தொடரும் தோழர்கள்

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்-புத்தக வெளியீட்டு விழா

இன்று புலவர் சா.இராமாநுசம் அவர்களின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடை பெற்றது.படத்தில் இருப்பது அப்புத்தகமே.


மாலை 3.30 க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு,23-சி பேருந்தைப் பிடித்து,ஆயிரம் விளக்கு நிறுத்தத்தில் இறங்கி,சிறிது நடைக்குப் பின்,நூலகத்தை அடைந்தேன்.விழா முதல் மாடியில் என்றறிந்து அங்கு சென்றேன்.அரங்கிற்கு வெளியிலேயே நின்று கொண்டி ருந்த   ஒரு பெண்மணி மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அருகில் புலவர் ஐயா நின்று கொண்டிருந்தார்.அவரிடம் கை குலுக்கி நான் யார் எனத் தெரிகிறதா எனக் கேட்டேன்.அவர் பார்த்தது போல் தோன்றுகிறது என்று சொன்னதும்,வரவேற்ற பெண்மணி ”சென்னைபித்தன்’என்று சொல்லி விட்டு,உங்கள் வலைப்பூவில் உள்ள புகைப்படத்தில் இது போலவே கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறீர்களே”என்றும் சொன்னார் (தமிழ்வாணன் போல் எனக்கும் இந்தக்கண்ணாடி ஒரு அடையாளம் ஆகி விடும் போலிருக்கிறது!)


அங்கு ஒரு மேசைமீது காகிதத்தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி ஒரு தட்டு வழங்கப்பட்டது!(இனிப்பு,சமோசா). பின்னர் தேநீர்.

புலவர் ஐயா “கணேஷ் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.


அரங்கினுள் நுழைந்தேன்.இதமான குளுமை.வசதியான இருக்கைகள்.பதிவர் கணேஷைத் தேடிக்கண்டு பிடித்தேன். அவர் அருகில் அமர்ந்தேன். பேசிக்கொண்டிருந்தோம்.பதிவர் ஸ்ரவாணி அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.சிறிது நேரத்தில் அவரும் கணவருடன் வந்து சேர்ந்தார்.

     பதிவர் ஸ்ரவாணி,அவர் கணவர்,’ மின்னல் வரிகள்’ கணேஷ்.


 விழா தொடங்கியது.பலர் புலவர் ஐயாவுக்குப் பொன்னா டைகள்  அணிவித்தனர்.ஆனால்  ஒரு சொல்லாணா மகிழ்ச்சி அளித்த  நெகிழ்வான தருணம் பதிவர்கள் மூவரையும் பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து புலவர் ஐயா அவர்கள் எங்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை அளித்ததுதான்.ஐயா,உங்கள் அளவற்ற அன்பில் நெகிழ்ந்து. போனோம்.தமிழ் அறிஞர்கள் நிறைந்த அரங்கில் ஒரு அங்கீகாரம்!ஐயா எனக்கு இது பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை! 
  
                              
           மேடையில் புலவர் ஐயாவுடன் மற்றத் தமிழ் அறிஞர்கள்
    
புத்த்க வெளியீட்டுக்குப் பின் சிலர் பாராட்டிப் ,பேசத் தொடங்கினர்.ஆனால்,எங்கள் மூவருக்கும் தவிர்க்க இயலாத வேலைகள் இருந்த காரணத்தால்  விழா முடியுமுன்பே ஒவ்வொருவராய் விடை பெற்றோம்.


ஐயா கேட்டுக்கொண்டபடி சில வார்த்தைகள் வாழ்த்திப் பேசாமல் வந்தது எனக்கு வருத்தமே.ஆனால் என் நிலைமை அப்படி..என்ன செய்ய?


பதிவர்கள் பலர் வருவர் என எதிர்பார்த்தேன்,ஆனால் நாங்கள் மூவர் மட்டுமே.புலவர் ஐயாவும் எதிர்பார்த்திருந்தார்.


புத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப் பட்டிருக்கிறது.கவர்ச்சியான அட்டை.வலையில் வந்த 102 கவிதைகள்,7 தலைப்புகளில். ரூ.60 விலையுள்ள புத்தகம் அரங்கில் ரூ.50 க்குத் தரப்பட்டது.


நிதானமாக அமர்ந்து எல்லாக் கவிதைகளையும் படிக்க வேண்டும்.


புலவர் ஐயாவுக்கு வயது 80 க்கு மேல் என அறிகிறேன். இப்போதும் சலிப்பின்றித் தமிழ்த் தொண்டு செய்து வரும் அவர்கள்,பல்லாண்டு உடல்  நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து, மேலும்பல நூல்கள் வெளியிட இறைவன் அருள் புரியட்டும்.


