;;;;
;;;;;;;
;;;;;;;

“உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லை!”

நீதி:  நீங்கள் நீங்களாகவே இருங்கள்!

டிஸ்கி-1.
இன்று முதல் ஏழு நாட்களுக்கு வலைச்சரப் பொறுப்பேற்றிருப்பதால், இங்கு பதிவிட இயலாத நிலையில் உள்ளேன்,

அங்கு வாருங்களேன்,சந்திக்கலாம்!

டிஸ்கி 2:நேரம் கிடைத்தால் இங்கும் பதிவிடுவேன்!
 

33 கருத்துகள்:

  1. கடவுள் அப்படிச் சொல்வார் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை..
    அருமை..வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்..மூன்றிலும் வாக்கிட்டேன்
    நேரமிருந்தால் வாருங்கள்..

    கொக்கரக்கோ

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நாம் நாமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை...

    அழகிய கதை..

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்,அப்புறம் அழகு நிலையம் நடத்துகிறவர்கள் என்னாவது! ஆனால் கடவுள் கொடுத்தது சரியான அடி!

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு கருத்தை நயம்பட எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா!என்னைய்யா இது?ஒரு பெண் முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைக்கு மாறினால்,இப்படியா கடவுள் தண்டிப்பார்?இது நியாயமே இல்லையே???(நான் கூட "டை" அடிக்கிறத நிறுத்திடணுமோ?)

    பதிலளிநீக்கு
  6. ஆம் ஐயா..
    நாம் நாமாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    தங்களின் வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அ‌டடே... ஹெவியான விஷயத்தை லைட்டாக ஒரு கதையில் சொல்லி அசத்திட்டீங்க! நல்லா இருந்துச்சு. வலைச்‌சரத்துலயும் உங்களைச் சந்திக்காம இருப்பமா..! வாழ்த்துக்கள் தங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  8. ஆகா ஆகா அன்பின் பித்த்ன - அருமையான அறிவுரை - நச்சென்ற முடிவு - ஆள் அடையாளம் தெரியாத எமன் என்ன செய்வான் பாவம் ..... நாம் நாமாகவே இருக்க வேண்டும் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. @Yoga.S.FR
    நானும் 54 வயது வரை டை அடித்துக் கொண்டிருந்தேன்.பணி ஓய்வு பெற்றவுடன் விட்டு விட்டேன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அழகான சிறு கதை மூலமாக அருமையான நீதி.

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்,சார்.

    பதிலளிநீக்கு
  11. கடவுளுக்கே அந்த man made "பேரழகியை" அடுத்த 30 ஆண்டுகள் பக்கத்தில் வைத்துக்கொள்ள ஆசை வந்துவிட்டதோ!
    வாழ்க beauty parlours!
    வளர்க அவர்தம் தொண்டு!!

    பதிலளிநீக்கு
  12. //நீங்கள் நீங்களாகவே இருங்கள்!//
    இயற்கை எதிர்த்து வாழ நினைப்போருக்கு இந்த பதிவு ஒரு எச்சரிக்கை தரும் பாடம்.

    பதிலளிநீக்கு
  13. நச் கதை. வலைச்சாரத்தில் உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. ஒரு எளிய கதை மூலம் அருமையான தத்துவத்தை சொல்லிவிட்டீர் அய்யா...
    வலைச்சர பணி சிறக்க வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    அழகிய கதை

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஐயா, நல்லதோர் நீதிக் கதையினைக் கொடுத்திருக்கிறீங்க.நாம் எப்போதும் நாமாக இருந்தால் பிரச்சினை இல்லைத் தான்.

    "வலைச் சர ஆசிரியராகியதற்கு வாழ்த்துக்கள் ஐயா, தொடரட்டும் உங்கள் பணி!"
    வலைச்சரத்தில் சந்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு