தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 13, 2012

பிரச்சினை யாருக்கு இல்லை?

மருத்துவர் ராமன் வேகமாக மருத்துவ மனைக்குள் நுழைந்தார். ஒரு அவசர அறுவை சிகிச்சைக்காகத் தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அவர் விரைந்து மருத்துவ மனை வந்திருந்தார்.அறுவைச்  கிகிச்சைக்கான உடை அணிந்து,அந்த அறையை நோக்கிப் போனார். 

அறையின் வெளியே சிகிச்சைக்குக் காத்திருக்கும் சிறுவனின் தந்தை கவலையுடன் மருத்துவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மருத்தவரைக் கண்டதும் அவர் இரைந்தார்ஏன் இவ்வளவு தாமதம்?என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.உங்களுக்கெல்லாம் பொறுப்புணர்ச்சியே கிடையாதா?”

ராமன் சொன்னார். “நான் வெளியில் இருந்தேன்.எனக்கு அழைப்பு வந்தவுடன் வந்து விட்டேன்.இப்போது கொஞ்சம் அமைதியடையுங்கள்.நான் என் வேலையைச் செய்யப் போகிறேன்

அமைதி?.உள்ளே இருப்பது உங்கள் பையனாயிருந்தால் நீங்கள் அமைதியா யிருப்பீர்களா?உங்கள் பையன் இறந்தால் என்ன செய்வீர்கள்அத் தந்தை கோபமாக் கேட்டார்.

புனரபி ஜனனம்,புனரபி மரணம்பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவன.அதில் நாம் செய்ய எதுவுமில்லை.நான் என் கடமையைச்  செய்கிறேன்.நீங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்மருத்துவர் சொன்னார்

பெரியவர் முணுமுணுத்தார்தனக்குச் சம்பந்தமில்லாதபோது அறிவுரை கூறுவது மிக எளிது. ”

மூன்று மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார்.”கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.உங்கள் பையன் பிழைத்து விட்டான்.ஏதாவது கேட்க வேண்டு மெனில் செவிலியைக் கேட்டுக் கொள்ளுங்கள்” ன்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் வேகமாகச் சென்று விட்டார்.

தொடர்ந்து வந்த செவிலியைப் பார்த்து அத்தந்தை கேட்டார்.”என்ன இவர் இவ்வளவு திமிர் பிடித்தவராக இருக்கிறார்?என் பையனைப் பற்றி ஏதாவது கேட்க எண்ணினால் ஒரு மணித்துளி கூட நிற்காமல் ஓடிவிட்டாரே?”

அந்தச் செவிலி கண்களில் நீர் வழியச் சொன்னாள்”நேற்று ஒரு விபத்தில் அவர் மகன் இறந்து விட்டான்.இறுதிச் சடங்குகள் இன்று செய்து கொண்டிருந்த போது இங்கிருந்து உங்கள் பையனின் அறுவை சிகிச்சை பற்றிச் சொல்லவும் உடனே வந்து விட்டார்.இப்போது போய்த்தான் அவர் சடங்குகளை முடிக்க வேண்டும்”

வாழ்க்கையில் நாம் இப்படித்தான் நமக்குமே மட்டுமே பிரச்சினைகள் இருப்பது போல் நினைத்து மற்றவர்களின் பிரச்சினைகளை உணராமல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்

34 கருத்துகள்:

  1. //நமக்குமே மட்டுமே பிரச்சினைகள் இருப்பது போல் நினைத்து மற்றவர்களின் பிரச்சினைகளை உணராமல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.//
    சரியாய் சொன்னீர்கள்.எல்லோருமே தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பதால் மற்றவர்களைப்பற்றி நினைக்க மறந்துவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  2. மாந்தரில் தெய்வமாம்-அம்
    மருத்துவர் வாழ்க!

    அருமை!பித்தரே!
    நெஞ்சம் நெகிழ்ந்தது!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கருத்துடைய கதை.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் உணர வேண்டிய நல்ல பாடம் அய்யா! நன்று

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா
    அழகாகச் சொன்னீர்கள்.
    எப்போதும் நமக்கு நம் வாழ்க்கை மட்டுமே பெரிதாகத் தெரிகிறது..

    உணரும் விதமாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. அடுத்தவர்கள் பற்றியும் நினைக்க வேண்டும் என சொல்வது மெய்சிலிர்க்க வைக்கிறது தல...!!!

    பதிலளிநீக்கு
  7. நான் மும்பையில் இருப்பதால் அடிக்கடி உங்கள் பதிவுக்கு வர முடியலை தல, இங்கே தேர்தல் நடந்துட்டு இருக்கு [[மும்பையில்]] என் நண்பன் நிக்குறான் அதான் [[சிவசேனா]] கொஞ்சம் பிசியா இருக்கேன் சாரி...

    பதிலளிநீக்கு
  8. மருத்துவர் எடுத்த முடிவு மிகவும் சரியே .... பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ள ஒரு சிறுவனை காப்பாற்ற தன் கடமையை சற்று தள்ளி வைத்த அவர் பாராட்டுக்குரியவர்... வாசு

    பதிலளிநீக்கு
  9. மருத்துவர் எடுத்த முடிவு மிகவும் சரியே .... பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ள ஒரு சிறுவனை காப்பாற்ற தன் கடமையை சற்று தள்ளி வைத்த அவர் பாராட்டுக்குரியவர்... வாசு

    பதிலளிநீக்கு
  10. கலக்கல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. பிரச்னை என்று வரும்போது நம்மைப் பற்றியே சிந்திக்கிறோம் உண்மைதாங்க அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு.. மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்தது. உங்கள் தமிழில் ரசித்தேன்... இப்படி மருத்துவர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  13. நன்று!பிரச்சினை எல்லோருக்கும் ஏதோ ஒரு வடிவில் உண்டுதான்!!!!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா,
    நல்லதோர் தத்துவ கதையினை சொல்லியிருக்கிறீங்க.

    ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலு, ஆபத்தில் உதவுவதே மனித குலத்தின் சிறந்த இயல்பு என்பதனை உங்கள் கதை சொல்லி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்! ” பிரச்சினை யாருக்கு இல்லை? “ - சிந்திக்க வைக்கும் தலைப்பு. சிறப்பாய் அமைந்த சிறுகதை.

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு பகிர்வு. இப்படி எல்லாருமே கடமையுணர்வோடு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.....

    பதிலளிநீக்கு