தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

நிலை கொள்ள மறுக்கும் மனம்!

ஒரு வாரமாக மனம் எதிலும் நிலைக்க மறுக்கிறது.
கணினி முன் அமர்ந்தால் அதிகபட்சம் 15 மணித்துளிகளுக்கு மேல் எதையும் பார்க்கவோ, படிக்கவோ முடியாமல் மனம் அலை பாய்கிறது.
வலைப்பூவில் ஏதாவது எழுதுவதென்பது இயலாத செயலாக இருக்கிறது.
தியானத்தில் அமர்ந்தால் மனம் ஒன்ற மறுக்கிறது.
சரி,படிக்கலாம் எனப் புத்தகம் ஏதாவது கையிலெடுத்தால்,விழி பார்ப்பதை,மனம் வாங்கிக் கொள்ள மறுக்கிறது.
எதிலுமே லயிக்காத ஒரு நிலை.ஏன் என்றே தெரியவில்லை; புரியவில்லை.
ஒரு வேளை என் நன்பனின் இழப்பினால் ஏற்பட்ட தாக்கமோ?

என்னுடன் 1964-66 இல் பட்ட மேற்படிப்பு படித்தவன்.அதற்கு முன் ,வெளி ஊர்க் கல்லூரியில் பட்டப்படிப்பில் எனக்கு  ஒரு ஆண்டு,முந்தியவர்.

விடுதி வாசத்தில் இருக்கும்போது எனக்கு எளிய உடற் பயிற்சியெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்.
அப்போதே அவருக்கு இரவு நேரத்தில் இருட்டில் பார்வை சரியாகத்தெரியாது.
பணி ஓய்வுக்குப்பின் பார்வை முழுவதும் போய் விட்டது.
சென்னையிலேயே  இருந்தாலும் அடிக்கடி சந்திக்க முடிந்ததில்லை. தொலைபேசியில் உரையாடுவதோடு சரி.
அவரும் அவர் மனைவியும் மட்டுமே சென்னையில் வசித்து வந்தனர்.
மூன்று பிள்ளைகள்-ஒரு மகன்,இரண்டு மகள்கள்,அனைவரும் அமெரிக்காவில்.
உயிர் பிரியும் நேரத்தில் அவர்கள் யாரும் அருகில் இல்லை.
பெட்டிக்குள் அவர் உடலைப் பார்த்ததும் நான் உடைந்து போனேன்.பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத்தில் பிள்ளைகள் ஒருவர் கூட அருகே இல்லாத, உடனே வந்து சேரக்கூட முடியாத எங்கோ ஒரு இடத்தில்.
அவர் மனைவிக்கு ஆறுதல் கூறினேன்.
என்ன வாழ்க்கை இது?

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1139969

37 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் நண்பரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்....அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்....

    பதிலளிநீக்கு
  3. ஒருவரின் துன்பம்
    மற்றவருக்கு செய்தியே..
    அதன் தாக்கத்தை உரியவரே
    உணர்ந்துகொள்ள முடியும்.
    வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
    வாய்தா வழங்க முடியாததுமான
    மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..

    தங்களின் நண்பரின் மரணம் மனம் கனக்கச் செய்தது.
    அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  4. பிரியமானவர்களின் இழப்பு ஏற்படுத்தும் துயர் வார்த்தைகளால் துடைக்க முடியாதது.வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பிரியமானவர்களின் இழப்பு ஏற்படுத்தும் துயர் வார்த்தைகளால் துடைக்க முடியாதது.வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் நண்பர் உங்கள் நினைவில் வாழ்கிறார். அமைதி கொள்ளுங்கள்.

    //இது இப்படி நடக்கவேண்டும் // இது இப்படி ஆகவேண்டும் // என்றெல்லாம் நினைப்பது நாம் மட்டுமே, ஆனால் அவைகளை அதன் வழியில் நடத்தி செல்ல, நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆயிரம் ஆயிரம் காரணிகள் இங்கு உண்டே.!

    பதிலளிநீக்கு
  7. நண்பரின் இழப்பு வேதனையான விஷயம்தான் ...எனினும் வல்லவன் வகுத்தபடியே எல்லாம் நடக்கும் ...ஆறுதலடையுங்கள் ...

    பதிலளிநீக்கு
  8. வாரிசுகளை யோசிக்க வைக்கும் பதிவு.அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் ஐயா..நீங்கள் மனமுடைந்து போய்விட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் நண்பருக்கு கண்ணீர் அஞ்சலிகள் பாஸ்.
    என்ன செய்வது பாஸ் மனிதவாழ்க்கையில் பிரிவு என்ற சொல்லை தவிர்க்க முடியாது
    பிறக்கும் போது தாயின் கருப்பையில் ஆரம்பிக்கும் பிரிவு உடலைவிட்டு உயிர் பிரியும் வரை தொடர்கின்றது.

