காவலர்கள் அவனை மன்னன் முன் கொண்டு போய் நிறுத்தி விவரம் சொன்னார்கள்.
மன்னன் அவனை ஏற இறங்கப்பார்த்தான்,பின் கேட்டான்”யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”
அவன் சொன்னான்”அரசே!நான் காம தேசத்தைச் சேர்ந்தவன்.காடெல்லாம் சுற்றி வரும்போது இந்தக் கோட்டையை கண்டேன்.சுற்றிப் பார்த்தால் கதவுகளே இல்லை.இப்படிப்பட்ட கோட்டைக்குள் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் ஆவலில் சிரமப்பட்டு கோட்டைச் சுவரில் ஏறி உள்ளே இறங்கினேன்.அதன் பின் நடந்ததெல்லாம் காவலர்கள் சொன்னதுதான்”
”அந்தச் சுவரில் ஏறி இறங்கினாய் என்றால்,நீ திறமைசாலிதான்.பார்க்கவும் வலுவானவனாகத் தெரிகிறாய்.நீ இந்த நாட்டுக்குள் நுழைந்தது தவறுதான்; மரணதண்டனைகுரியதுதான்.ஆனாலும் உன்னைக் கொல்ல மனம் வரவில்லை. உன்னை என் அடிமையாக்குகிறேன்.இன்று முதல் அரண்மனைப் பணிகளை நீ செய்ய ஆணையிடுகிறேன்.இவனை அழைத்துச் சென்று தோட்டப் பணியில் விடுங்கள்.சில நாட்கள் அங்கே பணி புரியட்டும்”. மன்னன் ஆணையிட்டான்.
தொடர்ந்து சொன்னான்”இவன் தனியாளாக இருப்பினும் ,இவனுக்குக் கவசம் அணிவித்து விடுங்கள்.அதுதான் நல்லது.சாவியைத் தலைமை தோட்டக் காரனிடம் கொடுத்து விடுங்கள்”
அவன் அழைத்துச் செல்லப்பட்டான்.செல்லும்போது அவன் காவலர்களைக் கேட்டான்”அரசனுக்கு மணமாகவில்லையா?கவசம் அணியவில்லையே?”
காவலர்கள் அவனிடம் கோபமாகக் கூறினர்”வாயை மூடிக்கொண்டு வா”
தோட்டத்துக்குச் சென்ற பின் அங்கிருந்த தோட்டக்காரனிடம் அரசாணை பற்றி கூறி அவனை ஒப்படைத்தனர்.சாவியையும் கொடுத்தனர்.
தோட்டக்காரக் கிழவன் அவன் செய்ய வேண்டிய வேலைகளை எடுத்துக்கூறி வேலை செய்யப் பணித்தான்.
அவன் கோபத்தில் இருந்தான்,தனக்குக் கவசம் அணிவிக்கப் பட்டதில்.ஆனால் என்ன செய்ய முடியும்?
அன்று வேலையின்போது தோட்டக்காரனிடம் பேசிப் பல செய்திகளை அவன் தெரிந்துகொண்டான்.அரசர் மணமானவராயினும் அவர் கவசம் அணிவதில்லை என்பதும் ஒன்று.
மாலையில் ஒரு அழகிய பெண் அங்கு வந்தாள்.அவளும் நிர்வாணமாகத்தான் இருந்தாள்.ஆனால் கவசம் அணிந்திருந்தாள்.
தோட்டக்காரக் கிழவன் அவளைத் தலை குனிந்து வணங்கினான்.
”வணக்கம் ராணி அவர்களே”
புரிந்துகொண்ட அந்நியனும் அவளை வணங்கினான்.
அவள் அவனை நன்கு பார்த்தாள்”நீதான் அந்தப் புதியவனா?”முகத்தில் லேசாகப் புன்னகை ஓடியதாக அவனுக்குத் தோன்றியது.
”ஆம்,மகாராணி”
“எனக்கு இந்த ரோஜாக்கள் மிகவும் பிரியமானவை.இவற்றை நன்கு பராமரித்து வா”
ராணி சென்று விட்டாள்.
அவன் தோட்டக்காரனிடம் கேட்டான்.”அரசன் கவசம் அணியவில்லை.அரசி மட்டும் ஏன் கவசம் அணிந்திருக்கிறார்?”
“அதெல்லாம் ராஜ காரியம்.நாம் பேசக் கூடாது.
அவன் மனதில் அரசி மட்டும் கவசம் அணிந்திருப்பது உறுத்தியது. அரசனுக்கு விதி விலக்கு உண்டென்றால் அரசிக்குக் கிடையாதா என யோசித்தான்.
