இந்தப் பதிவை நேற்றைய பதிவின் நீட்சி எனக் கொள்ளலாம்.
நேற்று,தன் பிரச்சினையே பெரிது என நினைக்கும் மனித மனம் பற்றிச் சொல்லியிருந்தேன்.
இது தொடர்பான ஆண்டன் செகாவின் குட்டிக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
குளிர் நடுக்கும் ஒரு கனமான இரவு..
ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது.
கட்டிலின் மேல் ஒரு சிறுவன் துவண்டு படுத்திருக்கிறான்.
அருகில் அமர்ந்து அவனைக் கவனித்துக் கொண்டு,அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டும் இருக்கும் ஒரு மனிதர்.அவன் தந்தை.அவர் ஒரு மருத்துவரும் கூட.
அப்போது கதவு தட்டும் ஓசை.
திறந்து பார்த்தால் ஒரு இளைஞன் பதற்றத்துடன் நிற்கிறான்.
“ஐயா!என் மனைவி தாங்கமுடியாத தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். மாத்திரைகள்கொடுத்தும் பயனில்லை.தயவு செய்து உடனே வாருங்கள்”
மருத்துவர் சொல்கிறார் “என் மகன் மிக உடல் நலமின்றி இருக்கிறான்.அவனை விட்டு விட்டு என்னால் வர இயலாது.”
இளைஞன் அவர் காலில் விழுகிறான்.”நீங்கள் எனக்குக் கடவுள் மாதிரி.நானே திரும்பக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்”
தயக்கத்துடன் புறப்படுகிறார்.
அவன் வீட்டை அடைந்ததும்,அவரை வரவேற்பரையில் அமரச் செய்து விட்டு மேலே செல்கிறான்.நீண்ட நேரம் கழித்தும் அவன் திரும்ப வரவில்லை.
மருத்துவர் மேலே சென்று பார்க்கிறார்.
அவன் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.அவன அருகில் ஒரு காகிதம் கிடக்கிறது.
அதை எடுத்துப் பார்க்கிறார்.
”நான் என் காதலனுடன் போகிறேன்—கவிதா”என்ற ஒரே வரி.
இளைஞனின் அழுகை அதிகமாகிறது”என் மனைவி,என் மனைவி”
மருத்துவருக்குக் கோபம் வருகிறது.
இதற்காகவா என் பையனைக் கவனிக்காமல் இவனுடன் வரச்செய்தான்.இவன் இருப்பதைப் பார்த்தால் என்னைத் திரும்பக் கொண்டு போய் விடமாட்டான் எனத் தோன்றுகிறதே .என்ன செய்வேன்.என் மகனுக்கு என்ன ஆச்சோ.’என் மகன்,என் மகன்”எனப் புலம்புகிறார்.
இளைஞன்”என் மனைவி,என் மனைவி”
மருத்துவர்”என் மகன்,என் மகன்’
.............. ................
............... ..................
கதை இங்கு முடிகிறது.
தனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.
சேவை நிறுவனங்களில் ஊழியர்-வாடிக்கையாளர் உரசல் என்பது சகஜம்
உதாரணத்துக்கு ஒரு வங்கியை எடுத்துகொள்வோம்.
ஒரு ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் எவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது?
காலத்துக்கு ஏற்ற தேவையான அறிவுறுத்தல் அன்பரே..
பதிலளிநீக்குஅருமை.
//தனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.//
பதிலளிநீக்குஉண்மைதான் சார்,
நல்ல கருத்து.
நல்ல கருத்து.
பதிலளிநீக்குஒவ்வொருவரும் ஒரு சிக்கலை தங்கள் கோணத்தில் இருந்து பார்ப்பதால் தான் வருகிறது சிக்கல்! வங்கி ஊழியர்- வாடிக்கையாளர் உரசலைப்பற்றி படிக்க ஆவலாய் உள்ளேன்.
பதிலளிநீக்குkathaiyudan thelivaana purithal erpaduththi ulleerkal...vaalththukkal
பதிலளிநீக்குஎந்த ஒரு விஷயத்திலும் மற்றவர் கோணத்திலும் நின்று யோசிப்பவர் மிக சொற்பமே. அழகான கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். மகிழ்கிறேன். வங்கி ஊழியர்களுடன் பொதுமக்களுக்கு பிணக்கு ஏற்படும் காரணங்கள் சில எனக்குத் தெரியும். நீங்கள் சொல்லும் உரசல் அதில் அடங்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்கும்...புரியுது - நல்ல கருத்து
பதிலளிநீக்குதனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே.//
பதிலளிநீக்கு>>>
மறுக்க முடியா உண்மை சகோ
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார். அவரவருக்கு அவரவர் பிரச்சனைதான் பெரிதாகத்தோன்றும்.
பதிலளிநீக்கு''..தனி மனித உறவுகளில் பிரச்சினகள்,சண்டைகள் ஏற்படக் காரணம் ஒருவர் தன் பிரச்சினையிலேயெ மனம் கவிந்து மற்றவர் பிரச்சினையை காண மறுப்பதே...''
பதிலளிநீக்குஇடுகையின் சாரமே இதில் அடக்கம். நல்லது மேலும் பார்க்க ஆவல். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
தல வலியும் திருகு வலியும் அவனவனுக்கு வந்தால் தெரியும் என்பது இதுதானோ?
பதிலளிநீக்குநல்ல கருத்துகள் அய்யா
பதிலளிநீக்குநன்றி முனைவர் குணசீலன்
பதிலளிநீக்குநன்றி ரமாரவி
பதிலளிநீக்குநன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி சரவணன்
பதிலளிநீக்குநன்றி கணேஷ்
பதிலளிநீக்குநன்றி சங்கரலிங்கம்
பதிலளிநீக்குநன்றி மனசாட்சி
பதிலளிநீக்குநன்றி ராஜி
பதிலளிநீக்குநன்றி கோவைக்கவி
பதிலளிநீக்குநன்றி அஜீஸ்
பதிலளிநீக்குநன்றி ராஜா
பதிலளிநீக்குஅடுத்தவரின் பிரச்சனையை பற்றி நாம் யோசிக்காதது தான் எல்லாவற்றுகுமே காரணம்.....
பதிலளிநீக்குதேவையான பகிர்வு.