தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 22, 2012

ஹலோ,ஹலோ சுகமா?

பொதுவாகவே எல்லோரும் தொலைபேசியைக் கையில் எடுத்ததும் சொல்லும் முகமன் ”ஹலோ” என்பதுதான்.

ஆனால் நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக,தொலைபேசியில் ஹலோ சொல்வதில்லை .மாறாக”ஓம் நமச்சிவாய”என்று சொல்லி வருகிறேன்.என் நண்பர்களின் வீடுகளில் என் நண்பருடன் நான் பேச எண்ணும்போது தொலபேசியை எடுப்பவர்-அவர் மனைவி ,மக்கள்-யாராயிருப்பினும் “ஓம் நமச்சிவாய பேசுகிறார்” என்று சொல்லி விட்டுத் தொலை பேசியை நண்பரிடம் கொடுக்கிறார்கள்.தொலை பேசியில் மட்டுமன்றி நேரில் சந்திக்கும் நேரங்களிலும் நண்பர்களிடம் நான் கூறும் முகமன்”ஓம் நமச்சிவாய”இதனால் பலர் என்னை ஒம் நமச்சிவாய என்ற பெயரிலேயே அழைக்கவும் தொடங்கி விட்டனர்.

இது போன்று சில ஆன்மீக அமைப்புகளைச் செர்ந்தவர்கள் கூறுவது வழக்கம்.சின்மயா மிஷனில்”ஹரி ஓம்” என்றும் இஸ்கானில்” ஹரே கிருஷ்ணா” என்றும்,வேத்தாத்திரி மகரிஷி அமைப்பைச் சேர்ந்தவர்கள்”வாழ்க வளமுடன்”சத்ய சாயி பாபாவின் பக்தர்கள்”சாயிராம்” என்றும் கூறுவதை வழக்கமாகக் கொண்டுளனர்.

இந்த ஹலோவை விட்டு விட்டுத் தனித்துவமாக ஏதாவது சொல்ல அனைவரும் முயலாலாமே.மறு முனையில் கேட்பவர்கள்,உடனே நீங்கள்தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வர் அல்லவா?அது மட்டுமன்றி ஒரு நல்ல சொல்லைக் கேட்ட மன நிறைவு வேறு!

என் உறவினர் ஒருவர் என்னைப் பின்பற்றித் தொலை பேசியில்”திருச்சிற்றம்பலம்”என்று சொல்லத் தொடங்கி விட்டார்

என்ன சொல்லலாம்
1)வணக்கம்
2)வாழ்க ,வளர்க.
3)இந்த நாள் இனிய நாள்
4)நல்லதே நடக்கும்
5)நீங்கள் விரும்பும் கடவுள் பெயர்.

எத்தனையோ சாத்தியங்கள் இருக்கின்றன.உங்கள் கற்பனையின் வீச்சே எல்லை!

45 கருத்துகள்:

  1. ஆமாம்...ஹலோ சொல்வதுதான் சட்டமா என்ன?

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனை. அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல் விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். இனி நானும் கடைப்பிடிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பலரும் இன்று பின்பற்றிவரும் நல்ல செயல். அனைவரும் முயற்சிக்கலாம் தான்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஒரு அறிவுரை ஐயா..
    பின்பற்றுகிறேன்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல விஷயம்தான் ஐயா. இனி நானும் அதுப்போலவே முயற்சிக்குறேன். வணக்கத்துடனே ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் ஐயா,

    பதிலளிநீக்கு
  6. நல்ல செய்தி ஐயா..நானும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வணக்கம் என்றுதான் சொல்லி வருகிறேன்..நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @கணேஷ்
    முயற்சி திருவினையாக்கும்.நன்றி

    பதிலளிநீக்கு
  8. @கவிதை வீதி... // சௌந்தர் //
    நல்லாஇருக்கு!நல்லாத்தான் இருக்கும்!
    நன்றி சௌந்தர்

    பதிலளிநீக்கு
  9. ராதே கிருஷ்ணா.. மிகவும் நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான்.‘ஹலோ’ என சொல்வதைவிட, அவரவர்கள் விருப்பதிற்கு இணங்க தொலைபேசியில் அழைப்போரை வரவேற்கலாம். நல்லபதிவு!

    பதிலளிநீக்கு
  11. வாழ்க வளமுடன் அருமைப் பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  12. ஆமாங்க நம்மை நாமே அறிமுகப்படுத்துவது மாதிரி அருமையான பதிவு .

    பதிலளிநீக்கு
  13. நல்ல விஷயம்....

    ராஜஸ்தானியர்கள் நேரில் பார்க்கும்போது ”ராம் ராம் ஜி” என்றுதான் சொல்வார்கள்....

    தொலைபேசியில் எப்படி என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  14. ஆமாம் சார். அருமையான யோசனைகள். நடைமுறைப்படுத்திடுவோம். நான் போன் எடுத்தவுடன் சார். வணக்கம். நல்லாருக்கீங்களா என்று கேட்பது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  15. ஆம் CP சார் !
    நல்ல பழக்கம் தான்.
    வடக்கிந்தியர்கள் 'ராம் ராம் ஜி ' என்று சந்திக்கும் poது சொல்வதும் ,
    குழந்தைகள் 'நமஸ்தே' ஆண்ட்டி என்று சொல்லுவதும்
    வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  16. 'முதல்வர் வாழ்க'...என்று சொல்லிக்கூட பேச ஆரம்பிக்கலாம். என்ன சார் சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  17. நல்ல விஷயம் சார். பின்பற்ற முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. நமோ நாராயண!
    வாழ்க வளமுடன்!
    முத்தான கருத்துக்கள்! நானும்
    முயல்கிறேன்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  19. நமோ நாராயண!
    வாழ்க வளமுடன்!
    முத்தான கருத்துக்கள்! நானும்
    முயல்கிறேன்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  20. அருமையான ஆலோசனை
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  21. @ சிவகுமார்
    அதை இப்படிச் சொல்லலாமே”அம்மா வாழ்க!”
    நன்றி

    பதிலளிநீக்கு