தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

காதலி விட்டுச் சென்ற செல்வங்கள்!

என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.

இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!

இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.

அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.

சாந்தோம் சந்திப்பில் ஒரு நாள்
கன்னத்தில் ஏதோ கறையென்று நான் சொல்ல
அவள் துடைத்தும் போகாத காரணத்தால்
நான் துடைக்க உதவிய  இக்கைக்குட்டை!
பட்டுக் கன்னத்தின் ஸ்பரிச சுகம் பெற்றதன்றோ!

அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்
அவள் கைகள் அளைந்த கடல் மணல்
அவள் பொறுக்கிப் போட்ட சிப்பி
அவள் பல் பதிந்த என் பேனா

பிரியும் முன் ஒரு நிமிடம் என் நெஞ்சில் சாய்ந்து
கண்ணிர் உதிர்த்தபோது கரைந்த மையால்
கறையான என் சட்டை 
இவையெல்லாமே என் சொத்துக்கள்!

என்னுடன் அவள் இல்லை இன்று
ஆனால் அவள் நினைவுகளும்
அவள் காதலின் குறியீடாய் இவையும்
என்றுமே இருக்கும் என்னுடன்!

25 கருத்துகள்:

 1. அட, உங்களின் பேனா முனை காதலுக்காய் கசிந்து உருகியுள்ளதே... காதலி பிரிந்து விட்டாலும் காதல் என்றும் பிரிவதேயில்லை. உங்களின் சொல்லாடல் நன்று.

  பதிலளிநீக்கு
 2. கவிதை அற்புதம்! நீங்கள் பன்முகக்கலைஞர் என்றாலும் உங்களின் கவிதைப் படைப்புகள்தான் எனக்குப் பிடிக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. //சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
  அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
  வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
  எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.

  //

  காதல் ரசம் சொட்டுது அய்யா

  பதிலளிநீக்கு
 4. கவிதையானாலும் சரி, காமெடியானலும் சரி, கோபம் சாடல் எதுவாக இருந்தாலும் எங்க தலையை மிஞ்ச முடியாது என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகி உள்ளது வாழ்த்துக்கள் தல...!!!

  பதிலளிநீக்கு
 5. சார் பின்னூறீங்க... மலரும் நினைவுகளா இல்லை கற்பனையா?

  பதிலளிநீக்கு
 6. சார் பின்னூறீங்க... மலரும் நினைவுகளா இல்லை கற்பனையா?

  பதிலளிநீக்கு
 7. அற்புத காதல் கவிதை அய்யா...

  பதிலளிநீக்கு
 8. பதிவு தொடங்கியதன் பலனை இன்று அடைந்தேன்.
  அன்புக்கு நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 9. கற்பனை என்று உண்மையைச் சொன்னால் நம்பவா போறீங்க?
  நன்றி பாலா

  பதிலளிநீக்கு
 10. காதலனுக்கு காதலியின் ஒவ்வொரு நினைவுமே ஒரு பொக்கிஷம்தான்... அதை அற்புதமான ஒரு கவிதையாக்கிய உங்களுக்கு ஒரு பொற்கிழி தரலாம் என யோசிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 11. நன்றி வெங்கட்..தில்லிக்கு வந்து வாங்கிக்கொள்ளவா,பொற்கிழியை?!

  பதிலளிநீக்கு