டிஸ்கி:இன்று தெரிந்து கொண்டது-கவிதை என்பது தமிழல்ல-’பா ’என்பதே சரியான சொல்லாகும்(மேடையில் கேட்டது)

45 கருத்துகள்:

  1. மாலையில் நிகழ்ந்த விழாவை இரவுக்குள் எமக்கு வழங்கிய உங்கள் சுறுசுறுப்புதான் என்னே! நானும் மிகமிக நெகிழ்ந்த தருணம்- புலவர் ஐயாவிடம் ஆசிபெறச் சென்ற என்னை அவர் மேடையில் கவுரவித்ததுதான். வாழி அவர் பல்லாண்டு நலம் சூழி என இறையை வேண்டுவோம் யாம்! அதுசரி... ‘பாவை விளக்கு’ என்றால் பாடலை விளக்குவது என்று பொருளா? ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  2. புலவர் ஐயாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  3. இதுபோல பல வாய்ப்புகளை இழந்துவிட்டேன் ஐயா.
    வெளிநாடுகளில் பணிபுரியும் என்னைப்போல அன்பர்களுக்கு
    உண்டாகும் இன்னல்களே..
    விழா சிறப்புற நடந்தது அறிந்து மகிழ்வுற்றேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்! புலவர் அவர்களது நூல் வெளியீட்டு விழாவின் இன்றைய மாலை நேர நிகழ்ச்சியினை இன்றே இரவு 9.15 மணி செய்தியாக புகைப் படங்களுடன் சுடச் சுட தந்தமைக்கு நன்றி! புலவர் அய்யா மனம் மகிழும் வண்ணம் வலைப் பதிவர்கள் நீங்கள், மின்னல் வரிகள் கணேஷ், ஸ்ரவாணி ஆகிய மூவரும் சென்று வந்தமைக்கும் நன்றி! புலவர் சா.இராமாநுசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. மாலையில் நடந்த புலவர்
    சா.இராமாநுசம் அவர்களின்
    ‘வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்’ என்ற கவிதைதொகுப்பின் வெளியீடு விழாவின் நிகழ்வை,விழா நடைபெற்ற சூட்டோடு சூடாக பதிவில் வெளியிட்டுள்ளீர்கள். இதைத்தான் Hot from oven என்பதோ? விழாவில் தங்களுக்கும் நண்பர் கணேஷ் அவர்களுக்கும் திருமதி ஸ்ரவாணி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்த புலவர் அவர்களின் பெருந்தன்மையே பெருந்தன்மை!அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாகத்தானிருந்தேன்..சில வேலைகளை முடிக்க முடியாமல் போனதால் இயலாமல் போய்விட்டது..நிகழ்வை பதிவாய் இட்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. படங்களுடன் நிகழ்வினை மிக ஆழகாக
    உடனடியகப் பதிவாக்கிக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. செய்தி தொகுப்பு சூடாக சுவையாக மிக
    நன்றாக வந்து இருக்கிறது, சுறுசுறுப்பாக ,
    உடனடி தடாலடியாக வெளியிட்டு விட்டீர்கள்.
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பதிவிற்கு நன்றி. தங்களைக் காண சந்தர்ப்பம் அமையவில்லை.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.அருமைப் பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அனைவருடனும் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!
    விளக்கு எழுவாயா,பயனிலையா
    செயப்படு பொருளா என்பதைப், பொறுத்தது!
    ஹா,ஹா.
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. நன்றி துரை டேனியல்(உங்களை நான் எதிர்பார்த்தேன்)

    பதிலளிநீக்கு
  13. நிகழ்ச்சி பற்றி புலவர் ஐயா பதிவிடுவார் என நினைத்திருந்தேன்... அதற்கு முன்னதாகவே நீங்கள் உங்கள் பாணியில் பதிவிட்டதற்கு நன்றி...

    புலவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  14. மிக மிக மகிழ்ச்சி விழா பற்றி அறிய வந்தமைக்கு. நாங்கள் போனது போல ஒரு உணர்வு. நன்றி சகோதரா. படம் மகிழ்வான தோற்றமாக உள்ளது. அதற்கும் நன்றி. உங்களிற்குக் கிடைத்த கௌரவமும் சிறப்பே! அனைவருக்கும் வாழ்த்துகள். அனைத்திற்கும் வாழ்த்துகள்.(பா மாலிகை. - (கவிதை மாலை.) என்று தானே கவிதைகளிற்கு நான் பெயர் சூட்டியுள்ளேன். அதாவது வலையில் எமுதியுள்ளேன்.)
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. அய்யாவுக்கும் , பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. புத்தக வேளியீட்டு விழா பற்றி மிகவும் அருமையான தகவல் பதிவு.படங்கள் சிறப்பாக இருக்கு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. இது போன்று அடுத்ததொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் கலந்து கொள்ளவேண்டும் என என்ன தோன்றுகிறது. “பா” நல்ல செய்தி. பகிர்வுக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  18. புலவர் ஐயாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. இப்போதும் சலிப்பின்றித் தமிழ்த் தொண்டு செய்து வரும் அவர்கள்,பல்லாண்டு உடல் நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து, மேலும்பல நூல்கள் வெளியிட இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  20. அன்பரே!
    நேரில் வருகை தந்ததும், அன்றே
    வெளியீட்டு விழாவினை தாங்கள்
    வலைப் பதிவில் வெளியீடு செய்த
    அன்பிற்கும் பண்பிற்கும் என்றும்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  21. அன்று உங்கள் அன்பில் நாங்கள் நெகிழ்ந்து போனோம்.அன்புக்கு நன்றி புலவர் ஐயா!

    பதிலளிநீக்கு
  22. இந்த புத்தக கவிதையை எப்படி வாசிப்பது இணையத்தில் உண்டா

    பதிலளிநீக்கு