அரசி தினமொரு முறை தோட்டத்துக்கு வந்து மலர்களை பார்த்துச் செல்வாள். அவளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இவளது கவசத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது.
சில நாட்களில் மக்களுடன் நன்கு பழகி விட்டான்.அவன் பல செய்திகள் அறிந்தவனாக இருப்பது மக்களை வியக்க வைத்தது.சிறிது சிறிதாக அரசன், அரசி கவசம் பற்றிப் பேச ஆரம்பித்தான்.ஏன் வேறுபாடு என்ற கேள்வியை எழுப்பினான்.அரசிக்கு விதிவிலக்குக் கிடையாதா எனக் கேட்டான்.மக்கள் மத்தியில் இந்த விவாதம் வளர்ந்து,ஒற்றர் மூலம் மந்திரியை அடைந்தது.
மந்திரி மன்னரிடம் சொன்னார்.
மன்னன் யோசித்தான்.ஒரு முடிவுக்கு வந்தான்.அரசவையைக் கூட்டினான்.
அரசவைக்கு அரசியும் வந்திருந்தாள்
மன்னன் எழுந்தான்.
”மக்கள் மத்தியில் ஒரு நியாயமான கேள்வி எழும்பியுள்ளது.எல்லா மக்களையும் போல் மன்னன் கவசம் அணிவதில்லை.ஆனால் அரசி மட்டும் அணிந்தி ருக்கிறார்.இது சரியா,என்று.இது சரியல்ல.எனவேதான் இந்த முடிவு”என்று சொல்லி விட்டு அரசியை அருகே அழைத்தான்.
”இன்று முதல் உங்கள் பிரதிநிதியான அரசனும் உங்களைப் போலவே கவசம் அணிவான்” என்று சொல்லி விட்டு,கவசம் ஒன்றை அரசியை அணிவிக்கச் சொல்லி அதன் சாவியை அவளிடம் அளித்தான்!
மக்களுக்கு எதுவோ,மன்னனுக்கும் அதுவே!
கதை முடிந்துவிட்டதா? தொடரின் ஆரம்பத்தில் இருந்த அந்த சுவாரஸ்யம் இதில் “சற்று” குறைந்தது போல தெரிந்தது. இது என் கருத்து தான். மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஹைப்பை கூட்டி சப்பென்று முடித்துவிட்டீர்களே?
ஹாலிவுட்ரசிகன் கூறியது...
பதிலளிநீக்கு//கதை முடிந்துவிட்டதா? தொடரின் ஆரம்பத்தில் இருந்த அந்த சுவாரஸ்யம் இதில் “சற்று” குறைந்தது போல தெரிந்தது. இது என் கருத்து தான். மன்னிக்கவும்.
ஹைப்பை கூட்டி சப்பென்று முடித்துவிட்டீர்களே?//
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.எனக்கே கொஞ்சம் ஏமாற்றம்தான்!
நன்றி.
நல்லாயிருந்ததுங்க..
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!!ச்சா.
பதிலளிநீக்குவிறுவிறுவென்று வளர்ந்து சென்ற கதையின் இறுதியில் பெரிய ட்விஸ்டை எதிர்பார்த்தேன். இல்லை! இருப்பினும் மிகவும் ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குநல்லதோர் சுவையான கதையினைக் கொடுத்திருக்கிறீங்க.
கதையின் இறுதியில் நீதிக் கருத்துச் சொல்லப் போகின்றீர்கள் என்று அறியாமலே,
இன்னோர் சிந்தனையுடன் எம்மை படிக்க வைத்த கதை இது!
கருவினை நகர்த்திய விதமும், கதையின் இறுதியில் சொன்ன கருத்தும் சூப்பர்.
நிர்வாணமாகத்தான் இருந்தாள்.ஆனால் கவசம் அணிந்திருந்தாள்.//
பதிலளிநீக்குநன்றி ரியாஸ்
பதிலளிநீக்குநன்றி Yoga.S.FR
பதிலளிநீக்குநன்றி சங்கரலிங்கம்
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி நிரூ
பதிலளிநீக்குமாலதி கூறியது...
பதிலளிநீக்கு//நிர்வாணமாகத்தான் இருந்தாள்.ஆனால் கவசம் அணிந்திருந்தாள்.//
அரைக்கவசம் அணிந்த அரை நிர்வாணம்!!
நன்றி மாலதி
பாராட்டுக்குரிய முடிவு
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம்
எதிர்பாராத முடிவு!
பதிலளிநீக்கு