தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 01, 2012

இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்!

நீலா,மாலா என்ற இரண்டு பெண்கள் இறந்த பின்  மேலுலகத்தில் சந்தித்தனர்.

நீலா(மாலாவிடம்) நீ எப்படி இறந்தாய்?

மாலா:நான் மூச்சுத் திணறி இறந்தேன்.

நீலா:அடப்பாவமே!

மாலா.முதலில் ரொம்பக் கஷ்டப்பட்டேன் அப்புறம் நினைவிழந்து விட்டேன்.கண்விழித்துப் பார்த்தால் இங்கு இருக்கிறேன்!நீ எப்படி இறந்தாய்.?

நீலா:மாரடைப்பு வந்து இறந்தேன்.

மாலா:எப்படி?

நீலா:என் கணவர் மீது எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு ,வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று.ஒரு நாள் சீக்கிரமாக வீடு திரும்பி அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணினேன்.ஆனால் வந்து பார்த்தால் அவர் தொலைக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தார். ஆயினும் சந்தேகம் தீராமல் நான் வீடு முழுவதும் தேடினேன்.மாடியில் போய்ப் பார்த்தேன், பரணில் ஏறிப்பார்த்தேன்.கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தேன்.எல்லா இடத்திலும் தேடினேன்.ஏற்கனவே எனக்கு ரத்தக்கொதிப்பெல்லாம் உண்டு. அவ்வாறு செய்ததில் எனக்கு மாரடைப்பு வந்து விட்டது.

பாவம் என் கணவர். அநாவசியமாக்ச் சந்தேகப்பட்டு விட்டேன்.!

மாலா:பைத்தியக்காரி.எல்லா இடத்திலும் தேடினாயே,ஹாலில் ஒரு பெட்டி மீது உன் கணவர் உட்கார்ந்திருந்திருந்தாரே,அதைத்திறந்து பார்த்திருந்தால் இருவரும் உயிரோடு இருந்திருப்போமே!!!
 -----------------------------------------------------------------------


17 கருத்துகள்:

 1. அநியாயமா ரெண்டு பேரையும் கொன்னுட்டீங்களே...

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமையான நகைச்சுவை. இது இரு ஆண்கள் பேசிக்கொள்வதைப்போல படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அடப்பாவமே!!இப்படி இரண்டு பேருமே போய்டாங்களா? ரசிக்கவைத்த உரையாடல்.

  பதிலளிநீக்கு
 4. ////
  மாலா:பைத்தியக்காரி.எல்லா இடத்திலும் தேடினாயே,ஹாலில் ஒரு பெட்டி மீது உன் கணவர் உட்கார்ந்திருந்திருந்தாரே,அதைத்திறந்து பார்த்திருந்தால் இருவரும் உயிரோடு இருந்திருப்போமே!!////

  ஹா.ஹா.ஹா.ஹா. தல சான்சே இல்லை செம கலக்கல் ரொம்ப ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 5. எதிர்பார்க்கவில்லை இந்த முடிவை..
  ஹாஸ்யம் அட்டகாசமாக இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
 6. சிரிக்க வைத்த பதிவு. ஆனால் நீலா பெட்டியைத் திறந்து பார்த்திருந்தால் இருவரும் அடித்துக்கொண்டே இறந்திருப்பார்களே!

  பதிலளிநீக்கு
 7. ஹா ஹா, ஹா ஹா. ரசித்துச் சிரிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 8. இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் ஐயா. நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றி

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா ஹா முடியல... ரசித்தேன் சிரித்தேன் - பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு