தொடரும் தோழர்கள்

சனி, பிப்ரவரி 18, 2012

ஒரு மேய்ப்பரும் கணக்காய்வாளரும்!

ஒரு மேய்ப்பன் ஊருக்கு வெளியே தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனருகில் ஒரு பெரிய மகிழ்வுந்து  வந்து நின்றது.அதிலிருந்து மிக விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்த ஒருவர் இறங்கினார்.ஆட்டு மந்தையை ஒரு பார்வை பார்த்தார்.

பின் மேய்ப்பனைப் பார்த்துக் கேட்டார்”உன் மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கின்றன என்று நான் சரியாகச் சொன்னால்,உன் ஆடுகளில் ஒன்றை எனக்குக் கொடுப்பாயா?”

அவனும் சம்மதித்தான். 

அந்த மனிதர் இணைய  இணைப்புள்ள தன் மடிக் கணினியை எடுத்து. நாசாவின் ஒரு இணைய தளத்தின் மூலம்,அந்த இடத்தை ஆராய்ந்து,கணினியில் சில கணக்குகளுக்குப் பின் அவனிடம் சொன்னார்”உன் மந்தையில் சரியாக 368 ஆடுகள் இருக்கின்றன”

மேய்ப்பன் ஒப்புக் கொண்டு அவரை ஒரு ஆட்டை எடுத்துக் கொள்ளச் சொல்ல அவரும் எடுத்துக் கொண்டார்.

இப்போது மேய்ப்பன் கேட்டான்”நான் உங்கள் தொழில் என்ன என்று சொன்னால்,நீங்கள் எடுத்துக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்து விடுவீர்களா?”

அவர் ஒப்புக் கொண்டார்.

அவன் சொன்னான்”நீங்கள் ஒரு கணக்காய்வாளர்(ஆடிட்டர்)”

அவர் அதை ஆச்சரியத்துடன் கேட்டார்”எப்படிச் சொன்னாய்?”

மேய்ப்பன் சொன்னான்”மிக எளிது. 
ஒன்று,தேவையின்றி நீங்களாகவே வந்தீர்கள். 
இரண்டு எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தைச் சொல்வதற்குக் கட்டணம் பெற்றுக் கொண்டீர்கள். மூன்றாவதாக உங்களுக்கு என் தொழில் பற்றி எதுவும் தெரியாது!

தயவு செய்து என் நாயைத் திருப்பிக் கொடுக்கிறீர்களா?”

40 கருத்துகள்:

  1. கடைசியில் ஆடு நாயாகிப்போனதும் ஆச்சர்யமாக உள்ளதே!

    பதிலளிநீக்கு
  2. ஹா.... ஹா... சூப்பர் ஸ்டோரி. அந்த கடைசி ட்விஸ்ட்டை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை!

    பதிலளிநீக்கு
  3. கதை நகை...முடிவு சுவை..வாசித்தேன்.வாக்கிட்டேன்..நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு....

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை
    அந்தக் கடைசிப் பஞ்ச் அருமை
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தயவு செய்து என் நாயைத் திருப்பிக் கொடுக்கிறீர்களா?

    கடைசி வரி சிரிக்கவைத்தது..

    ஆட்டுக்காரரின் அறிவு வியக்கவைத்தது.

    பதிலளிநீக்கு
  7. செம பன்ச்....தேவை இல்லாமல் மூக்கை நுழைப்பது...இப்பத்தான் ஆகுமோ.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு ஐயா. நானும் அவர் ஆடுதான் மேய்க்கிறாரோ என நினைத்தேன்.

    தங்களுக்கு பன்முகத் திறமையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், விவரங்களுக்கு எமது வலைத் தளத்தைப் பார்க்கவும்.

    - நுண்மதி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்! அலுவலகங்களில் Inspection Report என்பது பெரும்பாலும் இப்படித்தான். நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய கணக்காய்வாளர்கள் எவ்வாறு ஆய்வு செய்து அறிக்கை தருகிறார்கள் என்பதை விளக்கும் அருமையான பதிவு.

    ‘மேய்ப்பன் ஒப்புக் கொண்டு அவரை ஒரு ஆட்டை எடுத்துக் கொள்ளச் சொல்ல அவரும் எடுத்துக் கொண்டார்.’ என்ற வரிகளில் ஒரு ஆட்டை என்பதற்குப் பதில் ‘இங்குள்ளதில் ஒன்றை’ என எழுதியிருக்கலாம் என்பது எனது கருத்து.





    நிகழ்வுகள்

    பதிலளிநீக்கு
  11. இந்த ஆப்பு கணக்காய்வாளருக்கு மட்டும் என்று எண்ணி படித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த "நாய்"யை படித்தவுடன் வாய்விட்டு சிரித்தேவிட்டேன். அலுவலகத்தில் அனைவரும் என்னை நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர் ஐயா! அருமை அருமை!!!

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா ஹா!ஆடிட்டருக்கு மூக்கறுப்பு!அருமை ,நல்லா சிரித்தேன்!!

    பதிலளிநீக்கு
  13. சூப்பர் சார்,நல்ல மூக்கறுப்பு!!நல்லா சிரிச்சேன்,’என் நாயைத் திருப்பிக்கொடு!!!!!!!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா,
    நல்ல கதையினை குடுத்திருக்கிறீங்க.
    ஆழம் அறியாமல் காலை விடாதே எனும் வார்த்தைக்கும் இக் கதை அர்த்தம் கற்பிக்கிறதே.

    பதிலளிநீக்கு
  15. கடைசியில் எதிர்பார்க்காத திருப்பம்....:))))

    பதிலளிநீக்கு