தொடரும் தோழர்கள்

சனி, பிப்ரவரி 25, 2012

ஒரு கொள்ளை!ஒரு என்கௌண்டர்!ஒரு கேள்வி!

எதிர்பார்க்கவேயில்லலை,இப்படி நடக்குமென்று

கொள்ளை போய்விட்டது, என் இதயம்

பார்வை ஒன்றிலே திருடி விட்டாள் அவள்

யாரும் அறியாமல்,மௌனமாக நிகழ்ந்த கொள்ளை

கொள்ளை அடித்தவரை நேசிக்கும் விந்தை இங்குதான்!

ஆம்,கொள்ளைக்காரி அவளை நான் காதலித்தேன்.

உலகமே அழகுமயமாய்த் தெரிந்த காலம் அது

ஆனால் ஒருநாள்

மீண்டும் எதிர்பாராதது நிகழ்ந்தது.

ஒரு என்கௌண்டரில் அவள் என்னைச் சுட்டு விட்டாள்

“என்னை மறந்து விடுங்கள்” என்ற மூன்று சொற்களால். 

தொடக்கமும்  மூன்று சொற்கள்

முடிவும்     மூன்று  சொற்கள்!

ஆனால் என் இதயத்தைத் திருப்பித்தராமலே

அவள் சென்று விட்டாள்

கொள்ளையர்களை என்கௌண்டரில் கொல்வார்கள்

ஆனால் இங்கோ!

பறி கொடுத்தவனே என்கௌண்டரில் கொல்லப்பட்டு விட்டான்!

இது என்ன நியாயம்?

நீங்களே சொல்லுங்கள்!


டிஸ்கி1:தலைப்பு எழுதி விட்டுப் பதிவு எழுதுவது என்பது இதுதான்!




41 கருத்துகள்:

  1. நானும் என்னவோ ஸ்பெஷல் செய்தி போட்டுருக்கீங்கன்னு ஓடி வந்தேன் வழக்கம் போல கவுத்திட்டீங்களே தல....!!!

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்... :) தலைப்பை எழுதி பதிவு எழுதுனீங்களா? சூப்பர்...

    பதிலளிநீக்கு
  3. நான் ரொம்ப ஆர்வமா வந்தேன் பரவாயில்லை.

    மயிலு கிடைகலைனாலும் குயிலு கிடச்சுருக்கு.

    அருமைப் பதிவு வாழ்த்துகள் உங்க என்கௌண்டருக்கு.சும்மா சுட்டு தள்ளுங்க.

    பதிலளிநீக்கு
  4. இதுவும் நல்லாத்தான் இருக்கு..தலைப்பு எழுதிவிட்டு பதிவு எழுதுவது...

    பதிலளிநீக்கு
  5. ம். ம். ம். என்ன செய்ய! நீதிமன்றத்தை நாடி C.B.I விசாரணைக்கு உத்தரவிட வேண்டுகோள் விடுக்கவேண்டியதுதான்!!!

    வழக்கம்போல் பரபரப்பான செய்திகளின் தலைப்போட்டு எங்களை ஏமாற்றுவதே உங்கள் வேலையாகிவிட்டது.ஏமாறினாலும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. ”நான் பேச நினைப்பதெல்லாம்”

    நீங்களே இப்படிப் பேசி விட்டீர்களே!

    உண்மை, உண்மை, உண்மை உணர்வுகளை மிகவும் அருமையாக ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். vgk

    பதிலளிநீக்கு
  7. தலைப்பைப் படித்து நாங்கள் ஒரு மாதிரி எதிர் பார்த்து வர
    மாறுதலாக இருந்ததுமிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஒரு கொள்ளை!ஒரு என்கௌண்டர்!ஒரு கேள்வி!

    அருமையான அழ்கான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  9. கவிதை..கவிதை..
    //தொடக்கமும் மூன்று சொற்கள்
    முடிவும் மூன்று சொற்கள்!//
    அருமை..

    பதிலளிநீக்கு
  10. எதிலும் வித்தியாசம் காட்டும்
    உங்கள் பதிவுகள்..

    பதிலளிநீக்கு
  11. ஆமாங்க நானும் தலைப்பை பார்த்ததும் சமீபத்திய நிகழ்வைப் பற்றிய பதிவென்றே நினைத்தேன் . அருமை அருமை

    பதிலளிநீக்கு
  12. தலைப்பூ வைத்துக் காலை வாரிவிட்டீர்!
    நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. சகோ சென்னை பித்தன்,

    இப்படி ஏமாத்தி போட்டீங்களே????

    பதிலளிநீக்கு
  14. என்னாச்சு, உங்களுக்கும் ரமணி ஐயாக்கும் அம்பதை கடந்து காதலில் விழுந்திருக்கீங்க ஐயா. அவரும் ஒரு காதல் கவிதை எழுதி இருக்கார் போய் பாருங்க

    பதிலளிநீக்கு
  15. //கொள்ளையர்களை என்கௌண்டரில் கொல்வார்கள்
    ஆனால் இங்கோ!
    பறி கொடுத்தவனே என்கௌண்டரில் கொல்லப்பட்டு விட்டான்!//

    - அருமையான வார்த்தை விளையாட்டு. சூப்பருங்கோ!

    பதிலளிநீக்கு
  16. சில சமயம் மேட்டர் எங்கிருந்து கிடைக்கும்னு தெரியாது.. நல்லாத்தான் இருக்கு :)

    பதிலளிநீக்கு
  17. எல்லாரையும் ஏப்ரல் பூஃல் ஆக்கர்தே உங்களுக்கு வேலையா போச்சு!! :PPP

    பதிலளிநீக்கு
  18. முன்பே இன்னும் நிறைய எழுதியிருக்கேன் ராஜி..அந்த நாள் ஞாபகம்?!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கொடுத்தவனே பறித்து கொண்டானடி ! வாழ்வே மாயம் ! தாய் அன்பு ஒன்று தான் உண்மை ஆனது ;நிலை ஆனது ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  20. The agony that one experiences post such encounter ironically has found favour with many for these die hard romantics believe that it is better to have loved and lost than not to have loved at all.. Vasudevan

    பதிலளிநீக்கு