காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினாற் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சியன்றோ
நாடகத்திற் காவியத்திற் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றா மென்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க (பாரதி)
ஆம் பாரதி.கொல்பர்களுக்குப் புரிவதில்லை அப் பிரிவின் வலி
ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாத
அந்த ரணத்தின் வேதனை.
காதலில் தோற்ற நெஞ்சங்களுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் தோல்வி என்று நான் சொல்ல மாட்டேன்.
அவர்கள் இணையாதிருக்கலாம்.
ஆனால் உண்மைக் காதல் சாவதில்லை.
ரணமாய்,வலியாய்,வேதனையாய்,நினைவுகளாய்
வாழ்கிறது.
வாழும், காலம் கடந்தும்
காதல் வாழ்க!
\\\ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாத
பதிலளிநீக்குஅந்த ரணத்தின் வேதனை.
காதலில் தோற்ற நெஞ்சங்களுக்கு மட்டுமே தெரியும்.\\\ உண்மை
காதல் வாழ்க!
பதிலளிநீக்குகாதலர் தின வாழ்த்துகள்.
உண்மைக் காதல் அழிவதில்லை.
வேதா. இலங்காதிலகம்.
ரணமாய்,வலியாய்,வேதனையாய்,நினைவுகளாய்
பதிலளிநீக்குவாழ்கிறது.
உண்மை
காதலி வலி சொல்லும் அருமைத்தொகுப்பு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅண்ணே வலி நிரந்தரம்னு சொல்றீங்க் நெசம்தான்!
பதிலளிநீக்குகாதலில் ஜெயித்தவர்கள் சிலசமயம் தோற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுவார்களோ என்று தோன்றும். காதலில் வெற்றி என்பதையும் தோல்வி என்பதையும் நாம் மாற்றிப் புரிந்து கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றும்! அவரவர் அனுபவம்!
பதிலளிநீக்குநன்றி கூடல் பாலா
பதிலளிநீக்குநன்றி கோவைக்கவி
பதிலளிநீக்குநன்றி தனசேகரன்
பதிலளிநீக்குநன்றி ரமாரவி
பதிலளிநீக்குநன்றி விக்கி
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குதோல்வியடைந்த காதலர்களின் மனதிலும் அந்தக் காதல் என்றென்றும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கும்? இந்த தினத்தில் காதலை வாழ்த்திய அருமையான பதிவு.
பதிலளிநீக்குஉண்மைக் காதல் அழிவதில்லை...காதலர் தின வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகாதல் காலம் கடந்தும் வாழும் என்பது உண்மை. நல்ல பதிவு
பதிலளிநீக்கு