    விரைவில் உங்கள் மனம் அமைதிகொள்ள இறைவனைவேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் நண்பருக்கு கண்ணீர் அஞ்சலிகள் பாஸ்.
    என்ன செய்வது பாஸ் மனிதவாழ்க்கையில் பிரிவு என்ற சொல்லை தவிர்க்க முடியாது
    பிறக்கும் போது தாயின் கருப்பையில் ஆரம்பிக்கும் பிரிவு உடலைவிட்டு உயிர் பிரியும் வரை தொடர்கின்றது.

    விரைவில் உங்கள் மனம் அமைதிகொள்ள இறைவனைவேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  11. நண்பனின் பிரிவு ஏற்படுத்தும் வலி மிகமிக அதிகமானதுதான். நம்மால் என்ன செய்துவிட முடியும்? அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்ற வல்லது. தாங்கள் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  12. நன்றி கணேஷ்.சோகத்தைப்பகிர்ந்து கொண்டதும் உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் மனதைக் கொஞ்சம் லேசாக்கி விட்டன.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்! // பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத்தில் பிள்ளைகள் ஒருவர் கூட அருகே இல்லாத, உடனே வந்து சேரக்கூட முடியாத எங்கோ ஒரு இடத்தில்.
    அவர் மனைவிக்கு ஆறுதல் கூறினேன். என்ன வாழ்க்கை இது?//
    என்ற தங்களது விரக்தியான வரிகள் உங்கள் மனபாரத்தை காட்டுவதாக உள்ளன. உங்கள் நண்பரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நெருங்கிய நண்பரின் மறைவு நிச்சயம் மனதினை நொறுங்கச் செய்யும்...

    காலம் உங்கள் காயங்களை நிச்சயம் ஆற்றும்...

    மறைந்த உங்கள் நண்பரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. நண்பரின் பிரிவுக்கு அனுதாபங்கள் உங்கள் மனதில் துயரம் நீங்கி லொக்கியவாழ்வில் மீண்டும் வர பிரார்த்திக்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  16. எல்லாரும் கடக்க வேண்டிய நதிதானே இந்த மரண நதி. ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்புவாரோ? இயல்பு நிலைக்கு திரும்புங்கள். அப்போதுதானே நல்ல நல்ல பதிவுகள் எங்களுக்கு கிடைக்கும். நானும் இவ்விதமான அநேக இழப்புகளினூடே கடந்த வந்த அனுபவம் உண்டு சார்.

    பதிலளிநீக்கு
  17. நிறைய முதியவர்களின் இன்றைய நிலை இதுதான். யாரை குற்றம் சொல்ல, அவர்களுக்கு அவர்களது வாழ்க்கையும் பணியும் மிகவும் முக்கியம் என்றாகிவிடுகிறது. ஒரு குறை அழுது தீர்த்தாலும் மனம் ஆறாது, என்ன செய்வது.

    பதிலளிநீக்கு
  18. காலத்தைவிடச் சிறந்த உளவியல் மருத்துவர் யாரும் இல்லை நண்பரே..

    பதிலளிநீக்கு
  19. நண்பரின் பிரிவு வேதனைக்குரியது. அவரின் கடைசிக் காலத்தில் யாரும் அருகில் இல்லைஎன்பதும் சோகம். அவர் குடும்பத்துக்கு எங்கள் அனுதாபங்கள்....துயரிலிருந்து கொஞ்சம் மீண்டு விட்டீர்கள் என்பது ஆறுதல்.

    பதிலளிநீக்கு
  20. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
    எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!
    நாம் எதை கொண்டு வந்தோம் விட்டுச்செல்ல அல்லது கொண்டுசெல்ல?

    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்!

    நேற்று நாம் ஒரு திட்டத்தை தீட்டுகிறோம்... நம் எதிர்காலம்/சந்ததி நன்றாக இருக்க!
    ஆனால் அந்த திட்டமே "நம் முடிவில்" தவறாகிவிடுகிறது.

    ஒவ்வொரு நாளும் செத்து செத்து வாழ்கிறோம்.
    பின்னர் வாழாமலே செத்தும்விடுகிறோம்.

    வாருங்கள் ஐயா!
    வாழ்ந்து காட்டுவோம்!!
    உங்களின் உயிர் தோழரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!

    பதிலளிநீக்கு
  21. உங்கள் நண்பரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. உங்கள் நினைவில் என்றென்றும் அவர் இருக்கத்தானே போகிறார்..கலங்காதீர்கள் சார்..

    பதிலளிநீக்கு
  22. //பணம் இருந்தென்ன?உயர் பதவி வகித்தென்ன? கடைசி நேரத்தில் பிள்ளைகள் ஒருவர் கூட அருகே இல்லாத, உடனே வந்து சேரக்கூட முடியாத எங்கோ ஒரு இடத்தில்.//

    மிகவும் வேதனையாக இருக்கு சார்.

    என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  23. பதிவைப் படித்தபின் மனது கனத்தது.

    பதிலளிநீக்கு
  24. பிரிவென்பது மிகுந்த துயர் மிகுந்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.கண்ணீர் வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  25. பலரின் நிலைமை இவ்வாறே உள்ளது .. நண்பனை இழந்து வாடும் உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது .. கவிஞ அன்றே பாடினார் ..வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் ....என்று . வாசு

    பதிலளிநீக்கு